மனசலாயோ : கடிதங்கள் 3

புனிதாதிரு.நவீனின் பயணக்கட்டுரை  மிகவும் உயிரோட்டமாக இருக்கும். அலங்காரச்சொற்கள் கிடையாது. ஜிகினா தூவல் கிடையாது. உள்ளதை உள்ளபடியே ஒரு திரைப்படமாக சலிப்புத்தட்டாமல்  வாசகரின் முன் வைத்து எழுதும் முறை மிகவும் வியக்கத்தக்கது. ஒரு வாசகரைப் கைப்பிடித்து  அழைத்துச்சென்று ஒவ்வொரு காட்சியை நேரடியாக பார்த்த அனுபவம் கிடைக்கும். அவரின் எழுத்துக்கள் ஓவ்வொன்றும் வாகனின் கண்கள் எனலாம். நாமே சென்று நேரடியாகப்பார்த்தாலும் இவ்வளவு  கூர்மையாக் கவனிப்போமா என்பது சந்தேகமே. சிகிச்சைச்சென்றும் அடங்கமாட்டாரா  இந்த சார்? காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் நடனமணியை போல கையில் கட்டிக்கொண்டே ஆடுகிறாரே எனக் குழப்பம் வந்தது.   ஆனால் கட்டுரைப்படிக்கப்படிக்க நான் சுயநலவாதியாக மாறிவிட்டேன். அவரின் எழுத்தைப் பார்வையாககொண்டு நானும் எல்லாக்காட்சிகளையும்  இரசிக்க ஆரம்பித்தேன் .

அவரின் பயணக்கட்டுரையில் நானும் பயணித்தேன்… சிகிச்சை நேரத்தில் கழுத்துவலியைப் பொருட்படுத்தாத அவர் செய்த சேட்டைகள் மிகவும் ஆஸீயமாக இருந்தது. அதிலும் சாரா என்ற  பெண்மணி நட்பு இக்கட்டுரைக்கு மிகப்பெரிய பலம் எனலாம். திரு.நவீனின்  இன்னொருப்பக்கத்தில் அலசல், காட்சி என்று கூறலாம். சாராவிற்கு வந்துள்ளச்சிக்கலை அவரிடம் நம்பிக்கையுடன் கூறும் போது, அறிவிரைப்பகிறுவதை விட்டுவிட்டு  தன்னைப்பற்றியும் ஒரு மனிதனின் தனி அடையாளம் என்பது அவரின் தொழில் காட்டுவதில்லை, நம்மில் இருந்து எதைப்பிரிக்க இயலாதோ அதுவே நம் அடையாளம் எனக்கூறியவிதம் எத்தனை ஆழமான உண்மை.

‘எந்தத் தருணத்திலும் நான் எழுதுவேன், என்னுள் உள்ள என்னை மாற்ற  முடியாது’ என்பது ஒரு எழுத்தாளின் மிதமிஞ்சியத்திமிர் எனலாம். ‘என் கரங்கள் இல்லாமல் போனாலும் என் மனத்தால் எழுதுவேன்.’ என படிக்கும்போதே என்  உடலிருந்து என் அங்கத்தைப்பிய்து எரிவதுப்போன்ற வலி ஏற்பட்டது. விழிகளும் ஈரமானது. சார், உங்கள் எழுத்தே உங்களுக்குக்கரங்களாக அமையும். வணிகம் என்பது ஒரு கலை அதில் கிடைக்கும் பணம் அதன் மையம் அல்ல  எத்தனை உண்மை தமிழிலில்  ஒரு கலைஞன் 100 பிரதியைப் பதிப்பகத்தில் கொடுத்துவிட்டு தேசமெங்கும் சுற்றித்திரிவான் அந்த உற்சாகம் விற்பனையாகும் நூலில் கிடையாது. ஓர் எழுத்தாளனுக்கு தான் யார் என்று தெரியும். ஓர் எழுத்தாளன் யாரை நம்பியும் எழுதவில்லை… தன்னுள் உள்ள மகிழ்ச்சியை மையாகக்கொண்டு எழுதுகிறான் என்பது தன்னப்பிக்கையின் உச்சம் எனலாம். மமதையும் என்றும்  கூறலாம். சாராவின் சிக்கல்கள் பலருக்கும் உண்டு. அதனைத்தெளிவுப்படுத்திய விதம்; உருக்கிக்கொண்டிருக்கும் பனிப்பாறையை தாமரைத்தண்டால் செதுக்கிய விதம் எளிமையானது, நுட்பமானது. உண்மையில் வெளிப்படும் கவித்துவமானது.

ஒரு விளம்பரத்தை அண்மையில் நான் படித்தேன். ஒரு பட்டறையில் விளம்பரம் (உன்னுள் உன்னைக்காணவேண்டுமா? பதிவுச்செய்யுங்கள் 900 வெள்ளி, முன் இருக்கையில் அமரவேண்டுமா விரையுங்கள் 1200 வெள்ளித்தந்து.  புத்தகங்கள் வேண்டுமா கட்டுங்கள் 1500)

திரு.நவீன் விளக்கம் இக்கட்டணங்களை விட விலைமதிபுள்ளவை, இலவசமாக கிடைக்கும் எதுவுமே நம் மனதில் இணைய இம்மியளவும் இடமில்லை. மதிப்பும் இல்லை. படிக்க நமக்கு நேரமுல்லை.இதுதான் நாம் சொல்லும் சோம்பல் மிகுந்த சாக்குப்போக்கு .

எழுத்துக்குள் ஓர் எழுத்து முத்திரை அதுதான் சாராவில் கடிதம். எத்தனை ஆண்டுகள் ஆனது ஓர் கடித்ததைப்படிக்க. தன் உணர்வுகளை ஓவியமாக வரைந்து பரிசு நிச்சயம் உணர்வு மிக்க ஓர் அன்பளிப்பு .

திரு.நவீனின் கட்டுரையில் நிச்சயம் ஓர் உணவு வகை கதாப்பாத்திரங்களாக அவதரிக்கும். காசியில் பாங், ஆட்டுப்பிரியாணி, இக்கட்டிரையில் சுந்தரிப்புட்டு. மசாஜ் நிபுணர் இதைக்கோழிக்கறியுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும், நான் டாக்டரிடம் கூறமாட்டேன் எனக்குக்கூறியும் பருப்புக்கறியில் உண்டதும்  திரு ஜெயமோகன் வீட்டில் கோழிக்கறியும், இடியப்பமும் உண்ணும்போது மருத்துவ விதிகளைக்கடைப்பிடிக்கவில்லை என்று தோன்றியது , இலக்கியத்தில் எல்லாவற்றிக்கும் இடம் உண்டு என்பதன் விளக்கம் இப்பொழுது விளக்கியது.

புள்ளினங்காள் எனும் பாடலை நான் அப்பொதுதான் பார்த்தேன்… மெய் சிலிர்த்துவிட்டது… ந.முத்துகுமாரின் இறுதிக்கவிதை இப்பாடல்தான் என்றதும் மனம் வலித்தது. அஷ்யக்குமாரின் நடிப்பு  பாடல்காட்சியில் மிகவும் சிறப்பாக இருந்தது. பார்வையாலே பறவைகளுக்குச் சரணாலயம் கொடுத்துள்ளார். கேரளாவாசிகள் மிகவும் தூய்மையானவர்கள் திரு.மோடியின் கழிவறை சுந்தத்தைப்பேணுவோம் உரையில் கேட்டுள்ளேன். இதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் திரு.நவீன். ஒவ்வொரு கட்டுரையிலும் தாய்மை எனும் உணர்வைச்செயலின் வழி காட்டியுள்ளார். காசியில் விதவைபெண்ணுக்குப்புடவை. இங்கு ஜெசி அம்மாவிற்கு காலணி. முதலின் திரு. நவீனை நான் ஓர் உலோபி என்று நினைத்தேன். செலவு செய்யமாட்டார் என்றே அவர் கட்டுரை காட்டியது. ஆனால் தேவை என்று வந்ததும் பணத்தைப்பொருட்படுத்தமாட்டார் என்று படிக்கப்படிக்க என் நினைப்பை மாற்றிக்கொண்டேன்.

குமாரி. பிரான்ஸ் அறிமுகமும் அவரின் ஆளுமைமிக்க உரையாடலும் நம்மை சிந்திக்கவைத்தது. பண்பாட்டை பேணாத ஒரு நாடு முன்னேற்றம் அடையாது என்பது மிகப்பெரிய உண்மை என்று தெரிந்தது.

ஜெயமோகன் சொன்னதுப்போல திரு. நவீன் மலேசியாவில் உதிர்த்த பெருநிகழ்வுதான்.

புனிதவதி

(Visited 268 times, 1 visits today)