
நேற்று மாலை லீ சாய் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்து என் முன்னால் நின்றான். சில வாரங்களுக்குப் பின் இன்றுதான் அவனைப் பார்க்கிறேன். வழக்கமாக பெரிய கேரியர் சைக்கிளில் வருபவன் நேற்று தலைதெறிக்க ஓடி வந்திருந்தான். அந்தப் பெரிய உடம்பு மழையில் நனைந்த பூனைக்குட்டி போல உதறிக் கொண்டிருந்தது. உயிர் பயம் அவன் உடலெங்கும் படர்ந்திருக்க வேண்டும். …














