இறப்புகள் குறித்து கற்பனை செய்வதில்
நமது காலம் கழிகிறது
நமது முதல் கற்பனை
நாம் இறப்பதிலிருந்து தொடங்குகிறது
அப்போது யாரெல்லாம் அழுவார்கள் என நினைத்துப்பார்க்கிறோம்
யாரெல்லாம் நம்முடன் இணைந்து இறக்க
ஆயர்த்தமாவார்கள் என்றும்
பின்னர் தத்தம் முயற்சியை
எவ்வளவு எளிதாக கைவிடுவார்கள் என்றும்
இயலாமையின் கோபத்தில்
எவ்வாறு மூர்ச்சையாவார்கள் என்றும்
கற்பனை செய்கிறோம்.
நமது அன்பிற்குரியவர்கள் மரணத்தை
கற்பனை செய்கிறோம்
முதலில் அம்மாவின் மரணம்
நம்மை அமைதியிழக்கச் செய்கிறது
அம்மாவின் மரணத்தில் அத்தனை ஒலியெழுப்பி அழுவது
கூச்சமளிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது
அன்புக்குறியவர்களின் மரணத்துக்குப் பின்
ஏற்படப்போகும் தனிமையின் பயத்தை
தத்துவங்கள் கொண்டு நிரப்பும் போது
குழந்தைகளின் மரணம் குறித்த
கற்பனை குறுக்கிடுகிறது.
மற்றெதையும் போலால்லாத
நமது குழந்தைகளின் மரணம் குறித்த கற்பனை
கற்பனை போல இருப்பதில்லை
ஒரு நீண்ட அழுகை நிறுத்தப்படுவது மட்டுமே
அங்கு நிகழ்கிறது
தன் மரணத்தைப் பற்றி
ஒருதரம் கூட கற்பனை செய்யாத
குழந்தையின் மரணம் குறித்த
உக்கிரமான நமது கற்பனை
அத்தனை உறவுகளின் மரணமும்
சாதாரணமாகிவிடுகின்றது.
சாதாரணமாகிவிட்ட மரணங்கள் குறித்து
நாம் பேச தயங்குகிறோம்
அதன் அறிகுறிகளைக் கண்டு அஞ்சுகிறோம்
இதற்குமுன் அறிமுகமாகாத ஒரு பழைய சாலை போல
மரணத்தை வியந்து நின்று பார்க்கிறோம்
பின்னர் கற்பனையில்
அச்சாலை இருளுக்குள்
மீண்டும் மீண்டும் பயணிக்கிறோம்.
இறப்புகள் குறித்து கற்பனை செய்வதில்
நமது காலம் கழிகிறது
நமது முதல் கற்பனை
நாம் இறப்பதிலிருந்து தொடங்குகிறது
அப்போது யாரெல்லாம் அழுவார்கள் என நினைத்துப்பார்க்கிறோம்
யாரெல்லாம் நம்முடன் இணைந்து இறக்க
ஆயர்த்தமாவார்கள் என்றும்
பின்னர் தத்தம் முயற்சியை
எவ்வளவு எளிதாக கைவிடுவார்கள் என்றும்
இயலாமையின் கோபத்தில்
எவ்வாறு மூர்ச்சையாவார்கள் என்றும்
கற்பனை செய்கிறோம்.
நமது அன்பிற்குரியவர்கள் மரணத்தை
கற்பனை செய்கிறோம்
முதலில் அம்மாவின் மரணம்
நம்மை அமைதியிழக்கச் செய்கிறது
அம்மாவின் மரணத்தில் அத்தனை ஒலியெழுப்பி அழுவது
கூச்சமளிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது
அன்புக்குறியவர்களின் மரணத்துக்குப் பின்
ஏற்படப்போகும் தனிமையின் பயத்தை
தத்துவங்கள் கொண்டு நிரப்பும் போது
குழந்தைகளின் மரணம் குறித்த
கற்பனை குறுக்கிடுகிறது.
மற்றெதையும் போலால்லாத
நமது குழந்தைகளின் மரணம் குறித்த கற்பனை
கற்பனை போல இருப்பதில்லை
ஒரு நீண்ட அழுகை நிறுத்தப்படுவது மட்டுமே
அங்கு நிகழ்கிறது
தன் மரணத்தைப் பற்றி
ஒருதரம் கூட கற்பனை செய்யாத
குழந்தையின் மரணம் குறித்த
உக்கிரமான நமது கற்பனை
அத்தனை உறவுகளின் மரணமும்
சாதாரணமாகிவிடுகின்றது.
சாதாரணமாகிவிட்ட மரணங்கள் குறித்து
நாம் பேச தயங்குகிறோம்
அதன் அறிகுறிகளைக் கண்டு அஞ்சுகிறோம்
இதற்குமுன் அறிமுகமாகாத ஒரு பழைய சாலை போல
மரணத்தை வியந்து நின்று பார்க்கிறோம்
பின்னர் கற்பனையில்
அச்சாலை இருளுக்குள்
மீண்டும் மீண்டும் பயணிக்கிறோம்.