கவிதை : ஆயுதம் ஏந்தாத வீரன்

1நீங்கள் அன்பு செய்ய முடிவெடுத்தப்பின்
ஆயுதங்கள் ஏந்தாத வீரனாக
உங்களை
கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

ஆயுதம் ஏந்தாத வீரன்
பாய்ந்துவரும் கணைகளை தடுப்பானேயன்றி
தாக்கமாட்டான்

ஆயுதம் ஏந்தாத வீரன்
கவசங்களைத் தயாரிக்க மட்டுமே
காலத்தைச் செலவிடுவான்

ஆயுதம் ஏந்தாத வீரன்
தீண்டிவிடும் காயங்களின் இரத்தத்தில்
ரோஜாமலரை ஓவியமாக்குவான்

ஆயுதம் ஏந்தாத வீரன்
கண்கள் வியர்க்கும் என நம்பவைத்து
குற்ற உணர்ச்சியிலிருந்து எதிரியைப் பாதுகாப்பான்

ஆயுதம் ஏந்தாத வீரன்
ஒரு கொலையை
தற்கொலையாக வடிவமைப்பான்.

(Visited 948 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *