Author: கங்காதுரை

கொழும்பில் வல்லினம் 100

கங்கா

கொழும்புக்கு வந்து சேர இரவு மணி 11 ஆகியிருந்தது. யாழ்ப்பணத்திலிருந்து தொடங்கிய பயணம் என்பதால் உடல் கடும் சோர்வடைந்திருந்தது. அன்றிரவு தங்குவதற்கான இடம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் காலை 11மணிக்கு ‘வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சி இருப்பதாக நவீன் ஏற்கனவே சொல்லியிருந்தார். பயணத்தின் போது கண்டி பேராதனை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய…

மண் விழுந்தது

shapeimage_3

நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் பொறியியல் மற்றும் பசுமை தொழில்நுட்பப் புலத்தின் அறை எண் E214-இல் வகுப்பு நடத்த இடமளிக்கப்பட்டிருந்தது. இம்முறை அங்கு சர்வதேச மாணவர்களுக்கு மலேசிய வரலாற்றையும் அரசியலையும் போதிக்கும் பாடம். அன்று அதுதான் முதல் வகுப்பு. வகுப்பில் பாடம் போதித்துக் கொண்டிருக்கும்போது மெசெஞ்சரில் தகவலொன்று வந்தது. அதையடுத்து எனக்குப் பாடம் நடத்த மனம்…

தோங் ஜியாவ் ஸோங் : மலேசிய சீனர்களின் வரலாற்றின் ஊடே ஓர் அறிமுகம்

djz dong_zong_chinese_education_2

மலேசியாவில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் ‘தோங் ஜியாவ் ஸோங்’ என்பது மலேசிய சீனக் கல்வி இயக்கமாகும். இன்றும் இந்நாட்டில் நாம் தொடர்ந்து தாய்மொழிக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை நிலைநிறுத்திய அமைப்பு இதுவாகும். மலேசிய அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி மலேசியக் கல்வி வரலாற்றிலும் மிக முக்கியமானதோர் இயக்கமாக தோங் ஜியாவ் ஸோங் இயக்கம்…

டாக்டர் மா.சண்முகசிவா சிறுகதைகள் : நவீன அழகியலின் முகம்

pic 2

இலக்கிய விமர்சனம் என்பது மலேசியாவில் மிகச் சிக்கலான ஒரு விடயம். விமர்சனத்தை எதிர்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் போதுமான பக்குவம் மலேசிய இலக்கியச் சூழலில் இல்லை. ஓர் எழுத்தாளனோ அல்லது வாசகனோ ஒரு படைப்பை வாசித்துவிட்டு அதை விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்தவன் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவதுதான் இங்கே நிலவும் சூழல். ஓர் இலக்கியப் படைப்பு மீது வைக்கப்படும்…

தொழில்

ganga 1

வகுப்பறையில் மாணவர்கள் எனக்காகக் காத்திருந்தனர். அவர்களுக்கும் எனக்கும் ஏற்கனவே ஓர் உடன்பாடு ஒப்பந்தமாகியிருந்தது. மாணவர்களாகட்டும் நானாகட்டும் பத்து நிமிடத்திற்குள் வகுப்பில் இருக்க வேண்டும். அடுத்த பதினோறாவது நிமிடத்தில் பாடம் ஆரம்பமாகும். ஐந்தாவது நிமிடத்தில் வகுப்பில் நுழைந்தேன். அவர்கள் முகத்தில் சின்னதாய் ஏமாற்றத்திற்கான ஓர் அறிகுறி. பாடம் தொடங்கியது. சீன மாணவர்களுக்குத் தமிழ்மொழி வேற்றுமொழிப் பாடம். எட்டு…

மலேசிய சீன இலக்கியம் : ஒரு சிறுகதைத் தொகுப்பினூடாக அறிமுகம்

ganga-1

மலேசியாவில் பல்வேறு மொழிகளிலும் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இவற்றுள் மலாய் இலக்கியம் தேசிய இலக்கியமாக விளங்குகிறது. இதர மொழிகளில் படைக்கப்படும் இலக்கியங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் படைப்பாகவே பார்க்கப்படுகின்றன. இன்று வரையிலும் தமிழ் மற்றும் சீன எழுத்தாளர்கள் தங்களது படைப்பிலக்கியங்களைத் தேசிய இலக்கியமாக அறிவிக்கக் கோருகின்றனர். அறிவித்தபாடில்லை. இந்நிலையில் சீன இலக்கியத்தில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல் ‘மலேசிய…

விலங்குகள்

animal-and-human

மீண்டும் நிர்வாகத்திடமிருந்து அதே மின்னஞ்சல் வந்திருந்தது. இம்முறை, பல்கலைக்கழக வளாகத்தில் திரியும் விலங்குகளுக்குத் தீனி போடக்கூடாது என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பல்கலைக்கழகம் அமைந்திருந்த பெரிய நிலப்பரப்பில் விலங்குகள் திரிவது நிர்வாகத்திற்கு நெருடலாக இருந்தது. அவை ஆதியிலிருந்து அங்குதான் திரிந்து கொண்டிருந்தன. இப்போதும் அங்குதான் திரிந்து கொண்டிருக்கின்றன. பதினான்கு வருடங்கள் முன்பாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அது…

அடையாளம்

1

விரிவுரையாளனுக்கான அடையாளத்தைச் சிவப்பு நிறக் கயிற்றில் தொங்கும் பெயரட்டையில் பல்கலைக்கழகம் எனக்கு கொடுத்திருந்து. கழுத்தில் பெயரட்டை தொங்கும்வரை வளாகத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வளாகத்தை விட்டு வெளியேறினால் அடுத்து நான் சந்திக்கும் பலர் என்னிடம், “தம்பி, நீ என்னப்பா படிக்கிற?” என்ற கேள்வியைத்தான் கேட்பார்கள். இன்னும் சிலர் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பார்கள். வெளிச்சூழலில் அது…

மண்டை ஓடி: மண்ணின் மணத்தை நிறைத்திருக்கும் கதைகள்

11873758_1041742255838852_3368109114859042634_n

ஓர் எழுத்தாளனாகப் பிறர் நூலை விமர்சனம் செய்யும் அளவுக்குத் தகுதி கொண்டிருக்கவில்லையென்றே நம்புகின்றேன். இதுவரையிலும் சிறுகதை இலக்கியம் என் கைக்கு அடங்காதொரு கலையாக இருக்கும் பட்சத்தில் ம.நவீனின் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பை ஒரு வாசகனின் பார்வையிலிருந்து விமர்சனம் செய்வது சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.

யார் அந்தப் பண்டிதன்?

Pandithan

அங்கியை அணிந்துகொண்டு மாபெரும் மாணவர்கள் கூட்டத்திற்கும் அவர்களை உள்ளே வரவேற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்கும் இடையில் விரிவுரையாளர்களின் அணிவகுப்பில் நின்றுக்கொண்டிருந்தேன். துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் பகுதி. புலங்களின் தலைவர்கள் பிரத்யேக அங்கிகளை அணிந்துகொண்டு விரிவுரையாளர்களுக்கு நேரெதிரில் அணிவகுத்து நின்றுக்கொண்டிருந்தனர். விழாவின் தொடக்கத்திற்கான அறிவிப்பைத் தொடர்ந்து பின்னணி இசை முழங்கியது. மாணவர்களும் பெற்றோர்களும் எழுந்து…

ஆதிசேடன்

thirumal-150x150

ஸ்ரீவைகுண்டத்துப் பாற்கடலில் தனது உடலாலேயே ஆதிசேடன் மூன்றடுக்கு மஞ்சத்தை எழுப்பி தனது ஐந்து படங்களையும் விரித்து மூவுலக காப்பகமான திருமாலுக்குக் குடைப்பிடித்தான். சுதர்சனன், சங்கு முதலிய ஆயுதங்களும் கருடனும் திருமாலைச் சேவித்து நின்றனர். திருமகள் நாதனின் அருகில் அடக்கமாய் வீற்றிருந்தாள். எல்லாம் வல்ல திருமால் யோக நித்திரையில் ஆழ்ந்த வண்ணமே ஆதிசேடன் மேல் சயனித்திருந்தார். எல்லாமே…

படைப்பு சுதந்திரம் உள்ளவனே கலைஞன் – ஜேம்ஸ் லீ

james_lee_02

சுதந்திரத்திற்கு எல்லா நேரங்களிலும் சுதந்திரம் இருப்பதில்லை. எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரத்தின் வரையறையை ஆளும் அதிகாரங்களே நிர்ணயிக்கின்றன. அதிகாரங்களையும் அதன் வரையறைகளையும் கடந்து தனது கருத்துகளை படைப்பின் வாயிலாக வெளியிடவே ஒவ்வொரு கலைஞனும் முயல்கிறான். ஆனால் பல நேரங்களில் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு தன்னை சமரசரம் செய்துகொள்வது பெரும்பாலான கலைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு அவர்களது…

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் – எனது பார்வை

முதலில் இந்தச் சிறுகதையை எழுதிய நண்பர் தயாஜியை மனதார பாராட்டுகிறேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறுகதை அதிகம் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதன் முறை. இம்மாதிரியான கருவை கையில் எடுத்துக்கொண்டு எழுதுவது என்பது சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்ள ஒரு ‘தில்’ வேண்டும். அது தயாஜிடம் இருப்பதை எண்ணி பெருமை…

பெருந்தன்மையும் பெண்ணியமும்

03

மற்றவர் பிரச்சனையில் மூக்கை நுழைக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. எதுவும் தெரியாமல் மற்றவரைப் பற்றி பேசுவதும் கிடையாது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் (பெ.இரா) அவர்களின் விசயத்திலும் இதுவரை அப்படியே இருந்துள்ளேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் பரவலாக இருந்தாலும் அதை எதையும் மனதில் வைத்து நான் இதை எழுதவில்லை.…