
தஞ்சாவூரில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனக் கிளை மேலாளர் சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த போது “சக்தி கோவிந்தனைத் தெரியுமா?” என்றார். “ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னேன். “புதுக்கோட்டை அருகில் உள்ள ராயவரம்தான் அவரது சொந்த ஊர். அங்கே நடக்கின்ற ஒரு விழாவிற்காக அவரது மனைவியும் மகனும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களாம். சந்திக்கிறீர்களா…” உச்சி வெயில். எதிர் அனல் காற்று.…













