கோ.முனியாண்டிக்கு ஒரு சின்ன விளக்கம்.

கோ.முனியாண்டியினின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். http://vallinam.com.my/navin/?p=900#more-900. கோ.முனியாண்டி சொல்லிக்கொள்வது போல 50 ஆண்டுகளாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் எதிர்வினை இது. 50 ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கும் ஒருவரால் எப்படி இத்தனை பலவீனமான எதிர்வினையை எழுத முடிகின்றது என்ற ஆச்சரியத்தோடுதான் இதை பிரசுரித்தேன். வசைகள். முறுக்கிய மொழி. உளரல்கள். பொய்கள்.

இதில் அவர் சொல்லியுள்ள சில குற்றச்சாட்டுகளுக்குச் சிறு விளக்கம் சொல்லலாம் என நினைக்கிறேன். முதலில் அவர் குற்றச்சாட்டுகளை மூன்றாகப் பிரிக்கலாம்.

முதலாவது, நான் அவர் நாவலை நுனிப்புல் மேய்ந்தேன் என்கிறார். நான் முந்தைய கட்டுரையில் சொல்லியது போல ‘ராமனின் நிறங்கள்’ நூலாக வந்தபின் நான் அதை இன்னமும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. ஆனால், அந்நாவல் அச்சாகும் முன் கையெழுத்துப்பிரதியாக இருந்த போதும் பின்னர் அதை தட்டச்சு செய்யப்பட்டப்பின் நானே வாசித்து பார்த்தபோதும் அந்தக் கொடுமையை இருமுறை வாசிக்க நேர்ந்தது. வல்லினம் பதிப்பகத்தில் வர அந்நாவல் ஏற்றதல்ல என முடிவெடுத்ததால் அதை எடிட் செய்ய அனுமதி கேட்டேன். இங்கு எடிட் என்பது எழுத்துப்பிழைப் பார்ப்பதல்ல. நாவலை செறிவாக்குவது. அப்பொறுப்பை யுவராஜனிடம் ஒப்படைத்தேன். அவரும் அதை முழு கவனத்துடன் செய்தார். அந்நாவலின் மையப்பாத்திரம் எவ்வித பின்புலமும் இல்லாமல் தொங்கிக்கொண்டிருப்பதை சொன்னார். மேலும் நாவலின் கதை பாதிக்குப் பின்புதான் தொடங்கியது. நாவலின் பல பகுதிகள் வெட்டப்பட்டன. இவை அனைத்தையும் உடனிருந்து கவனித்து செயல்பட்ட நான் நுனிப்புல் மேய்ந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன்.

இரண்டாவது, எனக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ‘இளம் கவிஞருக்கான’ விருது கிடைத்தது தொடர்பானது. இந்தப் பரிசை நேரடியாக மந்திரிபுசார் ‘காலிட் இப்ராஹிம்’ வழங்கினார் எனக் சொல்லியுள்ளார். அதை காலிட் இப்ராஹிம் வழங்கவில்லை. அவர் அந்நிகழ்ச்சிக்கு வரவும் இல்லை. ஒரு மலாய் கலைஞர் வழங்கினார். படங்கள் வல்லினத்தில் உண்டு. மேலும் இந்த விருது எந்த சிபாரிசிலும் கிடைக்கவில்லை. கோ.முனியாண்டி சிபாரிசு என்பார். வராத மந்திரி புசார் வந்தார் என்று சொல்வது போல. அதை அவரே நிரூபிக்கட்டும். எனக்கு சிபாரிசு செய்யும் அந்த அரசியல்வாதியை நானும் அறிய விரும்புகிறேன்.

மூன்றாவது பணம் தொடர்பானது. ஆமாம் நான் டைப் செய்வதற்கு 200 ரிங்கிட் கேட்டேன். வல்லினம் நூல்களுக்குத் தட்டச்சு செய்பவர் 1 பக்கத்துக்கு 3 ரிங்கிட் வாங்குவார். கோ.முனியாண்டியின் நாவல் ஏறக்குறைய 70  பக்கங்கள் (A4) வரலாம் என கணித்ததால் பணம் கேட்டேன். மேலும் நாவலை எடிட் செய்வது ஓர் உழைப்பு. அந்த உழைப்புக்கு பணம் தரவேண்டும். எனவே அந்நாவலுக்கு எடிட்டராக இருந்த யுவராஜனுக்கு 500 ரிங்கிட் தர கூறினேன். அதில் 300 ரிங்கிட் அவரும் வல்லினம் சார்பாக 200 ரிங்கிட் நானும் கொடுத்தோம். ஒருவேளை நாவலை நான் அச்சிட்டிருந்தால் அச்சு செலவையும் வாங்கியிருப்பேன். காரணம் பணம் போட்டு நூலை அச்சாக்கும் பலம் வல்லினத்திடம் அப்போது இல்லை. இப்படி நாவலை எடிட் செய்து கோ.முனியாணியைச் சந்தித்த போது எடிட்டிங்கை அவர் விரும்பவில்லை என்று புரிந்தது. அவர் எடிட்டிங்கை படைப்பை சிதைக்கும் முறை என்றே நினைத்தார். அதன் பின்னர் பலமுறை தொலைபேசி வழி அழைத்தும் பதிலில்லை. எந்தக் குறுந்தகவலுக்கும் பதிலில்லை. பின்னர் ஒருமுறை மஹாத்மன் , கோ.முனியாண்டி எடிட் செய்தவரை தன் நாவலைக் கேட்கிறார் என்றும் என்னை சந்திக்க விரும்பவில்லை என்றும் கூறினார். அவர் அவசரப்படுத்தவே அன்று இரவில் சீ.முத்துசாமியிடம் அந்தப் பிரதியை ஒப்படைத்தேன். உடன் சிங்கை இளங்கோவன், பிரான்ஸிஸ் இருந்தனர். கோ.முனியாண்டி என் அழைப்புக்கு பதில் தராததைச் சொன்னேன். கோபமாக அவர் அனுப்பிய குறுந்தகவல்களைக் காட்டினேன். இவற்றுக்கெல்லாம் நான் இன்று நம்பும் ஒரே சாட்சி சிங்கை இளங்கோவன் மட்டுமே.

அதோடு அந்நாவலுக்கான தொடர்பைத் துண்டித்தேன். எடிட் இல்லாமல் அந்நாவல் வெளிவருவதில் எனக்கு எவ்வித ஈடுபாடும் இருக்கவில்லை. மற்றபடி நான் தப்பி ஓட கோ.முனியாண்டி என்ன கொரிலா குரங்கா?  பயம் எனும் உணர்வை இழிவாக கருதவில்லை. ஆனால் அடிப்படையில் எனக்கு அது அவ்வளவாக வருவதில்லை. மேலும் இதில் கோ.முனியாண்டி சொல்லியுள்ள பொய்தான் அவர் எதிர்வினையின் உச்சம். அவர் கொடுத்த எழுத்து குவியலில் ஒரு வார்த்தைதான் திருத்தப்பட்டிருந்ததாம். திருத்தப்பட்ட அவரின் அந்த எழுத்துக்குவியலை, யுவராஜன், என்னைத்தவிர வாசித்த மற்றொருவர் சிங்கை இளங்கோவன். அதில் வெட்டியெடுக்கப்பட்ட குப்பைகளைத் தொகுத்தாலே தனி தொகுப்பு வரும். இன்னும் சொல்லப்போனால் அந்நாவலின் வடிவத்தையே மாற்றும்படி யுவராஜன் கூறியிருந்தார். நானும் அதற்கு சம்மதித்தேன். அவ்வாறு செய்தால் மட்டுமே பதிப்பிக்கலாம் எனக் கூறியும் இருந்தேன்.

மற்றபடி அவர் அரசியல்வாதிகளிடம் சென்றது குறித்த நியாயங்களைக் கூறியுள்ளார். அது எனக்கு அவசியமற்றது. அவர் மனசாட்சியிடம் அதை கூறிக்கொள்ளட்டும். அதோடு இன்னொரு முக்கியமான கேள்வியையும் கேட்டுள்ளார். நாவல் குறித்து கருத்து சொல்ல உனக்கு என்ன தகுதி என்பது போன்றதொரு தொணி அது.

அதற்கு பதில் ஒன்றுதான். நிச்சயமாக நாவல் குறித்து கருத்து சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் உங்களைப் போல 50 ஆண்டுகள் எழுதியும், 46 நூல் வெளியீடுகளையும் செய்ததில்லை.

மேலும் உங்கள் மொழியில் ‘கடந்த 15 ஆண்டுகாலமாக  தான் வாழ்ந்த மண்ணை மீட்டெடுக்க யுகப்போராட்டம் நடத்திவரும் கடல்கடந்த தொப்புள் கொடி உறவுகளுக்காக உதவுவதற்காக செயலாற்றியிருக்கிறேன்'(விடுதலை புலிகளுக்கு உதவினேன் என்று சொல்ல தைரியம் இல்லை. நீங்களெல்லாம் போராட்டவாதி…)

இத்தனை பெரிய ஆளுமை நான் இல்லை. அதனால்தான் நான் இங்கு நாவல் குறித்து பேசவில்லை. நாவல் அல்லாத, ஒரு கடந்த கால வாசிப்பின் நினைவில் இன்னும் எஞ்சி இருக்கின்ற ஒரு எழுத்துக் குப்பையைப் பற்றி பேசினேன். அதற்கு கூட தகுதி குறித்தெல்லாம் பேசினால், என்ன சொல்றது போங்க.

பின் குறிப்பு : உங்கள் மிரட்டலையெல்லாம் உங்க ஊர் சின்ன பசங்களிடம் வைத்துக்கொள்ளுங்கள். இனி வரும் உங்கள் கடிதம் இங்கு இடம் பெறாது. நீங்கள் எந்தப் பத்திரிகைகளுக்கு வேண்டுமானாலும் அனுப்பிக்கொள்ளுங்கள்.

(Visited 118 times, 1 visits today)

One thought on “கோ.முனியாண்டிக்கு ஒரு சின்ன விளக்கம்.

  1. ராமனின் நிறங்களா? மாரீசனின் நிறங்களா?

    கோமு என்று பிரியத்துடன் நான் அழைக்கும் கோ முனியாண்டியை 1980 -இல் இருந்தும், நவீனை 2009 -இல் இருந்தும் எனக்கு நேரடியாகத் தெரியும். இருவேறு தலைமுறையினரான இவர்களுடனான என் நட்பு அறிவார்ந்த தளத்தையும் கடந்த நெஞ்சார்ந்த அன்பு சார்ந்தது.

    நவீனின் வலைப் பக்கத்தில் கொழுந்துவிட்டெரியும் இருவரின் எதிரெதிர் வினைகளைப் படித்தேன். ஓர் இனம்புரியாத சோகம் கப்பிய அதே கணம், இருவரின் சொல்லாடல்களிலும் என் பெயர் இடம்பெற்றிருப்பதையும் கண்டேன். இங்கு இரு நண்பர்களில் எவருக்கும் வக்காலத்து வாங்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றாலும், விடுதியில் என் கண்முன் நடந்தேறியவற்றைப் பற்றித் தெளிவாக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது.

    இராமனின் நிறங்களில் தட்டச்சுப் பிரதியை ஓர் இரவு முழுதும் கண்விழித்து நான் வாசித்தேன். பிரதியில் பல்வேறு இடங்களில் எடிட் செய்யப்பட்டிருந்தது. இயல்பான ஒற்றுப்பிழைத் திருத்தத்தோடு பல பத்திகள், பக்கங்கள் ஒரேயடியாகக் கோடுகிழிக்கப்பட்டு வெட்டப்பட்டிருந்தன. எனவே ஒரே ஒரு பிழைத் திருத்தம் என்பது சரியல்ல.

    பிரதியில் மிகவும் குறைவான பரிந்துரைகள். நான் எதிர்பார்த்த அளவில் ‘எடிட்டிங்’ நிபுணத்துவத்தோடு இல்லாததில் எனக்குப் பெருத்த ஏமாற்றமே.

    நான் தட்டச்சுப் பிரதியை மட்டுமே வாசித்துள்ளேன். பிரசுசரமான ராமனின் நிறங்களை நான் இதுவரைப் பார்த்ததில்லை. என்னைப் பொறுத்தவரை தட்டச்சுப் பிரதி நாவல் ஒரு கலைப்படைப்பாக முழுமை அடையவில்லை. ஒரு கதைசொல்லியின் வெறும் வார்த்தைக் களஞ்சியமாகவே இருந்தது.

    பிரதி, என் படைப்புலக இலக்கிய ரசனை, வாசிப்பனுபவ, விமர்சன வெளிக்கு வெளியே நின்றது. இன்னும் சில மாற்றங்களோடு நாவலை வெளியிட்டால் அற்புதமான மலேசியத் தமிழ் நாவல் கிடைக்கலாம் என்ற அக்கறையோடு என் கருத்துகளை கோமுவிடம் தெரிவித்தேன். எண்ணற்றத் தகவல்களுக்கும் அப்பால் பாத்திர வார்ப்புக்கும், கதையின் பின்புலத்துக்கும் வலுசேர்க்க இன்னும் நிறைய அடர்த்தியான உரையாடல்களின் தேவையை வலியுறுத்தினேன்.

    கோமுவின் விருப்பப்படி நாவலின் முழுமையான சீர்செய்யப்பட்ட பிரதிக்கு ஆங்கிலத்தில் ஒரு தீர்க்கமான முன்னுரை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டதால் மனமுவந்து ஒப்புக்கொண்டேன். ஆனால் கோமுவிடம் இருந்து ராமனின் நிறங்கள் பிரதி வரவே இல்லை. காத்திருந்தது தான் மிச்சம். பரவாயில்லை.

    [நவீன்: “கோ.முனியாண்டி என் அழைப்புக்கு பதில் தராததைச் சொன்னேன். கோபமாக அவர் அனுப்பிய குறுந்தகவல்களைக் காட்டினேன். இவற்றுக்கெல்லாம் நான் இன்று நம்பும் ஒரே சாட்சி சிங்கை இளங்கோவன் மட்டுமே.” ] நவீன் கூறியது உண்மை. இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    எந்தப் படைப்பாளனும் பற்றற்ற புத்தன் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஈகோ இருக்கின்றது. அது சீண்டப்படும்போது. அவரவர் கோபதாபங்களுகேற்ப எரிமலை வெடிக்கின்றது. குழம்பு ஆறலாம். ஆறாமலும் போகலாம். இன்றையக் கைகலப்பு நாளையக் கைகுலுக்கலாகவும் மாறலாம். இருப்பினும் அதுவரை, ஒளிந்துகொண்டு சிரிக்கும் எழுத்தாளப் பச்சோந்திகளையும், பாதியில் ஓடிப்போகும் துரோகிகளையும் நெருங்கவிடாமல் இருப்பது இருவருக்குமே சிறப்பு.

    அன்றாடம் தமிழர்களைக் காட்டிக்கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் கொழுத்துப்போன மானங்கெட்ட அரசியல் விபச்சாரி களை மேடையேற்றி, அவர்களின் முன் மண்டியிட்டு அவர்களுடையதை உருவிவிட்டு வாய்மைதுனம் செய்து நூல் வெளியிட்டு காசு சேர்க்கும் முதுகெலும்பற்ற முன்னணி மலேசியத் தமிழ் படைப்பாளிகளை நாமறிவோம்.

    இந்த அடிமைகள், மானம், ரோஷம், சூடு, சொரணையற்று தத்தம் அடிமையிரைப் பிடுங்கி உதட்டின்மேல் மீசையாய் ஒட்டிக்கொண்டு மேடைகளிலும் பொது ஊடகங்களிலும் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவதுபோல் போராளி வேடம் போடும் கோமாளிகள்.

    இந்தக நாசகாரக் கும்பல், மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகள், வார மாத இதழ்கள், வானொலி, தொலைகாட்சி, பல்கலைக்கழக தமிழ்ப்பகுதி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், எழுத்தாளர் சங்கம், மேலும் அதன் வாந்திபேதிகளான வாசகர் வட்டங்களிலும் தமிழ் அன்னைக்குப் பேன் பார்த்தவாறே அதிகாரத்துக்கு சாமரம் வீசிக்கொண்டு ஒடுக்கப்பட்ட மலேசியத் தமிழனின் இருப்புக்கும் விடுதலைக்கும் ஆப்பு வைத்துக்கொண்டே இருக்கின்றது.

    மலேசியா-சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலில், அங்கீகாரத்துக்காகவும், மாலை மரியாதை, பொன்னாடை, பணமுடிச்சு, மற்றும் தேசிய அளவில் உதாசீனப்படுத்தப்படும் எவனுக்கும் புரியாத மசிரு விருதுகளுக்காகவும் சொந்தக் கழிப்பிடத்தில் குசுவிடும்போது கூட அக்கம்பக்கம் பார்த்து ஓசை இல்லாமல் அடக்கி விடும் பெரும்பாலான நமது மூத்த எழுத்தாளப் பன்னாடைகள் சீக்கிரம் செத்தொழிந்தால் தான் இங்கே நவீன தமிழ் இலக்கியத்துக்கு விமோசனம் போலிருக்கின்றது.

    ஆனால் அதற்குள் அதே அற்பமான ஆதாயங்களுக்காக இந்தக் கோழைகளின் பின்னால் அணிவகுத்து சாணி பொறுக்கும் ஓர் இளையதலைமுறையும் உருவாகிக்கொண்டிருப்பது தான் வேடிக்கை.

    இவர்களை, இலக்கிய நேர்மையுள்ள போராளிகள் தொடர்ந்து எதிர்வினையாற்றிக் காயடித்துக்கொண்டே இருப்பதை நிறுத்தினால் அடிபட்டுக்கொண்டே இருக்கும் சிறுபான்மைத் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவித அடையாளம் மெல்ல மெல்ல அழிந்துவிடும்.

    நாள்தோறும் குரல்வளை அறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் தமிழனின் நிஜக் குரலைப் பதிவு செய்யும் தன்மானமுள்ள படைப்பாளிகளில் ஒருவரான நண்பர் கோ. முனியாண்டிக்கும் இது நன்கு தெரியும் என்றே நானும் நம்பி வந்தேன்.

    ஆனால் நானறிந்து, முப்பது வருட நட்பில் அவர் உக்கிரமாய்க் காத்துவந்த போராளியின் பாசறையை விட்டு அரசியல்வாதிகளின் கூடாரத்துக்குப் போய் கோமாளிகளோடு எதிரணியில் நிற்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

    இலக்கியம் என்பது ஜீவமரணப் போராட்டம். போர்க்களத்தில் போராளி கோமாளியோடு நிற்பது அபத்தம், அவலம்.

    எப்போதுமே சமரசமற்ற, தன்னை விற்கத் துணியாதப் போராளிக்கு, கூட வந்துகொண்டிருக்கும் சகபாடிகள் ஓவ்வொருவராய், அவரவர் சொந்தத் தேவைகளுக்காக மறையும் அனுபவம் புதிதல்ல. பயணத்தில் இலக்கு தான் குறி. அவ்வப்போது வரும் போகும் பயணிகளல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *