பொருட்களையும் உயிர்களையும் தனதாக்கி கொள்வதே தன் அகங்காரத்தின் இயல்பு. பெரும்பாலான நேரங்களில் அதனால் விளையும் மதிப்பொன்றுமில்லை.
மாலிக்கின் ஆசையும் அத்தகையதே. பணமிருந்து அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒருவன். திறமைக்கு கிடைதத அங்கீகாரத்தை பொருட்படுத்தாமல் பணத்தேவையுடைய ஒருவன்.
இரண்டு தலைமுறை தாண்டி பச்சையம்மனின் மூக்குத்தி ஒளியை முத்து கண்டுவிட்டான்.
அறம் மீறப்படும் போதுதான் தரிசனம் கிடைக்குமா? பச்சையம்மனுக்கு அணுக்கமானவன் புற்றிலிருந்து விடுபட மஞ்சான் சிக்கி கொள்ளும் வாய்ப்பாக விதி அமைக்கப்பட்டதா?
ஏனோ மஞ்சான் மாட்டிக்கொண்டது கண்ணீரை வரவழைத்தது. தவிக்கும உயிரின் பதைபதைப்பு.
பாலுவிடம் தனக்கான மதிப்பை இழந்துவிட்டான் முத்து. விருப்பமின்மையுடன் முத்து செயல்பட்டாலும் கருவியான அவன் மாலிக்கிற்காக செயலை முடித்தான்.
முத்துவிற்கான நியாயம் பாலுவை சாரந்ததா? மஞ்சான் பிடிபட்டது தற்செயலா? அல்லது விதியின் விளையாட்டா?
“இப்போதுதான் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமெனத் தோன்றியது.” இதன் அர்த்தம் என்ன? எதற்காக சொல்லப்படுகிறது.
விலகிசென்ற நளினியும் விவாகரத்து செய்யப்பட்ட மாலிக்கின் மனைவியும் மனதை உறுத்துகிறார்கள்.
நிகழ்காலத்திலிருந்து பி்ன்சென்று மீண்டும் நிகழ்காலத்திற்கு வரும் கதை. பிடித்திருந்தது.
சரவணகுமார், திருச்சி