Author: பாலமுருகன். கே.

கடைசி முத்தமும் கடைசி கண்ணீரும்

நான் வேலைக்குச் சென்று வாங்கிய முதல் மாத சம்பளத்தில் அப்பாவிற்கு 50 ரிங்கிட் கொடுத்திருந்தேன். அதை அவர் 8 வருடங்கள் செலவு செய்யாமல் பத்திரமாகவே வைத்திருந்தார் என்பதே அவர் மரணத்திற்குப் பிறகே தெரிந்தது. என்னுடைய அப்பா திரு.கேசவன் அவர்கள் கடந்த 20ஆம் திகதி முதல் இரண்டு நாள் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.…

விவாகரத்து (திரைப்படம்): குடும்ப அமைப்பின் ஒற்றை குரல்

‘வெண்ணிற இரவுகள்’ படத்திற்கு முன்பு மலேசியத் தமிழ் சினிமாவின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்ததில்லை. அதற்கு மூன்று முக்கியமான காரணங்களை என்னால் கூற முடியும். ஒன்று, மலேசியத்தன்மை குறைந்து தமிழ்நாட்டு சாயல் அதிகமாகப் படிந்திருக்கும் நிலையில் அது மலேசிய சினிமா என்கிற அடையாளத்தை இழக்க நேர்ந்துவிடும். இரண்டாவது, போதுமான இயக்கப் பயிற்சியும் சினிமாவிற்கான நுட்பமான தேடலுமின்றி…

யஸ்மின் அமாட் : அழகியலும் தீவிரமும் (1958 – 2009)

யஸ்மின் அமாட் மலேசிய இஸ்லாமிய அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக இருந்து, அவர்களின் மனத்தில் வெறுப்பையும் அதே சமயம் புதிய இரசனையையும் கொண்டு சேர்த்த திரைப்பட இயக்குனர். ‘தீவிர மதச் சார்புடைய மக்களால் அவர் வெறுக்கப்பட்டாலும் மலேசிய மக்களின் மனத்தை ஆழமாகத் தொட்டவர்’ என ஸ்டார் நாளிதழ் ஒருமுறை செய்தி வெளியிட்டிருந்தது. மத அடிப்படைவாதிகள் யஸ்மின் அமாட்டுக்கு…

கொசு

நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார் காரைத் திறந்து வைத்திருந்தாலும் இந்த எழவெடுத்த கொசு சட்டென நுழைந்துவிடும். நீங்கள் என்னை எங்காவது பார்த்திருக்கக்கூடும். தைப்பிங் நாலு ரோடு பக்கம் எந்த மூலையிலாவது என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கழுத்துப்பட்டை ஒன்றை இறுக்கமாகக் கட்டிக்…

பதிவு: ஜெயமோகனுடன் ஓர் இலக்கிய முகாம்

கடந்த 6 வருடங்களாகக் கூலிம் தியான ஆசிரமத்தில் இலக்கியம் சார்ந்து மட்டும் இயங்கி வரும் நவீன இலக்கிய சிந்தனைக்களம் பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. பெரும்பாலும் சாமியார்கள் மலேசியாவில் சமயம், வியாபாரம் என மட்டுமே சமூகத்தை முன்னெடுப்பார்கள். ஆனால் பிரம்மானந்த சரவஸ்வதி அவர்கள் மிக முக்கியமான படைப்பாளியாக இலக்கிய வாசிப்பு சார்ந்து சமூகத்தையும்…

வெண்ணிற இரவுகள் ஒரு பார்வை: மலேசியத் தமிழ் சினிமாச்சூழலின் புதிய துவக்கம்

 கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து உலக சினிமாக்களையும் மலேசிய சினிமாக்களையும் பார்த்துக் கவனித்தும் வருகிறேன் என்பதைவிட இப்படங்களை விமர்சிப்பதற்கு வேறேதும் விஷேசமான தகுதிகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தை விமர்சிக்க திரைப்படத்தை இயக்கியவரால்தான் முடியும் என்றால் உலகில் அகிரா குரோசாவா தன் சக இயக்குனர்களின் திரைப்படங்களுக்குச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கக்கூடும் அல்லது வங் கார்…

சொற்களைக் கொல்லும் கலையானது…

யார் அந்த மாயா? ஏன் அவள் மட்டும் இந்த உலகின் ஒழுங்கை எந்த முன்னறிவிப்புமின்றி களைத்துப் போடுகிறாள்? அவளுக்கு மட்டும் உலகம் ஏன் எந்தக் கொள்கையும் எந்த இலட்சியங்களும் இல்லாத ஒரு விளையாட்டுப் பொருளாக மாறிவிடுகின்றது? நவீனின் கவிதைகளில் வரும் ஒரு மாயாவாக மாறிவிடுவதைவிட இந்த உலகம் செய்த அனைத்துக் கவிதை கொலைகளையும் வேறெப்படியும் மறக்கவோ…

கே.பாலமுருகன் கவிதை

 தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்   இதற்கு முன் இங்கே தூக்கிலிடப்பட்டவர்களின் கதைகள் இவை. குற்றங்களை விலைக்கு வாங்கத் தெரியாமல் தூக்கில் தொங்கியவர்களின் எளிய மக்களின் வசனங்கள் இவை.   கயிற்றில் தொங்கியவனின் தடித்த நாக்கிலிருந்து வடியும் எச்சிலில் ஊறிக்கிடக்கின்றன வாழமுடியாத ஆயிரம் ஏக்கங்களின் வரைப்படங்கள். ஆண்டான் எத்தி உதைத்த விலை உயர்ந்த காலணிகளின் அச்சு கரையாத நாக்குகள்…

மலேசியத் திரைவிமர்சனம்: மெல்லத் திறந்தது கதவு

கார்த்திக் ஷாமளன் என்கிற மலேசிய இளைஞரால் இயக்கப்பட்டு டிவிடியின் மூலம் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வியாபாரம் மலேசிய சூழலில் கொஞ்சம் வித்தியாசமானது. நண்பர்கள், முகநூல் மூலம் இப்படம் தொடர்பான பகிர்வுகள், விமர்சனங்கள் பரவியப்படியே உள்ளன. இன்று பதாகைகளோ அல்லது பத்திரிகைகளோ அவையனைத்தையும்விட முகநூல், தகவல்களைச் சேர்ப்பதிலும் மக்களை இணைப்பதிலும் முதன்மை வகித்து வருகின்றது. கார்த்திக் ஷாமளனால்…

எளிய கேள்விகளும் எளிய பதில்களும் – கே.பாலமுருகன்

புனைவுகள் குறித்த அபத்தமான கருத்துகள் பல்வேறு தரப்பிடம் இருந்து வருகின்ற சூழலில் வல்லினத்தின் சிறுகதை பொறுப்பாசிரியர் கே.பாலமுருகன் பொதுவாக எழும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார். ஒரு இலக்கிய படைப்பில் கூறப்படும் கருத்தை ஒட்டியே அதை படைத்த படைப்பாளின் குணமும் இருக்கும் என்று கூறப்படுகிறதே, இது சரியா? உதாரணமாக போதை பழக்கத்துக்கு அடிமையானவனின் வாழ்க்கையை கூற முனையும்…

குவர்னிகா: மலேசியக் கவிதைகள் ஒரு பார்வை

தமிழ் இலக்கியத்தின் தொன்மத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்காக உடனே அதன் நீண்ட நெடிய 2000 வருடக் கவிதை தொடர்பை அடையாளப்படுத்துவது தமிழ் இலக்கியச் சூழலின் கட்டாய / அபாயப் பணியாகிவிட்டது. ஆயிரம்கால பெருமையைப் பேசியே கவிதை நகர்ச்சியைச் சாகடித்துவிட்டோமோ என்றுகூட தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையிலிருந்து சமக்காலக் கவிதைகளைப் பற்றி பேசத் துவங்கும் ஒருவன் தனது விமர்சனத்தைக்…

சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் போலியான இலக்கிய புரிதல்களை என் கதைகள் உடைக்கும்

செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய சிறுகதை உலகில் முக்கிய ஆளுமையாக இருக்கும் கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார். கேள்வி : உங்களுடைய தனி அடையாளமே…

வார்த்தைகளுக்குள் உலகைப் பூட்டி வைத்தவள்- கவிஞர் பூங்குழலியின் நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – ஒரு பார்வை

கவிஞர் பூங்குழலி மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆண்டு கவிதை போட்டியின் வழியே எனக்கு முதலில் அறிமுகம் ஆனார். 2007ஆம் ஆண்டு நடந்த அப்போட்டியில் பூங்குழலியின் 7 கவிதைகள் பரிசுக்குரியதாகத் தேர்வுப் பெற்று முதல் மூன்று இடங்களையும் அவரே பெற்றிருந்தார். நான் அறிந்தவரை அதுதான் மலேசிய இலக்கியப் போட்டிகளில் முதன்முறையாக நிகழ்ந்த மிகப்பெரிய சாதனையாகும். ஆனாலும், கவிஞர்…

துரத்தியடிக்கப்பட்டவர்களின் கதை

வல்லினம் வெளியீடாக வெளிவரவிருக்கும் கே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’ சிறுகதை தொகுப்பின் முன்னுரை “தோட்டங்களிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.” ‘எழுத்தாளனின் முடிவுகள் தயக்கத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்துதான் உருவாகின்றன’. என்னுடைய எல்லாம் கதைகளிலும் தீர்வுகளும் முடிவுகளும் சொல்லப்படவில்லையென்றாலும், நான் சேகரித்து வைத்திருந்த ஒரு வாழ்க்கையின்…

முத்துசாமி செட்டியாரும் ஜப்பான்காரியின் ஆவியும்

எதிரிலுள்ள கார்கள்கூட தெரியாமல்போன இருள் கவிழ்ந்த ஒரு மழைப்பொழுது. நீண்ட வாகன நெரிசல். அம்மோய் கடைக்கு உடனே சென்று அமலாவை ஏற்ற வேண்டும் என்கிற தவிப்பில் மணியம் கால்கள் நடுங்க காருக்குள் இருந்தார். அவள் பிரத்தியேக வகுப்பு முடிந்து இந்நேரம் மழைக்கு ஒதுங்கி அம்மோய் கடையோரம் நின்று கொண்டிருப்பாள். அமலா இந்த வருடம் ஆறாம் ஆண்டு.…