
அன்று காலை அலுவலகத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அழகியொருத்தி வேலை கேட்டு வந்திருந்தாள். பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கும் வேலை என்பதால் ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் சுற்றை முடிக்கும்போது அலுவலக வாசல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த யுவதியைப் பார்க்க நேர்ந்தது. யுவதியைக் கண்டதும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் போல ஏதோ ஒன்று காதில்…
















