ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 6

005மகாயனம் பற்றி கூறுவதகாச் சொல்லியிருந்தேன் அல்லவா? அதற்கு முன் அடிப்படையான சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். புத்தர் தனக்கு வாரிசு எவரையும் நியமிக்கவில்லை. எனவே அவர் மரணத்துக்குப் பின் மத்திய அதிகாரக் குழு எதுவும் இல்லை என்பதால் இருவகையான குழுக்கள் உருவாயின. ஒரு குழுவினர் ஸ்தவிரர் . மற்றோர் குழு மகா சங்கிகள். இந்த இரு குழுவும் காலப்போக்கில் பல சிறு குழுக்களாகச் சிதறுண்டன. ஸ்தவிரர் பிரிவில் தோன்றிய ‘தெரவாத’த்தைத் தவிர மற்றவை அழிந்தன. அழிந்த இந்த இயக்கங்கள் தங்கள் மரபை விட்டுச்சென்றன. இந்தப் புதிய இயக்கம் ‘மகாயனம்’ என அழைக்கப்பட்டது. மகாயனம் என்றால் மாபெரும் வாகனம் என்று பொருள்.

இவ்வாறு காலப்போக்கில் பல இடைசெருகல்களால் ஆட்கொள்ளப்பட்ட பௌத்தத்தை பார்ப்பனம் எதிர்க்கொண்டவிதம்தான் கொடுமையானது. போலி வழிப்பாட்டு முறைகளையும், சிலைகளையும் வடித்து. புத்தனை சிலையாக்கி அவரைச் சுற்றி புராணங்கள் எழுப்பட்டன. புத்தரின் போர்க் குணத்தை மறைத்து அவரை ஒரு சாதுவாக்கினார்கள். ஒரு அவதாராமாகச் சித்தரித்தார்கள். உண்மையான புத்தர் குழி தோண்டிப் புதைக்கப்பட்டார்.

006ஜோக்ஜாவில் இருந்த பௌத்த அடையாளங்களில் இந்துமதத்தின் சாயமும் அப்பியிருக்கவே செய்தது.  கால ஓட்டத்தில் இதன் வரலாறு இன்னமும் திரிக்கப்பட்டு புதிய செய்தியைச் சொல்லலாம். அங்கோர் வாட் எனும் ஆலயம் தமிழக மன்னனால் கட்டப்பட்டதாகச் சொல்லும் அப்பட்டமான பொய் இதன் மீதும் திணிக்கப்படலாம். யார் தட்டிக்கேட்பது கேட்பது? கையில் ஊடகம் இருந்தால் பொய்யைச் சொல்ல என்ன தடை இருக்கப்போகிறது?

புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘எட்டாம் அறிவு’ எனும் முட்டாள் நிகழ்ச்சி மலேசியத் தமிழர்களிடம் இன்னும் எத்தனை எத்தனை கற்பனையான வரலாற்று திரிப்பை உண்டாக்கி மழுங்கடிக்கும் என்ற எண்ணம் ஏற்படும் போதெல்லாம் வருந்தாமல் இருக்க முடியவில்லைதான். குமரி கண்டம் என்றும் , இராமர் பாலம் என்றும் மீண்டும் மீண்டும் கிராபிக் உதவியுடன் ஆரியர்கள் இந்தியாவில் பூர்வீகக் குடியினர் என வரலாற்றை மாற்றியமைக்க முயலும் அதிகார மையங்களுக்குப் பதில் சொல்ல உண்மையான ஆய்வாளர்கள் பலர் இன்னமும் தங்கள் தரப்பை அறிவியல் பூர்வமாக முன்வைத்துக்கொண்டே இருக்கின்றனர். என்ன செய்வது தமிழர்களுக்குதான் உண்மையைவிட வெற்றுப்பெருமை என்றால் கொள்ளை விருப்பமாயிற்றே.

அறைக்கு வந்தவுடன் கால்கள் வலித்தன. விடுதியில் இருந்த மசாஜ் நிலையத்துக்கு நானும் தயாஜியும் சென்றோம். கால் வலிக்கு அப்போதைக்கு ஒரு நிவாராணி தேவைப்பட்டது. நிவாரணிக்கான தொகை 185,000.00.

