பயணம்

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 5

காலை உணவாக மீகூன் காத்திருந்தது. பாலாவின்  உறவினர் சுவையாகப் பிரட்டியிருந்தார். நிதானமாகக் கிளம்பினோம். அங்கிருந்து டேசாரு கடற்கரைக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. இம்முறை சிவா மகிழுந்தைச் செலுத்தியது இன்னும் நிதானத்தைக் கொடுத்தது.

Continue reading

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 4

விட்ட மழை தொடர்ந்தது. சாலையைப் பார்க்கச் சிரமமாக இருந்தது. தொலைவில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரிவது தெரிந்ததும் மகிழுந்தின் வேகத்தைக் குறைத்தேன். குறைக்க சிரமமாக இருந்தது . மழையில் வழவழப்பில் சக்கரங்கள் இழுத்துக்கொண்டுச் சென்று பின் மெதுவானது. முன்னே ஒரு ‘வியோஸ்’ ரக வண்டி பக்கத்து தடுப்பில் இடித்து நடுரோட்டில் தடுமாறி நின்று கொண்டிருந்தது. உதவ வழியில்லை. வேகத்தைச் சட்டென குறைப்பது ஆபத்து. பின்னால் வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இடிக்க நேரலாம். மகிழுந்தை தொடர்ந்து விட்டேன். பாலா வண்டியை நிறுத்துவது சிரமம்தானே என்றார் பரிதாபத்தோடு. சிவா ‘யார் சொன்னா முடியாதுன்னு…முடியும். அதுக்கு நவீன் ஜேம்ஸ் போண்டாக இருக்க வேண்டும் ‘ என்றார். நான் கண்களைக் கூர்மையாக்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். முன்பு பிரேக் பிடிக்க கொஞ்சம் தாமதித்திருந்தாலும் நடந்திருக்கும் அசம்பாவிதம் எனக்கு மட்டும்தானே தெரியும். வண்டியின் வேகமும் குறைந்திருந்தது.

Continue reading

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று- 3

இடையில் ஏற்பட்டிருந்த சாலை விபத்தால் சாலை நெரிசல் ஏற்பட்டிருந்தது. கண்களுக்கு எட்டியவரை வாகனங்கள். சில சமயம் கட்டுமரங்களைச் சுமந்து செல்லும் பெரிய கனவுந்துகளைக் கடக்கும் போது மெல்லிய பயம் ஏற்படவே செய்தது. அந்த மரங்களைத் தாங்கியுள்ள சங்கிலி அறுந்து மரங்கள் மகிழுந்தின் மேல் சரிந்தால்… நாங்களாகவே கற்பனை செய்து பயந்து கொண்டோம். கூட்டத்தோடு பயப்படுவது நன்றாகத்தான் இருந்தது.

Continue reading

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று – 2

வெளியில் மழை இருட்டிக்கொண்டிருந்தது. பயணம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிவாவும் பாலாவும் சினிமா தொடர்பாகப் பேசத்தொடங்கியிருந்தனர். நான் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு அவர்கள் பேச்சில் கலந்துகொள்ளும் அளவுக்கு சினிமா தொடர்பான பரிட்சயம் இல்லை. அவை பெரும்பாலும் ஜப்பான், ஈரான், மற்றும் சில ஐரோப்பிய திரைப்படங்கள் பற்றியவை.

Continue reading

ஓர் இலக்கியப் பயணம்…கொஞ்சம் கண்ணா பிண்ணாவென்று!

26 & 27 பிப்ரவரி நடக்கவிருந்த மலேசியா – சிங்கப்பூர் உறவுப்பால மாநாட்டிற்கு வெள்ளிக்கிழமையே ஜொகூர் செல்வதாகத் திட்டம். பாலமுருகன் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கே கோலாலம்பூர் வந்துவிட்டார். சிவாபெரியண்ணன் 3 மணிக்கு வேலையிலிருந்து திரும்புவதாகச் சொன்னார். அதற்குள் தயாஜியைப் பார்த்துவிட்டு கொஞ்சம் கதைக்கலாம் என நானும் பாலமுருகனும் திட்டமிட்டிருந்தோம்.

Continue reading