Author: அரவின் குமார்

அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ ஒரு பார்வை

‘ஆறஞ்சு’ (2015), என்ற  சிறுகதைத் தொகுப்பையும் “சிறுகாட்டுச் சுனை” (2018) என்ற சிங்கப்பூர் மரபுடைமை பற்றிய கட்டுரைத் தொகுதியையும் எழுதி வெளியிட்டுள்ளவர் எழுத்தாளர் அழகுநிலா. ‘கொண்டாம்மா கெண்டாமா’ (2016), ‘மெலிஸாவும் மெலயனும்’ (2016), ‘மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும்’ (2018), ‘பா அங் பாவ்’ (2019) என குழந்தைகளுக்காக நான்கு படப் புத்தகங்களையும் அழகுநிலா எழுதியுள்ளார்: சிங்கப்பூர்…

நீர்ச்சுழலின் பாதை

இலக்கியத்தின் மகத்தான பணியாக வாழ்க்கைக்குத் தேவையான தன்னறத்தைப் போதித்தலை ஜெயமோகன் மீள மீளக் குறிப்பிட்டிருக்கின்றார். உலகின் சரிபாதி மக்கள் தத்தம் இல்லங்களில் உறைந்து இயல்பு வாழ்வு கெட்டு இருக்கும் கொரோனா காலத்துச் சூழலில் வாழ்வு மீதான நம்பிக்கையையும் அறத்தையும் வலியுறுத்துவது இலக்கியம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணியாக இருக்கிறது. அத்தகைய சூழலில் ஜெயமோகன் நாள்தோறும்…

புல்லின் விதைகள்

ஒருதுளி ஈரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் காற்றில் பறந்து வருகின்ற புல்லின் விதைகள் ஈரத்தைக் கவ்விப் பிடித்துத் துளிர்த்து விடுகிறது. அப்படிக் காற்றில் அலைந்து வரும் விதைகள் சிமிண்டு பாவிய தரையின் உடைவிடுக்கில் கூட பற்றிக்கொள்வதைக் கண்டிருக்கின்றேன். வரலாற்றுத் தருணங்களும் அவ்வாறானதுதான். அதன் கதையாடல்களுக்கு நடுவில் உயிர்ப்புள்ள நுண்மையான பகுதிகள் புனைவுக்கான சாரமாக எழுத்தாளர்களால் விதைக்கப்படுகிறது.…

அடித்தூர்

மேற்பற்கள் விழுந்திருந்ததால் மீசைப்பகுதி சற்றே உட்புறம் வளைந்து அடிப்பற்கள் மட்டுமே வாயைத் துருத்தியிருக்க ஆவேசமாய் முனகிக் கொண்டிருந்தார் தாத்தா. இந்த மூன்று நாட்களில் மொத்தமாக சேர்த்துவைத்தால் நான்கு வரி பேசியிருப்பார். அவ்வப்போது ஆள்காட்டி விரலையும் மோதிரவிரலையும் வாயில் அழுத்தி வைத்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தார். புகையிலைப் போடுவதை நிறுத்தியப்பின்னும் அவரது கடைவாயில் எச்சில் ஊறிக் கொண்டே…

மலேசிய சமகால கவிதைகள்: ஒரு பார்வை

வல்லின இலக்கியக் குழுவும் கூலிம் நவீன இலக்கியக் களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘நவீன இலக்கிய முகாம்’ பலவகையிலும் பெருந்திறப்பாக இருக்கும் என்றே ஆவலோடு கலந்துகொண்டேன். நவீனத் தமிழிலக்கிய ஆளுமைகளான ஜெயமோகன், சு.வேணுகோபால், சாம்ராஜ் ஆகியோரது படைப்புகள் முன்னமே சிறிது வாசித்திருப்பதால், அவர்களை நேரடியாகக் காணும் மகிழ்ச்சியும் அச்சமும் ஒருசேரத் தொற்றியிருந்தது. முகாம் நடந்த மூன்று…

சை.பீர்முகம்மது பத்திகள்: அலை வரையும் கோலம்

நீரின் மேற்பரப்பு ஓயாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது, நீரின் கீழ்தளத்தில் மேற்பரப்பின் அலைகழிதல்களால் வேறொரு பெளதிக மாற்றம் மெல்ல நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படியாகத் தன்னுள் இருந்த படைப்பு மனத்தை அலைகழித்த, சமூகம், ஆளுமைகள், இலக்கியங்கள் சார்ந்த நினைவடுக்குகளை ‘திசைகள் நோக்கிய பயணம்’ எனும் பத்தித்தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார் சை.பீர்முகம்மது. சை.பீரின் படைப்பு மனத்தின் செல்திசையையும் இலக்கியச்…

இலட்சுமணக்கோடுகள்

இராமயணத்தில் சீதையைக் கவர்வதற்காக இராவணன் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க இலட்சுமணன் கோடு ஒன்றை வரைந்து அதற்குள்ளே சீதையை இருக்கச் சொன்னதாக தொன்மக்கதை இருக்கிறது. அப்படியாகப் பெண்களைப் பல காரணங்களுக்காக நிரந்தரமாகக் கோடு போட்டு வைத்திருக்கிறது சமூகம். எப்பொழுதுமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் நிகழ்த்திக் கொள்ளவும் கலை கட்டற்ற வெளியை அளிக்கிறது. அப்படியாகத் திரைக்கலை அளித்திருக்கும் வெளியைப்…

பூனைகள் நகரம் : ஹருகி முரகாமி சிறுகதைகள்

நான்கு கால்களையும் பக்கவாட்டில் வாகாகப் பரப்பிக் கொண்டு முன்கால்கள் இரண்டின் இடையில் முகம் சாய்த்துத் தன்னையே திரும்ப பார்த்துக்கொண்டிருக்கும் பூனைகள் சாலைகளில் அகப்படும்.  அவற்றுள் சில அரிதாக வாலையும் அருகில் வைத்துக்கொண்டு அரை விழிப்பில் இருக்கும். தான் படைத்துக்கொண்ட அல்லது தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற உலகில்  உளம் தோய்ந்து வாழ முடியாத தனிமையும் வெறுமையும் அதிலிருப்பதாய்த் தோன்றும்.…

பதில்

காற்றே சற்று கனத்துடனும் கொஞ்சம் சோம்பலாகவும் இருக்கும் அகாலமான நேரத்தில் எழுந்திருப்பதும் இங்கு நிற்பதும் பழகிப் போய் சில வருடங்கள் ஆகிவிட்டன.  வாய் பிளந்து காத்துக் கொண்டிருந்த சுரங்கக் குழியின் தலை இந்த நிறுத்தத்தில்தான் இருக்கிறது. சட்டென்று திறந்த கதவுகளில் பலர் முண்டியடித்து ஏறி உட்கார்ந்தனர். உள்ளிருந்து சிலர் வெகு அவசரமாக நடந்தனர். சிலர் இடமில்லாமல் …