கடிதங்கள் 2: தலைமை ஆசிரியர் மன்றம்

தலைமையாசிரியர் மன்றமும் தமிழ்மொழி வீழ்ச்சியும்

நியாயமான மனதின் மனசாட்சியில் உறுத்தலை ஏற்படுத்த வாய்ப்புள்ள கேள்விகள்! பிழைப்புக்கு mail-message-latter-260nw-1067634980முன்பு அனைத்தையும் சரணடைய வைத்துவிட்டஒரு தலைமுறை ஆசிரியர் கூட்டம் இதனையும் எவ்வித எதிர்வினையுமின்றி கள்ள மௌனத்துடன் கடந்து போகலாம். சமூகநலன் சார்ந்த நியாயமான கேள்விகள் என்பதால் பொதுவெளிக்கு கொண்டு போவதே   சரி என்பது எனது அபிப்பிராயம்! அதிலும் இது நாம் புழங்குகிற மொழி என்னும் தளம் என்பதால் பொதுவெளிக்கு கொண்டு செல்கிற பொறுப்பும் வல்லினத்திற்கு உண்டு என்றே சொல்லலாம்!

எழுத்தாளர் சீ.முத்துசாமி

 

படுத்துக்கொண்டு மேலே காரித்துப்புவதை கேள்விப்பட்டுள்ளீர்களா? அதை திறம்பட செய்கிறீர்கள். மொத்தமாக தமிழ் மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளை மூட்டைக்கட்ட முனைப்புடன் இருக்கிறீர்கள். உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள். இந்த சமுதாயத்தைக் கூறுபோட வெளியில் இருந்து யாருமே வர வேண்டாம். இப்படி குற்றம் கண்டுப்பிடித்தே பேர் வாங்கும் உங்களை போன்ற புலவர்கள் போதும்.

மாணிக்கம்

 

வணக்கம். நலம் போற்றி. தங்களின் வாதத்தில் உண்மையிருப்பதில் மறுப்பதற்கில்லை. உங்கள் கட்டுரை அந்த மன்றத்தின் கீழான நிலைப்பாட்டை உறுதிசெய்கின்றது! அதிமேதாவிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு அறிஞர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கும் ஒளிந்துகொள்வதற்குமான ஓர் முன்னெடுப்பு இதுபோன்ற அர்த்தமற்ற இயக்கங்கள். இவர்களின் பொல்லாதச் சிந்தனைகளையும் திட்டங்களையும் களையெடுத்துத் தோலுரித்தால் ஒழிய எதிர்காலத்தில் இது போன்ற இழிவான செயலாற்றுவோரை ஒரு முடிவிற்குக் கொண்டுவர இயலும்.

உண்மையுடன்

தோழர் மகேசுவரன் கொலக்கன்.

 

வணக்கம் நவீன்.

தங்கள் கட்டுரையைப் படித்தேன். இதே ஆதங்கம், கோபம் எனக்குமுண்டு. கடந்த ஆண்டே இதைப் பற்றி தலைமையாசிரியர்கள் சிலரிடம் தர்க்கம் செய்திருக்கிறேன். இந்த ஆண்டும் இதே கதி. தமிழ்ப்பள்ளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் நிரலிகைகள் மலாய் மொழியில் இருப்பதும் வேதனையான ஒன்று. நான் செல்லும் பல நிகழ்ச்சிகளில் இப்படி இருப்பின் நான் கேட்பதுண்டு. பலர் காதில் இது விழுவதில்லை. தங்கள் கட்டுரையை தலைமையாசிரியர்கள் ஒரு குழுமத்தில் பகிர்ந்துள்ளேன். பார்ப்போம்.

முனியாண்டி ராஜ்

 

 

 

 

 

(Visited 160 times, 1 visits today)