தமிழ்ப் புனைவிலக்கியத்தில் தன்னுடைய தனித்துவமான நடைக்காகவும் மீபொருண்மை சித்திரிப்புக்காகவும் முக்கியமான எழுத்தாளராக லா.ச.ராமமிருதம் கருதப்படுகிறார். மலேசியச் சூழலில் லா.ச.ராமமிருதத்தின் மனமொழியும் சிந்தனையும் முயங்கும் எழுத்துநடை சார்ந்த பாதிப்பை எழுத்தாளர் சீ.முத்துசாமியின் எழுத்துகளில் காணலாம். அதைத் தவிர, லா.ச.ராமமிருதத்தின் எழுத்துகள் குறித்த வாசிப்பும், கலந்துரையாடலும் மலேசிய வாசகச்சூழலில் அதிகமும் இடம்பெறவில்லை. தமிழாசியா மாதந்தோறும் நடத்தி வரும் சிறுகதை…
Tag: தமிழாசியா
அசோகமித்திரனை அறிதல்
கலை என்பது குறியீடுகளின்வழி உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்புப்படுத்தும் முறை என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். ஒலிக் குறியீடுகள் இசைக் கலை ஆகின்றன, உடல் அசைவின் குறியீடுகள் கூத்துக் கலையாகின்றன, காட்சிகளின் குறியீடுகள் ஓவியக் கலையாகின்றன. அதுபோலவே சொற்களின்/ மொழியின் குறியீடுகள் இலக்கியக் கலையாகின்றன. இப்படிச் சொற்கள் உணர்த்தும் குறியீடுகளைப் புரிந்து கொள்ளும்போது இலக்கியம் நம் வசப்படுகிறது. இலக்கியக்…
புதுமைப்பித்தனின் மூன்று சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்
சிறுகதை என்பது ஒரு கலை வடிவம். அதன் எளிமையும் வாசிக்க எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் பலரையும் அதன்பால் ஈர்க்கிறது. இச்சூழலில் மொழியால் ஆன அக்கலை வடிவத்தை முழுமையாகச் சென்றடைகிறோமா என்பது புதிய வாசகர்களிடம் எப்போதும் உள்ள பிரதானமான கேள்வி. சிறுகதை வாசிப்பு என்பது அதனுள் பூடகமாகச் சொல்லப்படும் கருத்தை உருவி எடுத்து ஒப்புவிப்பதாகவே மலேசியாவில் பழக்கமாகிவிட்ட சூழலில்…
கு. அழகிரிசாமியை வாசிக்கும் முறை
‘தமிழாசியா’ மாதம் ஓர் எழுத்தாளரை அறிமுகம் செய்துவைக்கும் வண்ணம் தொடர்ச்சியாகச் சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெவ்வேறு நிலையிலான இலக்கிய வாசிப்புப் பயிற்சி கொண்ட எட்டுப் பேர் பங்குகொண்டு வருகிறோம். ஆகஸ்ட் 19ஆம் திகதி நான்காவது சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், இருவர்…
சிறுகதை எழுதும் கலை
வல்லினம் மற்றும் தமிழாசியா இணைவில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இலக்கியச் சந்திப்புகள் குறித்து இலக்கிய வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வகையில் இம்மாதம் (10.7.2021) சனிக்கிழமை அ.பாண்டியன் மற்றும் ஶ்ரீகாந்தன் ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள் குறித்த விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்துக்கொண்டவர்களுக்கு அவர்கள் வாசித்து…