ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 5

Borobudur ஜாவகத் தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நி002னைவுச் சின்னம் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. மகாயானம் என்பது என்னவென்று பிறகு விளக்குகிறேன். அதற்கு முன் இந்த பௌத்த சின்னத்தின் பூகோல அமைப்பைப் பற்றி  முதலில் சொல்ல வேண்டியுள்ளது.

இது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது. இவை, 2672 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட கற்சுவர்களாலும், 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள இருந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன. (தகவல் மேல் பார்வை: விக்கிபீடியா)

001 copy14 ஆம் நூற்றாண்டில், ஜாவாவின் பௌத்த, இந்து அரசுகள் வீழ்ச்சியுற்று,  இஸ்லாம் தலையெடுத்ததோடு போரோபுதூர் கைவிடப்பட்டதாக வழிகாட்டிக் கூறினார். அதன் பின்னர் 1814 ஆம் ஆண்டில் ஜாவாவின் பிரித்தானிய ஆட்சியாளராக இருந்த Thomas Raffles -ல் கண்டுப்பிடிக்கப்பட்டு சரித்திர புகழ்பெற்ற தளமாகவும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த நினைவுச்சின்னம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலெல்லாம் Borobudur  கீழ் தளத்திலேயே கிடைக்கின்றன.

தகவல்களை எங்கு வேண்டுமானாலும் திரட்டிக்கொள்ளலாம் என சூரிய உதயத்003தில் Borobudur  மிளிரும் அழகை இரசிக்கத்தொடங்கினோம். நான் புகைப்பட நிபுணன் எல்லாம் இல்லை. அதற்கான எவ்வித அடிப்படை பயிற்சியும் பெறவில்லை. ஆனால் படம்பிடிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. கடந்த ஆண்டு தொடக்கத்தில் மணிமொழி ஒரு காமிரா வாங்கி கொடுத்திருந்தார். EOS 600 D (Canon) வகையைச் சார்ந்தது. கொஞ்சம் வழிகாட்டி நூல்களைப் படித்து அதை இயக்கக் கற்றிருந்தபடியால் அந்த இடத்தை காமிராவில் பதிவு செய்ய ஆர்வம் துள்ளிக்கொண்டிருந்தது. குறிப்பாக சூரியனின் நகர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்வது சுவாரசியம்.

005புத்தர் பிறந்தது இமயமலை அடிவாரத்திற்கு அருகில் தெராய் தாழ்வுப் பகுதிகளில் என நம்பப்படுகிறது. இது இன்றைய நேபாளத்தின் உட்புற எல்லைகளைத் தொட்டதுபோல உள்ளது.  சித்தார்த்த கௌதமர் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் ‘ஞானோதயம் பெற்ற ஒருவர்’ எனப்பொருள்பட புத்தர் என அழைக்கப்பட்டார். மரபு சார்ந்த மூல நூல்களின் கருத்துப்படி , புத்தரும் அவர் உறவினர்களும் சத்ரியர்கள் என சொல்லப்படுகிறது. ஆனாலும் சாக்கிய மக்களிடையே (அப்பகுதியில் வாழ்ந்த மக்கள்) சாதியப் பாகுபாட்டைக் காட்டும் வேறு அடையாளங்கள் இல்லை என்பது ஆய்வாளர்கள் கூறும் முடிவு.
புத்தரின் இன்றைய தோற்றத்தின் மேல் பலருக்கும் ஒரு கிரக்கம் உண்டு(எனக்கும்தான்). அந்த அமைதியை தங்களுள் நிரப்ப பலரும் ஆவல் கொள்கின்றனர். புத்தரின் தோற்றத்தில் மயங்குபவர்கள் அதன் வரலாறை எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளனர் என்பது புரியவில்லை.

எங்கள் வழிகாட்டி சொன்ன சில வரலாற்று தகவல்கள் எனக்கு உடன்பாடானதாக இல்லாவிட்டாலும் மௌனமாகத்தான் இருந்தேன். இரண்டு வருடங்களில் எனக்குள் நிகழ்ந்த மாற்றம்தான் இது.  வரலாறு தொடர்பான விவாதங்களைத் தவிர்க்கவே முயல்கிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, பொது வரலாற்றைத் தாண்டிய உண்மையை அறிய பலரும் இங்கு ஆர்வமாய் இருப்பதில்லை. வரலாறுக்குப் பின் உள்ள வரலாறு சிக்கலானது. அரசியல்வயப்பட்டது. அதை அறிவது யாரின் முன் நம்பிக்கைகளையும் உடைத்துப் போடலாம். இரண்டாவது, ஒரு வரலாற்றின் வெவ்வேறு பகுதிகளைப் பேச மிகப்பெரிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன. எந்த எழுதப்பட்ட வரலாறையும் மறுத்து மற்றுமொரு மாற்றுவரலாறு உருபெரும் சூழலில் ஒரு வரலாற்றின் வாசகனாக மட்டுமே இருக்கும் நான் கருத்து சொல்வது அபத்தம்.

பூட்டு

பூட்டு

மிகச் சிலரிடம் மட்டுமே மாற்று வரலாற்றின் சில அறியத்தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது. அது இருவழி தொடர்பாக இருக்கும் பட்சத்தில் தேடல் அதிக்கரிக்கிறது. வரலாற்றின் தேடல் முடிவுறுவதில்லை. ஆனால் அது முந்தைய மாயைகளை அகற்றி சிந்தனைகளை கூர்மை செய்கிறது. Borobudur ல் இருந்த சில மணித்துளிகள் என்னால் அவ்விடத்தின் அழகை மட்டுமே இரசிக்க முடிந்தது. எவ்வித வரலாறையும் அணுகிச்செல்ல தோன்றவில்லை. இந்தக் கோவிலும் puzzle முறையில் அடுக்கப்பட்ட கற்களையும் அதற்கான பூட்டையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட கல்லுக்கு வளையம் பொறுத்தியுள்ளனர். அந்தக் கல்லை அகற்றினால் மொத்த தரையையும் கலற்றிவிடமுடியுமாம்.

வரலாற்றில் முதல்நிலை தகவல் (primary sources) முதன்மைச் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன. இதனைச் சமகாலச் சான்று எனலாம்.வரலாறு எழுதுவோர் முதன்மையான சான்றுகளின் அடிப்படையிலேயே எழுதுகின்றனர். முதன்மையான சான்று என்பது வரலாறு எழுதப்படும் காலத்திய சான்று. தொல்பொருள், கல்வெட்டு, நாணயம், இலக்கியம் என்பனவற்றிலிருந்து இவை பெறப்படுகின்றன. அதே போல முதலாம் நிலை மூலங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளையோ, கருத்துக்களையோ, மதிப்பீடுகளையோ முன்வைக்கும் ஆவணங்கள் இரண்டாம் நிலை வரலாறு. Borobudur குறித்த தகவல்கள் அனைத்தும் பொதுவாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் நான் அதன் பழமையை உள்வாங்க மட்டுமே அவகாசம் எடுத்துக்கொண்டேன்.

பௌத்தம் எனும் நீண்ட நகர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் குறிப்பிட்ட வகையின் தொன்மையான காட்சியாக சாட்சியாக அவ்விடம் இருந்தது. அது  ஓர் அனுபவம். பௌத்தம் குறித்தும் கொஞ்சம் விரிவாகவே இவ்விடத்தில் பேச வேண்டியுள்ளது. அது அடுத்து…

தொடரும்

(Visited 127 times, 1 visits today)

4 thoughts on “ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 5

  1. பல வரலாற்றுச் செய்திகள் பெரும்பாலும் புனைவுகளே.. சமய புராணக்கதைகள்போல். ஒரு பொருளை வைத்து, இது இப்படித்தான் இருந்திருக்கும் என்கிற ஆருடம் பெருங்கதைகளாக விரிவடைகிறது. ஆய்வு செய்கிறவரின் மன குண இன நி்லையும் இதில் சேர்த்தி.
    ஆனாலும் சாட்சியாக காட்சிகள் இருக்கின்ற பட்சத்தில் அவ்வளவு எளிதாக `இல்லை, இருக்கமுடியாது’ என்று சொல்வது அபத்தமாகவே கொள்ளப்படும்.
    அடிக்கவந்தாலும் வருவார்கள். பணியிடத்திலும் வேட்டு வைக்கப்படலாம். பார்த்து செய்யுங்களேன்.!! :))

  2. அடுத்த இடம் அங்கோர்வாட் ஆக இருக்கட்டும். வாழ்த்துகள். நிச்சயம் பேருவகை கொள்வீர்கள்

  3. இன்னொரு சந்தேகம். இந்தோனிசியாவின் உணவுகளை எப்படித்தான் சாப்பிட்டீர்கள்? நான் அங்கிருந்த நான்கு நாட்களிலும், இரவு பகல் பாராமல்.. roti bakar with kaya butter தான். :(( செம டென்ஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *