போயாக் : கடிதம் 3

10-fakta-menarik-mengenai-buayaஅன்புள்ள நவீன், நலம்தானே? நேற்று காலை உணவின்போது Netflixஇல் “Black Mirror” என்ற தொடரின் Crocodile பாகத்தை பார்த்தேன். உடனடியாக போயாக் நினைவில் எழுந்தது. அக்கதையிலும் மைய பாத்திரங்களாக இரண்டு பெண்கள். அறிவியல் மிகுபுனைவுக் கதைகளை கொண்ட இத்தொடரின் இந்தக் கதையில் கண் சாட்சியற்ற ஒருநிகழ்வு உலகியல் தளத்தில் நடைபெற சாத்தியமேயில்லை என்பதை சொல்முறையின் புறவய தோற்றத்தில் நிறுவி விடுகிறது. மேலாக உட்குறிப்பில் எல்லைகளை மீறும் முதலைகளின் உலகில்சாட்சியாக நிற்க்கும் ஒன்றுமறியாத பரிசோதனைப் பன்றி குட்டிகளின் நிலை என்ன என்பதைப் பற்றியும் பேசுகிறது.

முதலைகளின் உலகின் மீதூரும் ஓராங் ஊத்தான் இக்கரைக்கும் அக்கரைக்கும் தொழில் நிமித்தமாகவே தாவிக் கொண்டிருப்பதைப்போல நிலம் மாறி பணம் ஈட்டும் இன்றைய மனித யதார்த்தத்தின் ஒவ்வாமைகளை “போயாக்” பேசுவதாக தோன்றியது. அந்நிய நிலமானாலும் தன் இருப்பை அத்தனை சங்கடங்களுக்கிடையிலும் நியாயப்படுத்துவதற்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள். அல்லது தேடி போய் தன்  துணையென ஒரு பெண்ணை நிறுவிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் வலிய  போய் சீமாவை தனக்கானவள் என கொள்கிறான். அந்த ரகசியம் பாதுகாக்கப்படவும் வேண்டும். குட்டு வெளிப்படுதல் நுரைமாளிகையை வெடிக்கச் செய்து கண்ணை உறுத்தும். தனிப் பேச்சு ஒன்றில் நாஞ்சில் நாடன் அவர்கள் “பொதுவா எல்லா ஆம்பளையும் தன் சாமானை கைல தூக்கிக்கிட்டே தான் திரிவான்” என்றார். அது நெற்றியிலேயே வெளிப்பட்டு  காட்டிக் கொடுப்பதை போன்றதொரு அவமானம் வேறில்லை. முதலையின் வாயில் இரையாவதற்கு இணையான மரண பயம்தான் அது. சீமா தண்ணீரை விட்டு கரைக்கு இவனை தேடி வந்ததற்கு சிம்பா ஏதோ ஒருவைகையில் சாட்சியாக இருப்பாள் தானே?
“போயாக்” எனக்கு பிடித்திருந்தது. வெளிப்படையான படிமங்கள் சற்று மிகுதியாகவே இருந்தாலும் கூட ரசிக்கத்தக்கதாகவே இருந்தது. தொன்மங்களுக்கே உரிய மர்மமும் புதுநிலத்தின் அபத்தங்கள் காட்டும் பயமும் அதுவே மறுபுறத்தில் நகைச்சுவையாகவும் வளர்வது கதையில் கைகூடி வந்திருந்தது. சில இடங்களில் தட்டையான நடைக்கு அவனின் மன எதிர்வினைகளே காரணமாகவும்அமைந்துவிட்டதாக தோன்றியது.

சில கேள்விகள் மட்டும் சுழன்றுக்கொண்டேயிருந்தது. தாய் வழிச் சமூகம் என்று அவர்களை அறிவிப்பதற்க்கான காரணம் என்ன? ஒரு பெண் விரும்பி உறவு கொண்டாலும் அவனையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் அச்சமூகத்தில் ஏன் வருகிறது. அவள் விருப்பமாகவே இருந்தாலும் அவள் அப்பாவின் தண்டனைக்கு உள்ளாகத்தான் வேண்டுமா? அவளின் நெருக்கத்தை அவன் தவிர்ப்பதற்க்கு அந்த பயம் தானே காரணம்? இல்லை தாய் வழிச் சமூகம் என்பது பெண்களை ஆண்கள் அதீத பாதுக்காப்புடன் அரவணைப்பதுதான் என்று ஆகிவிட்டதா?

சீமாவின் மீது அவனுக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்க்கு அவள் எப்பேற்பட்ட பேரழகி, ஏற்றி உடுத்திய கைலி தவிர்த்து, விவரித்திருந்தால் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ந்திருப்பேன் 🙂

நரேன்

சிறுகதை: போயாக்

(Visited 66 times, 1 visits today)