மந்தமான இந்த அதிகாலை
ஒரு ஞாயிறு விடுமுறையை நினைவுப்படுத்தியதால்
நான் அதை அவ்வாறே நம்பத்தொடங்கினேன்
ஞாயிற்றுக்கிழமை என நம்பும் வேலைநாள்
தனக்கென சிறப்பாம்சங்களைக் கொண்டுள்ளது
அன்று நகரம் தாமதமாக விழிக்கிறது
அன்று பக்கத்து அறையில் குரட்டை சத்தம் கேட்பதில்லை
அன்று வீட்டு வாசல்கள் கார்கள் இல்லாமல் காலியாக இருக்கின்றன
அன்று நாளிதழ்களைப் புரட்டும் ஆயாசக் கண்கள் இல்லை
அன்று மெலிதான இசையோ முரட்டுத்தனமான சமையல் சலாவரிசைகளோ இல்லை
ஞாயிறென நம்பும் வேலைநாள்
ஞாயிற்றுக்கிழமையைவிட மந்தமாக உள்ளது
(Visited 229 times, 1 visits today)