
தற்கால கன்னட எழுத்தாளர்களில் விவேக் ஷன்பாக் குறிப்பிடத் தக்கவர். அவர் சிறுகதைகளை வாசித்த பின்னர் அவருடைய பிற நூல்களை வாசிக்க வேண்டுமென்ற உந்துதல் தன்னிச்சையாக எழுந்தது. அவற்றுள் ‘காச்சர் கோச்சர்’ என்ற குறுநாவலை மூன்று காரணங்களுக்காகத் தேடினேன். விவேக் ஷான்பாக் ஒரு மகத்தான கதைச் சொல்லி என்பதுதான் முதற் காரணம். வாசகனைச் சலிப்படையச் செய்யாத மந்திரப்…














