Category: பத்தி

நீலம் மலர்ந்த நாட்கள்

உடல் தளர்ந்து பின்னால் படுக்கையில் சாய்ந்து, மெல்ல என் தலையை மட்டும் தூக்கி பார்த்தேன். முழங்கை அளவே உள்ள சிற்றுடல் ஒன்றைத் தலைகீழாக டாக்டர் பிடித்திருந்தார். இத்தனை நாட்களாக நான் என்னுள் எனது மட்டுமே என்றுணர்ந்த உயிரசைவின் உடலுருவம். நீல நிறம். அன்று மதியம் இந்திர நீலத்தில் வாசித்த வரி ஒன்று நினைவில் எழுந்தது, ‘நீலம்…

ஒலியென எழுவது ஞானமே

மொழியைச் சுருதி எனச் சொல்லும் வழக்கம் நம் மரபில் உண்டு. கம்பராமாயணத்தில் சுருதி என்ற சொல் வேதத்தைச் சுட்டவும், மொழியைச் சுட்டவும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமூலர் ‘சுருதிச் சுடர்கண்டு சீற்ற மொழிந்து’ எனச் சுருதியைச் சொல் அல்லது ஒலி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறார். சமஸ்கிருத அகராதியை உருவாக்கிய மேக்ஸ் முல்லர் சுருதி (Shruti) என்ற…

கடவுளும் கலையும்

குளியலை முடிப்பதற்குள் சனிரா பஜ்ராச்சார்யாவிடமிருந்து (chanira bajracharya) இரண்டு முறை அழைப்புகள் வந்திருந்தன. விரைவாகக் குளியலை முடித்து, மிகுந்த உற்சாகத்துடன் அவளுக்கு மீண்டும் அழைத்தேன். அவளின் குரலை முதன் முறையாகக் கேட்கப் போகிறேன்; எந்த இடையூறும் இருக்கக் கூடாது என உறுதி செய்து கொண்டே தொலைப்பேசியைக் காதில் ஒத்திக் கொண்டேன். இரு முறையும் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.…

மண்டலா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுபாவிடமிருந்து ஒரு முகநூல் பதிவு. அவள் பதிவிட்டிருந்த படத்தைப் பார்த்ததும், பணிச்சுமையினால் ஏற்பட்ட களைப்பு எல்லாம் பறந்தோடியது. கண்கள் அகலமாக விரிந்தன. முகம் புன்னகையை ஏந்திக்கொண்டது. ஒரு குளத்தில் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் மிதக்கும் நீர் மலர்கள் போல மனம் அவ்வளவு அமைதியானது. அவள் அனுப்பிய படத்தை மிக உன்னிப்பாகப்…

யோக முத்ரா

காலை 6.30 மணிக்கெல்லாம் கிளம்பி யோகா மெத்தையை (Yoga Mat) எடுத்துக் கொண்டு வீட்டின் பால்கனியைத் திறந்தேன். காலை பனியைப் பார்த்து அதிக நாளாகிவிட்டது. பனி எங்கும் படர்ந்திருந்தது. பனியைப் பார்த்ததும் மனதில் ஓர் அமைதி பிறந்தது. அது யோகா செய்வதற்கான மனநிலை. உடனே வாகனத்தை நோக்கி நடந்தேன். என் வாகனம் முழுக்க பனித்துளிகளால் ஈரமாக…

இசையும் வரியும்

தியாகராஜ சுவாமிகள் இயற்றிய ‘கலிகியுண்டேகதா’ எனும் கீரவாணி ராகத்தில் அமைத்த ஒரு புகழ் பெற்ற தெலுங்கு கிருதியைச் சங்கீத ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். அன்றையச் சங்கீத வகுப்பு கீரவாணி ராகத்தால் சுவாரசியமாக இருந்தது. ஆனால் என் மனதில் நிறைய குழப்பம்; கோபம். சங்கீத வகுப்பு தொடங்கும் முன் அம்மா என்னைத் திட்டியிருந்தார். என்னைத் திட்டினால் கூட…

கீரவாணி

காலையிலிருந்தே ஒரே காற்றும் மழையுமாக இருந்தது. சங்கீத வகுப்பு இருக்கும் நாளில் மழை பெய்தால் எனக்கு கொஞ்சம் சலிப்பு வரும். காரணம் சங்கீத ஆசிரியர் ஈப்போ மாநிலத்தைச் சேர்ந்தவர். குளிர் தாங்க மாட்டார். அதுவும் 1997-இல் கேமரன் மலை பசுமை மாறாமல் இருந்தக் காலம். “எப்படிதான் இந்தக் குளிருல இருக்கீங்களோ? அதுவும் குளிர் சட்டைக் கூட…

கூலி தரும்

திரைப்பாடல்களைக் கூர்ந்து கேட்பதும், அவை மனதில் பதிந்ததும், சன்னமாக முனகிக்கொள்வதும் எனக்கு சுமார் பத்துவயதிலிருந்தே வழக்கமாக இருந்தது. ஆனால் இசையை முறையாகக் கற்கவேண்டும் என்றோ இசைக்கருவிகளை வாசிக்கவேண்டும் என்றோ தோன்றியதில்லை. பின்னாளில் ஶ்ரீபெரும்புதூரில் வேலைக்குச் சென்றபோது கிடார் வாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை பிறந்துவிட்டது. ஏன் குறிப்பாக கிடாரைத் தேர்வுசெய்தேன் என்பதற்கு இன்றுவரை காரணம் கிடைக்கவில்லை. …

