யாக்கை: விஜயலட்சுமி

உடலும் அதனுடன் சேர்ந்து உயிரும் இன்னொன்றுக்கு உணவாவதை ஈத்தனின் மரணமும் row-boat-boat-rowing-paddle-steering-girl-braidமகளின் தொழிலும் சொல்கிறது. கடலில் ஈத்தனின் உடல் மீன்களால் அனுமதியின்றி தின்னப்பட்டது. தன் மகள் ஆண்களால் தின்னபட்டுவிட்டாள் என்பதை புரிந்தவுடன் ஈத்தன் தன்னை கடலுக்கு இரையாக்குகிறான். இப்போது அவளுடன் புணர வந்தவன் தன்னையும் ஒரு உடல் தின்னி என்பதை உணரும்போது நிற்க முடியாமல் ஓடுகிறான்.

இது கதையோட gist.

நவீன் சுவாரசியமான கதை சொல்லி. வாசகனை அலுப்புட்டாமல் கதையின் எல்லைவரை கொண்டு செல்பவர். இக்கதையில் நுண்விபரனைகள் வாசகனை கதைக்குள் ஈர்த்து கொள்கிறது. விவரணைகள் ஒருகட்டம் தத்துவார்த்த பார்வையாக விரிந்து இயல்பாய் அமைகிறது.

நேர்கோட்டில் கதைசொல்லி முடிக்காமல்… நிகழ்காலம் உரையாடலாலும், இறந்தகாலம் கதையாகவும் பிரித்து சொல்லப்பட்டிருப்பது கூடுதல் ஈர்ப்பளிக்கிறது.

இதுவரை அவர்வெழுதியதில் best  கதையென்று பலரும் சொல்கிறார்கள். நவீனுடன் சில வருடம் தொடர் உரையாடலில் இருப்பவராக நான் நினைப்பது வேறு. அவர் இதைவிட best கொடுக்கக்கூடியவர். இன்னும் எதிர்பார்க்கிறேன்.

விஜயலட்சுமி

(Visited 63 times, 1 visits today)