மின்கலம் தீர்ந்துவிட்ட மடிக்கணினியை
வேறெதுவும் செய்யத்தோன்றாமல்
வலதுபுறம் திரும்பி
சன்னலைப்பார்க்கிறேன்.
இரண்டு தலைகள் நுழையும் அளவில் வானம்.
ஒரு பறவை இந்த மூலையில் தொடங்கி
அங்கே சென்று மறையும் வரை
இறக்கையைச் சிலதரம் அசைத்தது.
மின்கலம் தீர்ந்த மடிக்கணினியை
ஓரிருதரம் மூடி மூடி திறந்தேன்.
(Visited 277 times, 1 visits today)