தமிழகச் சிறுகதை

சு.வேணுகோபாலின் புனைவுலகம்: இன்னொரு பசியின் – 4

venugopal118.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.

சு.வேணுகோபாலின் புனைவை உள்வாங்க கவனம் சிதறாத வாசிப்பு தேவை. பின்னர்  அதற்கு முன் இருந்த வாழ்வு குறித்தான நம்பிக்கைகளையும் ஒழுக்க மதிப்பீடுகளையும்  மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் துணிவு வேண்டும். இல்லாத பட்சத்தில் அவை வெறும்  குழப்பத்தையும் ஒழுக்க அதிச்சியையும் மட்டுமே ஏற்படுத்தும். பொழுது போக்கு வாசகர்களுக்கு சு.வேணுகோபாலின் கதைகளின் நுட்பம் அகப்படுவதே இல்லை.

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: கலையின் இறுதியாத்திரை – 3

index18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  ‘ஏழுமலை ஜமா’ சிறுகதை வாசிக்க : ஏழுமலை ஜமா

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: மீட்கப்படும் குழந்தமை – 2

20chrcjpava18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  ‘சத்ரு’ சிறுகதை வாசிக்க : சத்ரு – பவா செல்லதுரை

கதைகளின் வழியே கதாசிரியனை அறிய  முயற்சிப்பது சுவாரசியமானது. பவா செல்லதுரையின் கதைகளை வாசிக்கும்போது கைகளை அகல விரித்து பேரன்களைக் கொஞ்ச அழைக்கும் ஒரு தாத்தாவின் சித்திரமே மறுபடி மறுபடி தோன்றுகிறது. தாத்தாக்கள் பேரன்களை எப்போதும் வெறுப்பதில்லை. வாஞ்சையை அவர்கள் மேல் தடவி தடவி ஈரமாக்குவதைவிட வேறெதுவும் தெரியாத தாத்தாக்களின் வசைகளைக்கூட பேரன்கள் விளையாட்டுகளாக மாற்றுகின்றனர். பவா சக மனிதனை நம்பி வாழ்பவர். அவனுக்குள் இருக்கும் மனிதத்தை நம்பி வாழ்பவர். அதுவே அவரைச் சுற்றி மனிதர்களை மொய்க்க வைக்கிறது. அவர் பிறரிடம் எதிர்ப்பார்ப்பதை கொடுக்கவும் செய்கிறார்.

Continue reading

பவா செல்லதுரையின் புனைவுலகம்: கண்களின் விடுதலை – 1

பவா கதை18.11.2018 (ஞாயிறு) பவா செல்லதுரை மற்றும் சு.வேணுகோபால் வல்லினம் கலை இலக்கிய விழாவிற்கு சிறப்பு வருகை புரிகின்றனர். அவர்களது புனைவுகளை மலேசிய வாசகர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரைத்தொடர் எழுதப்படுகிறது.  வலி சிறுகதை வாசிக்க : வலி – பவா செல்லதுரை

ஒரு புனைவை மிகச்சிறந்தது எனச் சொல்லும்போது ஏன் அது அவ்வாறானது என நண்பர்கள் கேட்பதுண்டு. அப்புனைவு அவர்களுக்கு எந்த அனுபவத்தையும் கொடுத்திருக்காத பட்சத்தில் இந்தக் கேள்வியின் தொணி கொஞ்சம் மிரட்டலாகவே இருக்கும். உண்மையில் ஒரு கலை வடிவம் நம்மை ஈர்த்த தருணத்தை  அந்தரங்கமாக நாம் அதனுடன் உரையாடிய கணத்தை இன்னொரு வாசகரிடம் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா என நான் கேட்டுக்கொண்டதுண்டு. முடியாது. அவ்வாறு முடியுமென்றால் அவ்வுணர்வை ஒரு படைப்பாளி கட்டுரை வடிவில்கூட விளக்கமாக விளாவரியாக எழுதிவிடுவார்.

Continue reading