தொடர்ந்து எழுத்தும் வாழ்வும் கட்டுரைகளைப் படித்துக்கொண்டே வருகிறேன். என் மனதில் ஐயா ரெங்காசாமியும் உங்களையும் கடந்து ஐயா மருத்துவர் சண்முகசிவா முன்னிலையில் வந்து நிற்கிறார். உங்களை சுற்றி யார் யார் இருந்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இருக்க வேண்டியவர் உங்கள் பக்கத்திலேயே இருந்திருக்கிறார் ஒரு நல்ல வழிகாட்டியாக. இந்த கட்டுரைகளைப் படிக்கும்போது எனக்கு ஐயா மருத்துவர் சண்முகசிவா மீதான மரியாதை மேலும் கூடுகிறது. நன்றி.
Gangadurai Ganesan
———————————-
ரெங்கசாமியுடன் உங்களைப்பற்றியும் எழுதுறீர்கள். இதை எவ்வகை கட்டுரை என வகைப்படுத்துவது என தெரியல. ஆனால் நடை நல்லா இருக்கு.
மேகநாதன்
———————————-
மருத்துவர் சண்முகசிவா அவர்களை ஆஸ்ட்ரோ மூலம் தெரியும். உங்கள் எழுத்தின் மூலம் அவரது மதிப்பு உயர்கிறது. உங்களுக்குக் கிடைக்கும் பாராட்டெல்லாம் அவரைச் சேரும்.
விமலன்
———————————-
வாழ்த்துகள்! தொடர்க. சண்முகசிவா எவ்வளவு அற்புதமான மனிதர்.
ஶ்ரீ கங்காதரன்
———————————-
MIKAVUM SIRANTA PATIVU. TODARNTU VAASIKKIREN. SHANMUGA SIVA @ RENGASAMY REALY GREAT.
THINA
———————————-
கங்கா நீங்கள் வாசிப்பதில் மகிழ்ச்சி. எனது முந்தைய தொடர்களைவிட இதை வாசிப்பவர் எண்ணிக்கை அதிகம். காரணம் புரியவில்லை. கடிதங்கள் வருகின்றன. நீங்கள் நினைப்பது உண்மை. சண்முகசிவா இல்லாவிட்டால் நான் அடையாளம் தெரியாமல் போயிருப்பேன். அன்பின் மூலம் என்னை நிதானப்படுத்தியவர் அவர். விமலன்! உண்மை எனக்கு கிடைக்கும் கிடைக்கின்ற பாராட்டுகள் அனைத்தும் அவரையே சேரும். நண்பர்களுக்கு நன்றி.
நவீன்