Author: வல்லினம்

“பசியென்பது இனம், மதம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று” – மா.ஜானகிராமன்

2021ஆம் ஆண்டுக்கான வல்லினம் விருதும் வரலாற்றுத் தொகுப்பாளரான ஜானகிராமன் மாணிக்கம் அவர்களுக்கு வழங்குவதில் வல்லினம் பெருமைகொள்கிறது. மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணப்படுத்தலில் திரு ஜானகிராமன் பங்களிப்பு முதன்மையானது. தோட்டப் பின்னணியில் வறுமைச் சூழலில் வளர்ந்த இவர், மலேசிய இந்தியர்களின் வரலாற்றை ஒட்டிப் பல கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். மலேசியாவில் இந்தியர்களின் வரலாறு ரீதியான மாற்றங்களை ‘மலேசிய…

5 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு

கொரோனா சூழலை தளமாகக் கொண்டு 27 ஆசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பான் அறக்கட்டளையின் ஆசிய மையம், இந்த மாதம் வெளியிட்டுள்ள ‘ஆசிய இலக்கியத் திட்டத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் ‘ஒளி’ எனும் சிறுகதை, தமிழிலும் ஆங்கிலம், ஜப்பானிய, மலாய், சீனம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது. மலேசியா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து,…

“முதன்முதல்ல எழுதுறவனுக்கு கச்சாப்பொருள் அவன் புழங்கின வாழ்க்கைதான்”

கடந்த ஏப்ரல் மாதம் அருண்மொழிநங்கையின் ‘மரபிசையும் காவிரியும்‘ கட்டுரையை படித்தபோது அந்தக்கட்டுரை ஒரு பெரிய நாவலின் தொடக்கம்போல எனக்குத் தோன்றியது. அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்று முதல், ஒவ்வொரு வாரமும், அவர் தொடங்கிய வலைத்தளத்தில் (https://arunmozhinangaij.wordpress.com/blog/) கட்டுரைகள் எழுத எழுத, தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்திருக்கிறேன். குட்டி அருணாவும் ஆலத்தூரும் அதன் மனிதர்களும்…

“மின்னூல்கள் என்ற பெயரில் ஏராளமான குப்பைகளும் குவிந்துகொண்டிருக்கின்றன!” – ஶ்ரீநிவாச கோபாலன்

2021க்கான ‘முகம்’ விருது ஶ்ரீநிவாச கோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பின் மூலம் வழங்கப்படும் இவ்விருது, தமிழில் அச்சில் இல்லாத பல அரிய நூல்களை, தொழில்நுட்பத்தின் உதவியால் மின்-நூல்களாக இணையத்தில் தரவேற்றிப் பதிப்பிக்கும் ஶ்ரீநிவாச கோபாலனின் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. ஶ்ரீநிவாச கோபாலன், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர்.…

“விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” – லதா

கனகலதா (லதா) ‘தீவெளி’ (2003), ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ (2004), யாருக்கும் இல்லாத பாலை (2016) ஆகிய மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அவரின் ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது. அவரின் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் The Goddess in the Living…

சிறுகதை எழுதும் கலை

வல்லினம் மற்றும் தமிழாசியா இணைவில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இலக்கியச் சந்திப்புகள் குறித்து இலக்கிய வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வகையில் இம்மாதம் (10.7.2021) சனிக்கிழமை அ.பாண்டியன் மற்றும் ஶ்ரீகாந்தன் ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள் குறித்த விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்துக்கொண்டவர்களுக்கு அவர்கள் வாசித்து…

சிங்கப்பூர் சிறப்பிதழ்

ஜூலை வல்லினம் இதழை சிங்கப்பூர் சிறப்பிதழாக தயார் செய்கிறோம். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்விதழுக்கு பெரிதும் எதிர்ப்பார்க்கிறோம். சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க புனைவுகள் குறித்து பிற நாட்டு படைப்பாளிகளும் கட்டுரைகள் அனுப்பலாம். படைப்புகளை 20.6.2021 க்குள் valllinamm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

இமையத்துடன் இரண்டு மணி நேரம்

அண்மையில் இமையத்துடன் இரண்டு மணி நேரம் எனும் நிகழ்ச்சி ‘வல்லினம்’ மற்றும் ‘தமிழாசியா’ இணைவில் நடைபெற்றது. முதல் அங்கமாக இமையம் அவர்களின் படைப்பு குறித்த நான்கு உரைகள் இடம் பெற்றன. அதன் இணைப்பு இமையம் படைப்புகள் தொடர்ந்து இமையம் அவர்களிடம் உரை இடம்பெற்றது. அதன் இணைப்பு இமையம் உரை

“புற வேற்றுமைகளால் மகிழ்வித்து; அக பேதங்களை அகற்றுவது பயணம்” – சுரேஷ் நாராயணன்

சுரேஷ் நாராயணன் பெரும் பயணி. இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணித்திருக்கும் இவர் அகன்று விரிந்த உலகின் பெரு நிலப்பரப்புகளில் தன்னைத் தொலைத்து மீண்டும் தேடிக்கண்டு பிடிப்பதை பல ஆண்டுகளாகச் செய்து வரும் பயணி. உலகின் பார்வையாளனாக மாறி, அவ்வனுபவம்  விதைக்கும் தெளிவின் நீட்சியோடு அடுத்தடுத்த பயணத்தைத் தொடர்கிறார். sureshexplorer.com என்ற அகப்பக்கத்திலும் Suresh Explorer…

வல்லினம் செயலி

இலக்கிய இணைய இதழ்களில் வல்லினம் முதன் முறையாகச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாசகர்கள் இதை கைபேசியில் நிறுவிக்கொண்டால் வல்லினம் அதில் தானாகவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அச்செய்தியையும் அறிவிக்கும். வல்லினத்தின் அத்தனை பகுதிகளையும் படிக்கவும் முடியும். தரவிறக்க https://play.google.com/store/apps/details?id=appvallinamcommyversion2.wpapp

2020இன் இறுதியில்…

இவ்வாண்டின் இறுதி இதழ் இது. வல்லினத்தின் 126ஆவது இதழ். சமகால நாவல்களின் சிறப்பிதழாக வெளிவருவது அதன் கூடுதல் சிறப்பு. இணையம் வழி இலக்கிய இதழை வழி நடத்துவதில் இரண்டு விதமான சிக்கல்கள் உள்ளன. முதலாவது, படைப்பாளர்களின் மனநிலை சார்ந்தது. ‘இணைய இதழ்தானே…’ எனும் எளிமைப்படுத்திக்கொள்ளும் மனப்போக்கு. அடுத்ததாக இதழாசிரியர்களின் மனநிலை. கிடைத்ததை கொண்டு நிரப்பி வெளியிட்டால்…

ம.நவீனின் 3 நூல்கள் முன்பதிவு

ம.நவீனுடைய மூன்று நூல்கள் வல்லினம் மற்றும் யாவரும் கூட்டு முயற்சியில் இவ்வருடம் வெளிவருகிறது. மூன்று நூல்களின் விபரம்: 1.உச்சை சிறுகதை தொகுப்பு – 2020இல் ம.நவீன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. மண்டை ஓடி, போயாக் ஆகிய இரு தொகுப்புகளுக்குப் பிறகு வெளிவரும் மூன்றாவது சிறுகதை நூல். 2.மனசிலாயோ – ம. நவீன் கேரளாவில் 21…

வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது

இவ்வாண்டு தொடங்கப்பட்டுள்ள வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வழங்கப்படுவதை அறிவிப்பதில் வல்லினம் இலக்கியக்குழு மகிழ்கிறது. கெடா மாநிலத்தில் உள்ள குரூண் எனும் சிற்றூரில் பிறந்த அபிராமி கணேசன் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியத்துறை மாணவியாவார். இருபத்து மூன்று வயதான இவர் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பொதிகை’ இதழில் தனது எழுத்து…

நாவல் முகாமும் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது நிகழ்ச்சியும்

வணக்கம். வல்லினம் இலக்கியக்குழு 2020இன் முதல் நிகழ்ச்சியாக அக்டோபர் 17,18 ஆகிய நாட்களில் நாவல் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் தைப்பிங் நகரில் உள்ள (HOTEL GRAND BARON) விடுதியில் நடத்தப்படும். அதிக பட்சம் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ளத்தக்க விவாத அரங்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வல்லினத்தின்…