நேற்று ஃபிளோமினா எனும் புனைப்பெயரில் சிங்கப்பூர் Bras Basah Road அருகில் உள்ள ஒருவர் வெட்டிக்கதை அளந்ததைத் தொடர்ந்து அவர் யாரென்று கண்டுப்பிடிக்கப்பட்டது. கண்டுப்பிடிக்கப்பட்டது தெரிந்தவுடன் ஆள் ஓடிவிட்டார். இந்நிலையில் எனக்கு ‘ராஜூ’ போலி பெயரில் மற்றுமொரு மின்னஞ்சல் வந்தது. அதில் மிக முக்கியமானது என் எழுத்து தொடர்பானதல்ல. என் ஆசிரியர் தொழில் சம்பந்தப்பட்டது. அதில் நான் பள்ளிக்கூடத்தில் செய்த தவறுகளுக்காகப் பள்ளி (அரசாங்கத்தால்) மாற்றப்பட்டதாக இருந்தது. மிக விரைவில் அந்த ‘ரகசியம்’ அம்பலப்படுத்தப் படுமாம். நல்லது.
ஒரு விவாதத்தை எதிர்க்கொள்ள வக்கற்றவர்கள் இது போன்ற அவதூறுகள் பரப்புவது இயல்புதான். அதுவும் குறிப்பாக பெண்கள் விசயத்தில். அதுதானே சீக்கிரம் பரவும். போலி அடையாளத்துடன் வந்த அந்த பின்னூட்டம் மட்டும் அல்ல. இத்தகைய பிரச்சாரம் இந்த வட்டாரத்தில் சிலரால் செய்யப்படுவதை அறிவேன். இதில் விவாதம் செய்ய நான் விரும்பவில்லை. காரணம் இது மரியாதைக்குரியதாக நான் நினைக்கும் ஆசிரியர் தொழில் சம்பந்தப்பட்டது.
அந்த போலி அடையாளத்துடன் எழுத்தியவர் மிக விரைவில் வெறும் கதை அளக்காமல் ஆதாரத்துடன் நான் அரசாங்கத்தால் பள்ளி மாற்றப்பட்டதை நிரூபிக்க வேண்டும். அதே போல நான் பள்ளியில் தவறு செய்ததையும் நிரூபிக்க வேண்டும். இவை இரண்டையும் தன் சுய அடையாளத்துடன் நிரூபித்தால் அந்த நிமிடமே நான் என் வேலையைத் துறக்கத் தயார். அதோடு நேர்மைக்கு எதிரான எனது எல்லா நம்பிக்கைகளையும் அகற்றி இதோடு எழுதுவதையும் நிறுத்திக்கொள்கிறேன்.
ஏறத்தாள 1 1/2 ஆண்டுகள் நான் தொடர்ந்து அரசாங்கத்துக்கு விண்ணப்பம் செய்து பள்ளி மாறினேன். எவ்வகையான ஒழுங்கு நடவடிக்கையும் என் மீது எடுக்கப்பட்டதில்லை. அதற்கான எல்லா ஆதாரங்களும் அரசாங்க கடிதங்களும் என்னிடம் நகல் உள்ளது. அப்படி ஆதாரம் இல்லாமல் வெறும் அவதூறு மட்டும் செய்வதானால் செய்து கொள்ளலாம். அதற்கு என் தளம் இடம் தராது. எத்தனை கோழைகளிடம்தான் நானும் பதில் சொல்லிக்கொண்டிருப்பது.
மிகவும் வருத்தமாக இருக்கிறது நவீன். ஏறக்குறைய ஓராண்டுகளுக்கு முன் பின்நவீனத்துவ உரையாடலை முன்னெடுத்த போது என் ஒழுக்கம் அசிங்கப்படுத்தப்பட்ட அதே நிலைத்தான் இப்பொழுது இங்கும் நிகழ்ந்துள்ளது. இங்கு எந்தவித ஆரோக்கியமான விவாதத்திற்கும் தயார் இல்லாத கிசுகிசு பரப்பிகள்தான் அதிகம் இருக்கின்றனர் என்பதை நாம் உணர்வது நலம். உங்கள் எதிர்வினையின் வலிமையைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தொடர்ந்து இரண்டு வகையில்தான் எதிர்க்கொள்ள முற்படுவார்கள். 1. வன்முறை, 2. பெயரை நாறடித்தல். இது பாசிச அணுகுமுறை. பெரும்பாலும் கோழைகளின் வழிமுறை.
துணிச்சலாக தன் சுய அடையாளங்களை அம்பலப்படுத்திவிட்டு விமர்சனத்தை/அவதூறை முன்வைக்க தைரியம் உள்ளவர்கள் மட்டும் இங்குப் பேசவும். ஒளிந்துகொண்டு கிச்சிமுச்சி மூட்ட வேண்டாம். நன்றி.