தங்களின் மீண்டும் கேரளம் பயணக்கட்டுரையை வாசித்தேன். தொடக்கத்திலேயே கன்னங்களில் வலிக்க தொடங்கியது. முகம் விட்டு சிரித்து பல நாட்கள் ஆகிவிட்டதை உணர்ந்தேன். விமானத்தில் இடம் மாற்றிக்கொள்ளாமல் கறார் செய்த முதியவர் தொடங்கி, கரப்பான் பூச்சி கலவரம் மற்றும் கடல் உணவு கடையில் நடந்த ‘ருசி’ ஏமாற்றம் என தங்களுக்கே உரிய நகைச்சுவை கலாட்டாக்களோடு எழுதியுள்ளீர்கள் கட்டுரையை.
வழக்கம்போல சம்பவங்களை நேரில் பார்த்து அனுபவித்த உணர்வை தந்திருக்கிறது தங்களின் யுக்திமிகு எழுத்துநடை.
தங்களால் கேரளா மிக அருகில் தெரிகிறது. நினைத்தால் உடனே போய்வரலாம் என்ற உணர்வை தந்துள்ளீர்கள். அதற்கேற்ப தலைப்பு.
தங்களின் பரிந்துரைகளும் வழிகாட்டலும் கேரளாவுக்கு பயணிப்பவர்களுக்கு நிச்சயமாக உதவும்.
அடுத்து எங்கே? அங்கு எவன் மாட்டுவானோ தங்களை கடுப்பேத்த?
கலைசேகர், ஈப்போ
(Visited 102 times, 1 visits today)