இறுதி சாகசம்

என்னுடைய அப்பாவழித் தாத்தாக்கள், அப்பாவின் அப்பாவும் சித்தப்பாவும், பள்ளிப்படிப்போடு நிறுத்திக்கொண்டனர். இருவரும் சிறுவயதிலிருந்தே எந்த வேலையையும் சொந்தமாகக் கற்றுக்கொள்வதில் தேட்டையாக இருந்தனர். பதின்மவயதிலேயே எண்ணெய் வியாபாரத்தைத் தொடங்கினர். அதற்கு அதிக முதலீடு தேவையில்லை. ஒரு செக்குக் கட்டையும் ஒருஜோடி மாடும் போதும். குலத்தொழில்தான் என்றாலும் அவர்கள் தொழிலுக்குப் புதிது.

பிச்சைப் புகினும்

இந்தக் கொரோனா காலகட்டத்தின் அளவுக்கு மோசமில்லை என்றாலும், பத்தாண்டுகளுக்கு முந்தைய சிங்கப்பூரிலும் பலருக்கும் எங்கே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்றொரு பயம் இருந்தது. அதற்குக் காரணம் 2007-2009 காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சுணக்கம், அதைத்தொடர்ந்த ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள். எனக்குப் பரவாயில்லை. அதற்கு முந்தைய இரண்டாண்டுகளில் இருந்ததுபோல நிறுவனத்தில் கூடுதல்பணி கிடைக்கவில்லை. அதனால் கூடுதல்…

இரண்டொழிய இன்னொன்று

அது 1998ஆம் ஆண்டின் பிற்பகுதி. தமிழ்நாட்டில் ஒரு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பட்டயப் படிப்பை முடித்திருந்தேன். பட்டப் படிப்பைத் தொடர எண்ணியிருந்தேன். ஆனால் குறைந்த கட்டணப் பிரிவில் இடம் கிடைக்காமல் போனது. தேவையான அளவைக்காட்டிலும் சுமார் இரண்டு விழுக்காடு என்னுடைய மதிப்பெண் குறைவு. அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கும் பிரிவில் சேரலாம். ஆனால் விருப்பமில்லை. அதனாலென்ன?…

பேய்கள் உலவும் உல்லாச உலகிதுவே

குட்டிச்சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான பேய்கள் உள்ளன. அம்புலிமாமா நூல்களில் வேதாளம் குறித்துப் படித்ததுபோக வருடத்துக்கு எப்படியும் பழிவாங்கும் வகையறாக்களாகப் பத்து பேய்ப்படங்கள் திரையரங்குகளை நிரப்பிவிடுகின்றன. அக்கால விட்டாலாச்சாரியார் மாயாஜாலப்படங்கள் முதல் இன்றைய கொரிய-ஜப்பானிய பேய்ப்படங்கள் வரை தனிசந்தை மதிப்புக் கொண்டவையாக இருக்கின்றன. இடையிடையே திகிலூட்டும் நிகழ்ச்சிகள் என…

நவீன இலக்கிய முகாம்: ஒரு முன் – பின் பதிவு

“மணிபர்ச வீட்டுல விட்டு வந்துட்டேனே,” என சை.பீர்முகம்மது சொன்னபோது பதற்றம் தொற்றிக்கொண்டது. முதுமையின் மறதிதான். காரை அவசரமாகத் திருப்பும் சூழல் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இல்லை. பின்வாக்கிலேயே வீட்டை நோக்கி காரை விட்டேன். என் முன்னாள் மாணவன் நிமலன் காரை விட்டு இறங்கி, வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். சு.வேணுகோபால் பதற்றம் வேண்டாம் எனப் பதற்றமாகச்…

நாவல் என்பது… முகாம் அனுபவம்

வல்லினம் நடத்தியுள்ள இரு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கலந்து கொண்டுள்ளேன். அவை யாவும் ஒருநாள் நிகழ்வாகும். அவற்றில் ஏற்படாத எதிர்பார்ப்பினை இம்முறை கூலிம் கெடாவில் நடந்த மூன்று நாள் நவீன இலக்கிய முகாமானது என்னுள் ஏற்படுத்தியிருந்தது. வல்லினம் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் இலக்கியம் பற்றிய தெளிவற்ற பார்வையைக் கொண்ட  எனக்கு, இலக்கியம் பற்றிய புரிதலையும் தெளிவையும் கொடுத்து…

சு. வேணுகோபாலின் நாட்டார் வழக்காற்றியல் ஒருபார்வை

21.12.2019 அன்று சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்தில் மூன்றாம் அமர்வாக நாட்டார் வழக்காற்றியல் பற்றி சு. வேணுகோபால் ஒரு சிறந்த தெளிவுரை வழங்கினார். சரியாக பிற்பகல் 2.30 மணியளவில் உரை ஆரம்பித்தது. எழுத்தாளர் சு. வேணுகோபால் அளித்த கடந்த உரைகள் அனைத்தும் கேட்கும் போதே நம் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் உராய்ந்து விட்டு செல்வதாகவே…