Author: ம.நவீன்

வழக்கறிஞர் பசுபதியும் பத்திரிகை அறமும்!

IMG-20160829-WA0001

கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான். சண்முகசிவா தந்தை போன்றவர் என்றால் பசுபதி…

கலை இலக்கிய விழாக்கள்: கடந்துவந்த பாதை

IMG-20160727-WA0000

நேற்றுப்போல்  இருக்கிறது கலை இலக்கிய விழா கொண்டாடத்தொடங்கி. இது கொண்டாட்டமா என்றால்… ஆம்! கொண்டாட்டம்தான். 2009ல் நான் ‘கலை இலக்கிய நிகழ்ச்சி’ எனப் பெயரிட்டபோது மா.சண்முகசிவா சொன்னார், “இது நிகழ்ச்சி இல்லை. விழா. நாம் கொண்டாடப்போகிறோம்…” எனக்கு அப்போது ‘கொண்டாட்டம்’ என்ற சொல் அவ்வளவு உவப்பானதாக இல்லை. ஒரு தீவிர படைப்பாளிக்குள் எப்படிக் கொண்டாட்ட மனநிலை…

கொங்கு தமிழர் மாநாடும் கொசுத்தொல்லையும்!

kau

அண்மையில் ஒரு வீடியோ, முகநூலில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஜூலை 22 முதல் 24 வரை மலேசியாவில் நடைபெற்ற ‘கொங்கு தமிழர் மாநாட்டில்’ கலந்துகொண்ட ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியை தனது சாதியப் பெருமையை அதில் பகிர்ந்துகொள்கிறார். தாங்கள் பிடிவாதமாக கொங்கு கவுண்டர் சாதியைக் கடைபிடிப்பதாகவும் தங்கள் குழந்தைகளை சாதிய உணர்வுடன் வளர்ப்பதாகவும் அவர் பகிரங்கமாகக்…

ஜூல்ஸுடன் ஒரு நாள் : தப்பிக்க முடியாத உண்மை

naveen 1

ஒரு சின்னஞ்சிறிய நாவல் மிக நீண்டநாள் வாழ்ந்துமுடித்துவிட்ட அயற்சியைக் கொடுக்கமுடிவது குறித்து இப்போதுவரை ஆச்சரியமாக இருக்கிறது.  ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரம் ஒன்றுக்கு மரணம் நிகழ்வதை எளிதாகக் கடக்க முடிகிறது. மனித அழிவுகளும் வதைகளும் நாவலில் இடம்பெறுவதைக்கூட வரலாற்றின் ஒரு பக்கமென கசப்புகளைச் சுமந்து செல்ல முடிகிறது. ஒரே ஒரு மரணத்தை நாவல் முழுவதும் நிறைப்பதென்பது…

கச்சடா பேச்சு!

d12bbb977c7c3b81_badwords.xlarge

கெட்ட வார்த்தையை எங்கள் ஊரில் கச்சடா பேச்சு என்றுதான் கூறுவர். நான் அனேகமாக 10 வயதுவரை கச்சடா பேச்சை அறிந்திருக்கவில்லை.  தோட்டங்களில் வாழ்ந்த என் நண்பர்கள் அதுபோன்ற வார்த்தைகளை அடையாளம் காண்பதிலும் அதைப் பிரயோகிப்பவர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் கில்லாடிகளாக இருந்தனர். தோட்டங்களில் கச்சடாவாகப் பேசுவது சகஜமானது. சண்டையென வந்துவிட்டால் கச்சடா வார்த்தைகள் ஒன்றாகச் சேர்ந்து எதிராளி வீட்டுத்…

நவீன் மனோகரன் கவிதைகள்

poet-reading

                கவிதை என்பது… கவிதை என்பது தற்கொலைக்கு முன்பான ஓர் அந்தரங்கக் கடிதம் கவிதை என்பது யாருக்கும் புரியாத கண்ணியமான கண்ணீர் கவிதை என்பது தோல்விகளை மூடிமறைக்கும் தற்காலிக மேகமூட்டம் கவிதை என்பது ரத்தம் வடியாதிருக்க தோலில் இட்டுக்கொள்ளும் ரணமான தையல் கவிதை என்பது மௌனம்…

இலக்கிய வட்டம் : ஒரு பார்வை

1

பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களின் ஆலோசனையில் ரெ.கார்த்திகேசு அவர்கள் முன்னின்று உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’ குழுவும் அதன் மூலம் உருவான ‘இலக்கிய வட்டம்’ எனும் காலாண்டு இதழ்களும் அண்மையில் பார்வைக்குக் கிடைத்தன. இதழ்கள் தட்டச்சின் மூலம் நேர்த்தியாக உருவாகியிருந்தன. 70களில் முனைவர் ரெ.கார்த்திகேசு வானொலியில் பணிபுரிந்ததால் எழுத்தாளர்களிடம் கேட்டுப்பெறப்படும் படைப்புகளை வானொலியில் தட்டச்சாளராகப் பணியாற்றியவரிடம் கொடுத்து,…

அபோதத்தின் ருசி

Edward_Lear_A_Book_of_Nonsense_78

பத்திரிகைகளில் என் படைப்புகளை இடம்பெறவைக்கக் கொண்டிருந்த தீவிரம் அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுண்டு. இன்றுபோல அத்தனை இலகுவான சூழல் அப்போது இல்லை. அப்போது என்பது 97-98 ஐக்கூறலாம். இருந்ததே இரு தினசரிகள். அதில் ‘மலேசிய நண்பன்’ அதிகம் விற்பனை ஆனது. ‘தமிழ் நேசனு’க்கு இப்போது போலவே அப்போதும் பெரிய விற்பனை இல்லை. எழுதத்தொடங்கிய புதிதில் மலேசிய நண்பனில்…

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தேவையா?

Tamil-2ndary-school-MPS

மலேசியாவில் தமிழ்ப்பள்ளியின் இருப்பு குறித்து பேசுவதன் நீட்சி எப்போதுமே சர்ச்சையான ஒரு மையத்தில்தான் சென்று முடியும். சிறுபான்மை இனமான மலேசிய தமிழர்களுக்கென்று இருக்கும் அடையாளங்களில் ஒன்று கோவில் என்றால் மற்றது தமிழ்ப்பள்ளியாகவே எப்போதுமே பொதுபுத்தியால் நம்பப்பட்டு வருகிறது. இவை இரண்டுமே தொடக்கம் முதலே மொழியை வளர்க்கவும் சமுதாய போராட்டங்களை முன்னெடுக்கவும் ஒரு தளமாகவே இருந்துவந்துள்ளன. அதேபோல…

“என்னையடுத்து வேறோரு வாசகனுக்காக சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.” – தயாஜி

tayaji

கேள்வி : சிறுகதை, கவிதை, தொடர்கதை என எழுதிக்கொண்டிருந்த நீங்கள், உங்களின் முதல் நூலாகப் பத்திகளின் தொகுப்பை வெளியிடக்காரணம் என்ன? தயாஜி : மிகச்சரியாக நான் சொல்லவந்ததை எந்த வடிவத்தில் சொல்ல முடியுமோ, என் சக வாசகனுடன் என்னால் சுலபமாக பேச முடியுமோ அந்த வடிவில்தான் என் முதல் நூல் வரவேண்டும் என நினைக்கிறேன். பத்திகள்…

சொற்களைச் சேமிப்பதும் செதுக்குவதும் கலை

navin pix

ஆத்தா சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான். ஆத்தா அம்மாவின் அம்மா. அவர் கதைகள் சொல்லும் விதம் நூதனமானது. கதைகளில் வரும் கொடூர விலங்காக அவ்வப்போது அவரே மாறிவிடுவார். திடீரென முட்டிபோட்டு நடந்து பயங்காட்டுவார். ஆத்தா சொல்லும் கதைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். என் உணர்வு நிலைக்கு ஏற்ப ஆத்தா கதைகளின் முடிவையும்…

கவிதையும் பொருளும்

barathy1

கவிதை வாசகனின் மூலமே தன்னை முழுமைப்படுத்திக்கொள்கிறது. சங்கப்பாடல்கள் தொடங்கி திருக்குறள் என வளரும் பழந்தமிழ் இலக்கியங்கள் எதற்குமே அதன் ஆசிரியர்கள் பொருள் எழுதி வைத்துச்செல்லவில்லை. பின்னால் வந்த பல தமிழ் அறிஞர்களே அவற்றை வாசித்துப் பொருள் கூறினர். தமிழில் மிக முக்கிய ஆய்வாளரான முனைவர் துளசி ராமசாமி சங்கப்பாடல்களில் வரும் திணை, துறை, பாடியோர், பாடப்பட்டோர்…

இருள் எனும் நிழல்

sanga-ilakkiyam-stil-8-150x150

தமிழ் மகத்தான செவ்வியல் பாரம்பரியம் கொண்ட ஒரு மொழி. செவ்வியல் என்பது என்ன என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படலாம். பண்பாட்டு மரபின் அடிப்படைகளை உருவாக்கும் தொடக்ககாலப் படைப்புகளைக் கொண்டிருக்கும் மொழியைச் செவ்வியல் என்கிறோம். அவ்வகையில் சங்க இலக்கியம் நமக்குச் செவ்வியல். மொழியின் மிக உச்சமான சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அத்தகைய மொழி…

காக்கா முட்டை: கலையும் அரசியலும்

kakkamuttai_2066920f-150x150

மிக அண்மையில் தமிழகம் சென்றிருந்தபோது ‘காக்கா முட்டை’ திரைப்படம் எடுத்தப் பகுதிக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அழைத்துச்சென்றனர். ஒருவகையில் இந்தப்பயணம் எனக்கு முக்கியமானது. ஒரு கலைப்படைப்பு எதை மக்களுக்குக் காட்ட விளைகிறது என்பதும் அதன் தேர்வு எதுவாக இருக்கிறது என்பதும் இந்தப்பயணம் சன்னஞ்சன்னமாக உணர்த்தியது. கலை என்ற பெயரில் அதன் உன்னதங்களை…

‘எழுத்து’ இதழும் சிற்றிதழ் அரசியலும்

100-00-0002-357-3_b-01

பொதுவாகவே சிற்றிதழ் குறித்த மரபான ஒரு மனப்பதிவு நம்மிடையே உண்டு. சிற்றிதழ் என்பது அதிகம் விற்கப்படாத, தரம் குறைந்த காகிதத்தில் தயாராகி, விளம்பரம் இல்லாமல், 2000 அல்லது அதற்கும் குறைவான பிரதிகள் அச்சாகி, வண்ணங்கள் இல்லாமல் கறுப்பு வெள்ளையில் வெளிவரும் பிரதி என்பதை வரையறைகளாகச் சொல்வதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் புறத்தோற்றத்தை வைத்து கணிக்கப்படும் அளவீடுகள். ஆனால்…