மலேசிய இலக்கிய ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் அ-ஒழுக்கவாதி கோ.முனியாண்டியின் என் கடிதத்திற்கான எதிர்வினையை, மன்னிக்கவும் வசை கூட்டங்களை வாசிக்க நேர்ந்தது. ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சார்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களையும் நாட்டுக்குள் வருபவர்களையும் சிறுநீர் பரிசோதனை செய்து அதனை உறுதி செய்துகொள்வார்கள். இது உள்நாட்டு சட்டத்திற்குக் கீழ் வரையறுக்கப்பட்ட சட்டமாகும். கோ.முனியாண்டியின் என் ஒழுக்கத்தின் மீதான கிண்டலைப் படிக்கும்போது எனக்கு அவரை அடுத்தவர்களின் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்த்து அவனை நிர்ணயம் செய்யும் ஒரு போதைப்பொருள் தடுப்பு பிரிவினரைப் போலவே தோன்றியது. கோ.முனியாண்டி யார் யார் என்னென்ன செய்கிறார்கள் எங்கெல்லாம் ஒழுக்கத்தை மீறுகிறார்கள் என்பதைக் கவனமாக கடந்த 50 ஆண்டுகள் பரிசோதித்து ஒரு கலாச்சார அதிகாரியாகப் பணியாற்றியமைக்கு என் வாழ்த்துகள். தொடருங்கள், எனகொன்றும் பிரச்சனை இல்லை.
அவர் நாவலைப் பற்றியும் அவருடைய எதிர்வினை பற்றியும் மட்டும் பேசியதற்காக நான் எந்த மாதிரியாக வசைக்குள்ளானேன் என்பதை இங்குக் குறிப்பிடுகிறேன்.
- இலக்கிய உலகத்தின் விரல் சூப்பியின் அறிவை மட்டும் கொண்டிருக்கிறேன்
சரி, இப்பொழுது அதுக்கென்ன? அதென்ன கணக்கு? என்னைக் குழந்தை எனச் செல்லமாக அவர் பாராட்டியிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. போகட்டும்.
2. எதிர்வினையாற்றியதற்காக உதைக்கப்பட்டேன்.
50 ஆண்டு கால இலக்கியவாதி இன்னொருவனின் உடல் ரீதியில் அடைந்த காயத்தைக் கேலி செய்வதைப் பாருங்கள். நாளை யாராவது மாற்றுத்திறனாளிகளைப் பார்த்தால் அவர்களையும் கிண்டல் செய்யும் ஒரு குரூரமான குணம் படைத்தவர் என்பதை அவரே நிறுபித்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் கடந்து அது குறித்து எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறேன். ஆனால் கோ.முனியாண்டி பழைய குப்பையைக் கிளறுவதில் ஒரு சுகத்தை அடைகிறார். எது பழைய குப்பையையும் மிச்சத்தையும் கிளறும் என உங்களுக்கு தெரியும்தானே?
மேலும் அவர் இன்னொரு வேலையையும் தொடர்ந்து செய்து வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும் இனி இலக்கியம் சார்ந்து அவருடன் விவாதிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அதாவது உங்களைப் பற்றி ஏதாவது ஒரு சில்மிஷ குறிப்புகளை அவர் கேள்விப்பட்டிருந்தால், இலக்கிய விவாதம் நடக்கும் இடத்தில் தொடர்பில்லாமல் அதைக் குறிப்பிட்டு மிரட்டுவது. தனது 50 ஆண்டுகளில் அடுத்தவனின் முதுகை நம்பி வாழ்வதாக இதை நினைத்துக்கொள்ளலாம். ஆக, அவரால் இலக்கியம் சார்ந்து அல்லது எதிர்வினை சார்ந்து இயங்க முடியவில்லை என்றால் உடனேயே உங்களின் சொந்த வாழ்க்கையைக் குறிப்பிட்டு கேலி செய்து கிண்டலடிக்கும் கேவலமான ஒன்றைச் செய்வார் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருப்பார்?
ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதையாவது மன்னித்துவிடலாம். நவீனுக்கு எழுதிய கடிதத்தில் முனியாண்டி தன்னுடைய நிற வெறியைக் காட்டியிருப்பதைத்தான் மன்னிக்க இயலவில்லை. ஏற்கனவே தனது கவிதைகளின் மூலம் அதிகமான வடச்சொல் பிரியராகத் தன்னை வெளிப்பட்டுத்தியுள்ளார். இப்பொழுது இராமனின் நிறங்கள் வேறு. மேலும் தன்னை ஒரு நிறப் பிரியராக நவீனுக்கு எழுதிய கடிதத்தில் நிரூபித்துள்ளார். இவர் என்ன மனிதர்களைச் சாதிய அடிப்படையிலும் நிறத்தின் அடிப்படையிலும் தரம் பிரித்து பார்ப்பவரா? 50 ஆண்டு காலம் இலக்கியம் கற்றுக்கொடுக்கவில்லையா? கருப்பை அழுக்கு எனச் சொல்லும் ஒருவரை இன்றுதான் சந்திக்கிறேன். இவரிடம் என்ன எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது?
இனி இவரின் படைப்பும்/ நாவல் சார்ந்து மட்டுமே தொடர்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பறை இணைய இதழில் இந்த விவாதம் இலக்கியம் சார்ந்து மட்டும் தொடரும்.
குறிப்பு: முனியாண்டியின் கடிதத்தைப் படித்துவிட்டு அவருக்கு 4 பக்கத்திற்கு ஒரு பதில் வசைக்கடிதமே எழுதிவிட்டேன். ஆனால் நவீன்தான் அது ஆரோக்கியமற்ற விவாதத்தையே உருவாக்கும் எனத் தடுத்தார். ஒருவேளை அந்தக் கடிதத்தைக் கோ.முனியாண்டி படித்தார் என்றால் என்ன ஆவார் எனச் சற்று யோசித்துப் பார்த்தேன். மனிதாபிமானம் எனக்கு அவசியம் என நினைத்துக்கொண்டு சமாதானம் அடைந்திருக்கிறேன். நான் என்ன கோ.முனியாண்டியா? மிரட்டுவதற்கும் அதட்டுவதற்கும். அவர் யாருக்கு வேண்டுமென்றாலும் மின்னஞ்சல் செய்துகொள்ளட்டும், அல்லது மேடைப் போட்டு எங்கள் புகழ் பாடட்டும். எந்தப் பிரச்சனையும் இல்லை.
“மனிதர்களை நிற ரீதியில் பிரித்து சிறுமைப்படுத்துபவர்களை, உங்கள் வீட்டிலுள்ள பழைய செறுப்பால் அடியுங்கள்” நிற ஒடுக்குமுறைக்கு எதிராக 2001-இல் ஜன்ஹாம் மஹிட் அவர்களின் உரையிலிருந்து.
கே.பாலமுருகன்