சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை.
வல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன. விருதென்பது எல்லா விமர்சனங்களையும் அழித்துவிட்டு வழங்கப்படும் ஒன்றல்ல. ஓர் ஆளுமையை அவர்மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுடன் அணுகி; அவற்றுடனேயே அவரை ஏற்றுக்கொண்டு கௌரவிப்பது. அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால், விருது பெறும் துறையில் ஒருவரது ஆளுமை மேம்பட்டு இருக்க வேண்டும். சை.பீர்முகம்மதுவின் ஆளுமை அத்தகையதுதான் என்பது எங்களின் பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.
Continue reading →