சிங்கப்பூர் வரலாற்றில் 1960களும் 1970களும் மிக முக்கியமான காலக்கட்டமாகும். மலேசியாவிலிருந்து பிரிந்து நிச்சயமின்மைகளோடு நாடு தள்ளாடிக்கொண்டிருந்த காலம் முதல் தசாப்தம். அதிக மக்கள் தொகை, வர்த்தகத் தேக்கம், வேலையின்மை, வீடுகள் பற்றாக்குறை, இனங்களுக்கிடையேயான பதற்றம் எனப் பலவித பிரச்சினைகளை நாடு எதிர்கொண்ட காலக்கட்டமிது. இரண்டாவது தசாப்தத்தை அரசியல் நெருக்கடிகள், பொருளாதாரச் சவால்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை…
Author: அழகுநிலா
குமரித்துறைவி: மகளாகிய அம்மையும் அப்பனாகிய மகனும்
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘குமரித்துறைவி’ குறுநாவல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி, அவரது ஐம்பத்தொன்பதாவது பிறந்தநாள் அன்று அவரது இணையதளத்தில் வெளியானது. கிட்டத்தட்ட நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட இக்குறுநாவலை வெளியான அன்றே வாசித்து முடித்தேன். வாசிக்கையில் மறைந்த என் அப்பாவின் நினைவும் எனது திருமணக்காட்சிகளும் வந்து, வந்து போயின. வாசிப்பின் சில…
நிகழ்காலத்தில் இருப்பவர்களும் நித்தியத்துவமானவர்களும்
சிங்கப்பூர் இயக்குனர் கே.ராஜகோபால் அவர்கள் இயக்கி 2016 ஆம் ஆண்டில் வெளியான ‘A Yellow Bird’ திரைப்படத்தைப் பார்த்தபோது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. பதினைந்து வருடங்களாக வாழ்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூரின் எந்தச் சுவடுகளும் இல்லாமல் முற்றிலும் வேறொரு சிங்கப்பூரை எனக்கு அறிமுகம் செய்த படம் அது.
ஓந்தி : புதிரான நனவிலியும் ஃபூகு மீனின் நஞ்சும்
சிங்கப்பூர் எழுத்தாளர் எம்.கே.குமார் அவர்களின் ‘ஓந்தி’ சிறுகதைத் தொகுப்பு ‘யாவரும்’ பதிப்பகத்தாரால் 2019ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் எட்டு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் சு.வேணுகோபாலின் விரிவான முன்னுரையைக் கொண்டிருக்கிற இத்தொகுப்பு ‘சிங்கப்பூர் இலக்கிய விருது 2020’ தகுதிச் சுற்றில் தேர்வாகி உள்ளது. 2017ஆம் ஆண்டு எழுத்தாளர் மாலன் அவர்கள் தேசிய…
பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும்
‘பேய்ச்சி’ நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கு முன்பு பேச்சியைப் பற்றிய எனது அறிதல்களையும் அனுபவங்களையும் முதலில் எழுத விரும்புகிறேன். என்னுடைய சிறுவயதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்த்தேன். அம்மாச்சி வீட்டிலிருந்த நாய் ஒன்று குட்டிகள் ஈனுவதைச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நாய் தனது குட்டி ஒன்றைச் சாப்பிட…
இரத்தம் விற்பவனின் சரித்திரம்
சீன எழுத்தாளர் யூ ஹூவா 1994ஆம் ஆண்டில் எழுதிய இந்த நாவல் ‘Chronicle of Blood Merchant’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. எழுத்தாளர் யூமா வாசுகி தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். நாவலின் பெயரைப் பார்த்தவுடன் போரைப் பற்றிய புனைவாக இருக்குமென்ற என் யூகத்தை இந்நாவல் முற்றிலுமாகப் புரட்டிப்போட்டது. உலகிலேயே பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்…
எங் கதெ: ஆணின் அகவெளி
“என்னெ மாரியே ஒரு பொம்பள பொலம்புனா கற்புக்கரசி, கண்ணகி, உத்தமி, பத்தினின்னு பட்டம் கொடுப்பாங்க. ஆம்பள பொலம்புனா பொட்டப் பயம்பாங்க. பொழக்க தெரியாதவன்னு சொல்லுவாங்க”, இப்படியாக சமூகத்தின் பார்வையில் பொழக்க தெரியாதவனாகவும் நமது பொதுப்புத்திக்குப் பொட்டப் பயலாகவும் தெரிகிற விநாயகம் என்ற ஆண்மகனின் பத்து வருடத்துக் கதைதான் எங் கதெ. ஓர் ஆணின் கதை என்பது…
பவா என்ற கதைசொல்லியின் புனைவுலகம்
பவா என்ற மனிதரை இரண்டு விதமாக அறிவேன். ஒன்று வம்சி பதிப்பகத்தின் உரிமையாளராக. மற்றொன்று ஒரு கதைசொல்லியாக. நேரடியாக அவரைச் சந்தித்திராவிட்டாலும் யூட்யூபில் உள்ள காணொளிகள் வழியாக அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.சில கதைகளை வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு நிலைகளுக்கு முற்றிலும் மாறான உணர்வெழுச்சியை ஏற்படுத்த வல்லது பவாவின் கதை மொழி. உதாரணத்திற்கு அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’…
திறவுகோல் 9: வைகறைப் பூக்கள்
சிங்கை எழுத்தாளர் மா.இளங்கண்ணன் அவர்களால் எழுதப்பட்டு, தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவில் பதிக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு வெளியாகி உள்ள இந்த வரலாற்றுப் புனைவு நாவல் 1941ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரையிலான சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் என்ற தன் இயற்பெயரை இளங்கண்ணன் என்று மாற்றிக் கொண்ட நூலாசிரியரின் தனித்தமிழ்ப்…
திறவுகோல்8: சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை
இந்த தன்வரலாறு நூல் மலேசிய எழுத்தாளர்அ.ரெங்கசாமி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வல்லினம் விருது அ.ரெங்கசாமி அவர்களுக்கு கொடுக்கப்பட்டதை முன்னிட்டு இந்நூல் வல்லினம் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டி குறிச்சி என்ற கிராமத்திற்கு அருகே உள்ள உலகியூருணிப்பட்டி என்ற சிற்றூரிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிழைப்புத் தேடி…
திறவுகோல் 7: திரிந்தலையும் திணைகள்
இந்தக் குறுநாவல் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கரால் எழுதப்பட்டு, சந்தியா பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இந்நூலூக்காக நூலாசிரியர் கரிகாலன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்கள் பள்ளியில் ஒன்றாகப் படித்து, திருமணமான பிறகு வெவ்வேறு நாடுகளில் வாழ நேரிடும் இரண்டு பெண்களின் வாழ்க்கைப் போராட்டம்தான்…
திறவுகோல் 6: ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்
மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனால் எழுதப்பட்டு சுடர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். ‘ஆப்பே கடையில் நடந்த 236-ஆவது மேசை உரையாடல்’, ‘மலை உச்சியில் உறைகிற மௌனங்கள்’ என இரண்டு குறு நாவல்கள் இந்நூலில் இடம் பெற்றிருந்தாலும் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ என்ற நாவல்தான் என்னை…
திறவுகோல் 5: வேர்கள்
சிங்கப்பூரில் பெண்கள் எழுதியுள்ள நாவல்கள் பக்கம் என் பார்வையை சற்றுத் திருப்பலாம் என்ற எண்ணம் எழுந்தபோது என் கைக்குக் கிடைத்தது திருமதி.நூர்ஜஹான் சுலைமான் எழுதியுள்ள ‘வேர்கள்’ என்ற நூலாகும். தங்கமீன் பதிப்பகத்தால் பதிக்கப்பட்டு 2012-ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்தக் குறுநாவல் இருபத்து மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் முஸ்லீம்களின் புலம்பெயர்தல் தொடங்கிவிட்டது.…
திறவுகோல் 4: வானத்து வேலிகள்
மறைந்த மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசுவால் எழுதப்பட்டுள்ளது இந்நூல். திரு.ரெ.கார்த்திகேசுவை ஒருமுறைதான் நான் சந்தித்திருக்கிறேன். அதுதான் முதலும் கடைசியுமான சந்திப்பு. 2015-ஆம் ஆண்டு, நண்பர் ஷாநவாஸிற்கு கரிகாற்சோழன் விருது வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்ள கோலாலம்பூர் சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டவுடன், அவர் கனிவான குரலில் உங்கள் கதைகளைப் படித்திருக்கிறேன் என்று கூறி…
திறவுகோல் 3: குருவிக் கோட்டம்
2014 ஆம் ஆண்டு, அங் மோ கியோ நூலகத்திற்குச் சென்றிருந்தபோது ஒரு காட்சி என்னைக் கவர்ந்திழுத்தது. வட்ட வடிவ வெள்ளை நிற மேசை ஒன்றின் நடுவில் பறவைக் கூடு ஒன்று முட்டைகளோடு அமைக்கப்பட்டு அதைச் சுற்றி பலவிதமான காகிதப் பறவைகள் உருவாக்கப்பட்டிருந்தன. சில காகிதப் பறவைகள் மேசைக்கு மேலே பறக்குமாறு செய்யப்பட்டிருந்தன. முழுவதும் வெண்மையாகக் காட்சி…