6.11.2015 மாலையில் வல்லினம் நண்பர்களுடன் சிங்கையில் இருப்பேன். Swissotel the Stamford தங்கும் விடுதியில் ஏற்பாட்டாளர்களால் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நிமிடத்தையும் விரையம் செய்யாமல் மலேசிய – சிங்கை நண்பர்களுடன் இந்தச் சிங்கை பயணத்தில் இருக்க விரும்புகிறேன்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா
7.11.2015ல் ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில்’ (Singapore Writers Festival) கலந்துகொள்ள இம்முறை மலேசியாவிலிருந்து நானும் அ.பாண்டியனும் அழைக்கப்பட்டுள்ளோம். ‘இலக்கியம் வழி தேசிய அடையாளத்தை உருவாக்குவது’ என்ற கருத்தரங்கில் பேசுகிறோம். இந்த நிகழ்ச்சி நவம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை, தி ஆர்ட்ஸ் ஹவுஸில் (TAH, U.S. Embassy Screening Room ) காலை 11.30 -லிருந்து பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் எங்களுடன் சிங்கை எழுத்தாளர்கள் செல்வா, நெப்போலியன் பேசுகின்றனர்.
முழு விபரங்களுக்கு : https://www.singaporewritersfestival.com/nacswf/nacswf/programme-listing/festival-events/CREATING-NATIONAL-IDENTITY-THROUGH-LITERATURE.html
இந்தச் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கலந்துகொள்கின்றனர்.
சிங்கப்பூர் வாசகர் வட்ட நிகழ்ச்சி – வல்லினம்
அன்று மாலை 5.30 மணிக்கு வல்லினம் பதிப்பகத்தின் புதிய நூல்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுகிறது. இந்நிகழ்ச்சியை சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்துள்ளது. 394 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்க கட்டடத்தின் கீழ்த்தளத்தில் நிகழ்ச்சி நடைபெறும். என்னுடன் வல்லினம் குழுவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அ.பாண்டியன், பூங்குழலி வீரன் , தயாஜி , ஸ்ரீதர் ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்கிறார். வல்லினத்தில் இவ்வருடம் வெளிவந்த நான்கு நூல்களுடன் முன்னைய பதிப்புகளையும் வாசகர்கள் கழிவு விலையில் ‘சிங்கப்பூர் வாசகர் வட்ட’ நிகழ்வில் பெற்றுக்கொள்ளலாம்.
நூல் குறித்த பார்வைகள் சிங்கை எழுத்தாளர்களால் முன்வைக்கப்படும். நூல் வெளியீடு இல்லை. கலந்துரையாடல் மட்டுமே. எனவே ஒருநூலை எத்தனை டாலரில் பெறுவது என்ற குழப்பமெல்லாம் இல்லாமல் நண்பர்கள் கலந்துகொள்ள அழைக்கிறேன். வாசிப்பது கலந்துரையாடுவதுமாக நிகழ்ச்சியை ஆரோக்கியமாக நகர்த்துவோம்.
ம.நவீன் – ‘மண்டை ஓடி’ (சிறுகதை நூல்) குறித்து – இராம கண்ணபிரான்
விஜயலட்சுமி – ‘துணைக்கால்’ – (கட்டுரைத்தொகுப்பு) – சித்ரா ரமேஷ்
அ.பாண்டியன் – ‘அவர்கள் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ (கட்டுரைகள்) – எம்.கே.குமார்
தயாஜி – ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ (பத்திகள்) – ஷாநவாஸ்
பூலாவ் உபின்
8.11.2015 – மறுநாள் பூலாவ் உபின் (pulau ubin) செல்லத் திட்டம். சிங்கை எழுத்தாளர் லதா அந்தப்பகுதியைத் தளமாகக் கொண்டு எழுதிய கதை ஒன்று உள்ளது. http://vallinam.com.my/version2/?p=2185 . அன்று இரவு மலேசியா திரும்புகிறோம். நண்பர்களுடனான பயணம் சோர்வை ஒருபோதும் தருவதில்லை.