தொடரும்

(Visited 164 times, 1 visits today)

3 thoughts on “ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 6

  1. அங்கோர் வாட் தகவல்கள் பொய்யாக இருக்கமுடியாது. காரணம் அங்குள்ள சுவரொன்றில் தமிழ் எழுத்துக்கள் சாட்சியாக உள்ளன. அவற்றைத் தமிழ் என்றும் தமிழக மன்னர் வந்தார் இந்தக் கோட்டையை நிறுவினார் என்று அப்படியே உள்ளது உள்ளபடி சொல்லாமல், நம் நாடு (மலேசியா) போல் எதாவது கட்டுக்கதைகளைத் தயாரித்து வரலாற்றை மாற்றியிருக்கலாமே.. ஏன் செய்யவில்லை.? ஆட்சி இந்துக்கள் அல்லாதாரின் கைகளிலேதானே இருக்கின்றது.இது தமிழர்களுடையது என்று பொய் சொல்லி பாதுகாக்கவேண்டிய அவசியம் இருக்க காரணம் என்னவாக இருக்கும்.? பயணிகளில் கூட அதிகம் இந்துக்கள்/தமிழர்கள் இல்லையே. பெரும்பாலும் ஐரோப்பியர்கள். யோசித்துப்பாருங்கள்.

    மேலும் ஜோக்ஜாகர்த்தாவிலும், ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தவர்கள் எல்லோரும் இந்துக்கள். இந்தியாவில் இருந்து வந்தவர்கள். மூதாதையார்களின் உறவுகள் பலர் இன்னமும் இந்தியாவில் இருப்பதாகவும், தொடர்பு அற்றநிலையில் இருப்பதால், அவர்கள் யாரென்று தெரியாதென்றும் சொன்னார்களே பயணவழிகாட்டிகள். நெட் கதைகள் புனைவுகளாக இருக்கலாம். விவசாயிகள், கூலியாட்கள் என வழிவழியாக செவிவழி கேள்விப்பட்ட விவரங்களை நம்மோடு பகிர்கின்ற போது, பூரிப்பாகவே இருக்கின்றது. ஆனால் கம்போடியா போல் தமிழர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், இந்துக்கள் என்றே சேர்த்துக்கொண்டார்கள்.

    கம்போடியாவில் கோட்டையின் உள்ளே பணிபுரிகின்ற அரசாங்க கம்பூச்சிய பௌத்த பயண வழிகாட்டி ஊழியர்கள், அங்கே வருகை புரிகின்ற பயணிகளுக்கு விளக்கம் கொடுக்கையில், தமிழக மன்னரால் அடி எடுத்து துவக்கப்பட்ட மன்னரின் கோட்டை இது (அங்கோர்வாட்) என்றே அறிமுகம் செய்துவைக்கின்றார்கள். அது ஆலயம் அல்ல. அரசரின் மாளிகை என்றே திட்டவட்டமாகச் சொல்கிறார்கள். மன்னர் ஆட்சி முடிவடைந்த காலகட்டத்தில், நல்லாட்சி புரிந்த அரசருக்கு மரியாதை செலுத்துவதற்காக அது வழிப்பாட்டுத்தலமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றே ஆருடம் சொல்கிறார்கள். அவர்கள் தெளிவாக இருப்பதாகவே படுகிறது. இந்தியாவில்தான் (தமிழகத்தில்) கடவுள் இங்கே நடந்தார். அங்கே ஊஞ்சல் ஆடினார், இங்கே நெருப்பில் புகுந்தார், இங்கே மனைவியின் மூக்கை அறுத்தார், இங்கே கைகளை வெட்டினார், இங்கே கழுத்தை அறுத்தார், இங்கே கண்களை நோண்டினார்… என்கிற கேங்ஸ்டர் குண்டர் கும்பல் கதைகளையெல்லாம் சொல்லி குலைநடுங்க வைப்பார்கள். :(((

  2. நீங்கள் சொல்வது போல, சாட்சியாக உள்ள தமிழ் எழுத்துகளின் ஆதாரம் என்ன? அதை ஒட்டிய ஆய்வுகள் இருக்கின்றனவா? பயணவழிக்காட்டிகள் சொன்னார்கள் என்றெல்லாம் நாம் சொல்ல முடியாது. அவர்கள் ஆய்வாளர்கள் அல்ல. அவ்வாறு அந்த கல்வெட்டுகள் தொடர்பான ஆய்வுகள் இருந்தால் அதுகுறித்து விளக்குங்கள் விஜயா. அங்கிருந்த அரசன் இந்து மதத்தை தழுவி இருக்கலாம். தமிழர்கள் அந்தக் கோவிலை கட்டினார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டா என்பதே நமது அடிப்படையான சந்தேகம்.

  3. அவ்வாறு அந்த கல்வெட்டுகள் தொடர்பான ஆய்வுகள் இருந்தால் அதுகுறித்து விளக்குங்கள் விஜயா. // இல்லை. 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *