
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் அரு.சு.ஜீவானந்தனை முற்போக்கு இலக்கியத்தின் முகம் எனச்சொல்லலாம். இவரின் பல சிறுகதைகள் அக்காலக்கட்டத்து வாசகர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோலவே இன்றும் சில வாசிப்புக்கு ஏற்றதாய் உள்ளது. இலக்கியச் சூழலில் தனது கருத்துகளை சமரசமின்றி வைக்கும் அரு.சு.ஜீவானந்தன் தனது சிறுகதைகளிலும் கலாச்சார மீறல்களைச் செய்துப்பார்த்தவர். சில காலமாக புனைவிலக்கிய உலகில் இருந்து…














