Category: விமர்சனம்

ரிங்கிட் குறுநாவல் விமர்சனம்

(விமர்சனப் போட்டியில் வென்ற கட்டுரை) பணம் என்று வரும்போது ஏழையும் பணக்காரனும் ஒன்றுதான். பணம் தேடுதல் இன்று வாழ்வின் அடிப்படை நோக்கமாக மாறிவிட்டது. இரைதேடலின் நவீன வடிவம். ஆனால் எந்த விலங்கும் தனக்கான சிறையை ஏற்படுத்திக் கொள்வதில்லை. மனிதன் பணம் என்ற ஒன்றை உருவாக்கியதன் மூலம் தன்னைத்தானே அதற்குள் சிறைப்படுத்திக் கொண்டுவிட்டான். தங்கத்தில் கழிவறைத்தாள் வைத்திருப்பவர்…

துளிர்க்கும் சிறகுகள்

(விமர்சன போட்டியில் வென்ற கட்டுரை) மனித வாழ்வின் பொழுதுபோக்கு தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே படைக்கப்படும் ஒரு கலைக்கு ஆயுள் குறைவு. அது ஒரு நுகர்பொருள் மட்டுமே. நுகர் பொருளாக இருப்பதாலேயே அது காலவோட்டத்தில் வணிகப்பொருளாகவும் மாறி விடுகிறது. அதே கலை மனித வாழ்வின் சமத்துவம் சார்ந்த தேவைகளைப் பேசும் குரலாக மாறும்போது அது மக்களுக்குரிய…

எஸ். பி. பாமா: கலையமைதியை விழுங்கிய தீவிரம்

மலேசிய பெண் எழுத்தாளர்களில் 80களில் எழுதவந்த எழுத்தாளர் எஸ்.பி. பாமா. பின்னர் வானொலி தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002-ஆண்டு முதல் மீண்டும் அச்சு ஊடகங்களுக்கு எழுதத் துவங்கினார். நாளிதழ் ஞாயிறு பதிப்புகளில் வெளிவந்த (2002க்கு பிறகு என்று நினைக்கிறேன்) பதிமூன்று சிறுகதைகளைத் தொகுத்து ‘அது அவளுக்குப் பிடிக்கல’ என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார்…

மலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (இறுதிப் பகுதி)

கே. பாலமுருகன். (2013). இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள். மலேசியா: வல்லினம் பதிப்பகம். இத்தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். அவற்றில் குறிப்பிடத்தக்க சிறுகதை, ‘தங்கவேலுவின் 10-ஆம் எண் மலக்கூடம்’, ‘இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள்’ மற்றும் ‘பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீடு’ கதைகள்தான். மற்ற சிறுகதைகள் முன்கூறியபடி விரிவாகப் பேசவேண்டிய தேவையில்லாத கதைகள். தொகுப்பின் முதல் கதையான ‘தங்கவேலுவின்…

புனிதத்தை நகல் எடுக்கும் பாவையின் கதைகள்

ந.மகேஸ்வரி கதைகள் எழுதிய அதே காலகட்டத்தில் வடக்கில் இருந்து படைப்புகளை தந்துகொண்டிருந்தவர் பாவை. இவரின் சிறுகதை தொகுப்பு 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானப்பூக்கள்’. இந்நூலை தனி ஒருவராக வெளியிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முன்னுரையில் வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள  12 சிறுகதைகளும் 1972 முதல் 1986 வரை அச்சு ஊடகங்களில் வெளிவந்தவை என்பதோடு …

நழுவிக் கொண்டே இருக்கும் ந.மகேஸ்வரியின் கதைகள்

மலேசிய இலக்கியம் உருப்பெற்று வளர்ந்த அதே தடத்தில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சியும் அமைந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. மேற்கண்ட இலக்கிய ஈடுபாடும் வளர்ச்சியும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மேலும் வளர்ந்தது. 1960கள் மலேசிய நவீன இலக்கியத்தில் நல்ல வளர்ச்சி படிகளைப் பதிவு செய்துள்ளது. பொதுவாகவே இன்று நாட்டில் சிறந்த முன்னோடி இலக்கியவாதிகளாக அறியப்படுவோர்…

மலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (முதல் பகுதி)

1990-களுக்குப் பிறகான உலகமயமாக்கல், நவகாலனியவாத எதிர்ப்பு சிந்தனைகள், அதைத்தொடர்ந்து உருவான நவீனத்துவம், 2000-க்குப் பிறகான, அமைப்புகளை எதிர்க்கும் பின்நவீனத்துவச் சிந்தனை போன்ற அடுத்தடுத்த சீரான நகர்வுகளைத் தமிழ்நாட்டு இலக்கியச் சூழலைப்போல மலேசிய இலக்கியத்தில் காணமுடியாது. இங்குள்ள நாளிதழ்களில் பிரசுரமாகும் பெரும்பகுதிப் படைப்புகளை வெகுஜன வாசிப்புக்கான படைப்புகளின்கீழ் வகைப்படுத்திவிட முடியும். அப்படைப்புகள் பொதுவாக நல்லறம் சார்ந்த அறிவுரைகள்,…

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் : மழையாகாத நீராவி!

மலேசிய, சிங்கப்பூர் பெண் படைப்பாளிகளில் மிக அதிகமாக தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுபவர் ஜெயந்தி சங்கர். மொழிபெயர்ப்புத் துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. அவரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ நூலை முன்மாதிரியாகக்கொண்டு மலேசியாவில் ஒரு நூல் தொகுக்கப்பட வேண்டும் என நண்பர்களிடம் பரிந்துரைத்ததுண்டு. ஜெயமோகனின் ‘பொதுவழியில் பெரும்சலிப்பு’ எனும் அவரது சிறுகதைகள் குறித்த விமர்சனத்திற்குப்பின் தனது முக்கியமான…

வல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை

“எனது கதைகள் விமர்சகர்களின் அளவுகோல்களுக்குள் அடங்காதவை. என் கதைகளின் அருகில் அளவுகோல்களை வைப்பதன் மூலம், அவர்கள் என் கதையை அளக்கவில்லை. அவர்களின் அளவுகோல்களை அளந்துகொள்கிறார்கள்.” சொன்னது புதுமைப்பித்தன். அவர் சொன்னது என்னுள் உண்டாக்கிய தயக்கத்துடன் வல்லினம் 100 தொகுப்பில் இடம்பெற்ற 11 சிறுகதைகளைப் பற்றி எழுதுகிறேன். வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை,…

வல்லினம் 100 விமர்சனக் கட்டுரை – ஒரு பார்வை

வல்லினம் 100′ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு விமர்சனக் கட்டுரைகளுள் சீ.முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவல்கள் தொகுப்பைக் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரையும் ஒன்று. அக்கட்டுரையைத் தவிர்த்து மற்ற ஐந்து விமர்சனக் கட்டுரைகளைக் குறித்து என் கருத்துகளை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன். முதலாவது, முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு வந்து‘ நூல் குறித்த அழகுநிலாவின் விமர்சனக் கட்டுரை. தற்காலத்தில்…

வல்லினம் 100 ஆய்வுக்கட்டுரைகள் – ஒரு பார்வை

‘சொல் புதிது சுவை புதிது’ வல்லினம் 100-இல் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும்சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய கூறுகள். எங்கும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடியே உணர்ச்சி மிகையில்லாமல் பதிவாக்கப்பட்டிருப்பது கட்டுரைகளின் பலம். மொழி, இனம், இலக்கியம், இதழியல், கல்வி, அரசியல் என பல்துறை சார்ந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே…