இன்று (14.04.2012) வல்லினம் குழுவினரின் சந்திப்பு கோலாலம்பூரில் நடைப்பெற்றது. நான் (நவீன்), சிவா பெரியண்ணன், பாலமுருகன், மணிமொழி, தயாஜி,யோகி, பூங்குழலி, சந்துரு, ராஜம் ரஞ்சனி, , நித்தியா, தினேஸ்வரி இவர்களோடு வல்லினம் இதழில் ஆலோசகர் மா.சண்முகசிவாவும் கலந்து கொண்டார். மலேசிய இளம் தலைமுறையினர் அடுத்தக்கட்டத்தை நோக்கி இலக்கியத்தையும், சிந்தனையையும் நகர்ந்த தேவையான பயிற்சிகள் வழங்க வேண்டியது பற்றி இன்றைய கலந்துரையாடல் அமைந்தது.
அதன் அடிப்படையில் மிக விரைவில் ‘வல்லினம் வகுப்புகள்’ மூலம் , தொடர்ந்து முக்கியமான அறிவுத்துறை சார்ந்த ஆளுமைகளை மலேசியாவுக்கு வரவழைத்து அவர்கள் அத்துறைகள் தொடர்பான வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. மொழியியல், மார்க்ஸியம், அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், உலகமயமாக்கல், தலித்தியம், பெண்ணியம் என பல்வேறு தலைப்புகள் இந்த வகுப்புகளும் கலந்துரையாடல்களும் நடக்கும்.
இதில் கலந்துகொள்ள ஒருவருக்கு 100 ரிங்கிட் என கட்டணம் விதிக்கப்படும். இதில் கலந்துகொள்பவர்கள் முன்னமே பதிவு செய்ய வேண்டும். 50 பேர் மட்டுமே ஒரு வகுப்பில் பங்கெடுக்க முடியும். வகுப்பு நடக்கும் இடம், திகதி போன்ற விபரங்கள் பெயரைப் பதிவு செய்த பின்பே வழங்கப்படும்.
முதல் வகுப்புக்கு அழைக்கப்படுபவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான். இவர் மொழியியல் தொடர்பாக வகுப்பு நடத்துவார்.
http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%81%E0%AE%83%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%2C_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8F.
எனும் தளத்தில் அவரின் நூல்களை வாசிக்கலாம். இதில் ‘மொழியும் இலக்கியமும்’ எனும் நூல் வழி மொழியியல் தொடர்பான அடிப்படை தகவல்களை வாசித்து அறியலாம்.
அதே போல வல்லினம் இதழுக்காக செய்த நேர்காணலையும் கீழ் கண்ட சுட்டியில் வாசிக்கலாம் :
http://www.vallinam.com.my/issue5/interview.html
உங்கள் வருகையை தெரிவிக்க valllinamm@gmail.com என்ற மின்னஞ்சலிலும் 0163194522 என்ற தொலைபேசி எண்ணிலும் உடனடியாகத் தெரிவிக்கலாம்.