
மொழியைச் சுருதி எனச் சொல்லும் வழக்கம் நம் மரபில் உண்டு. கம்பராமாயணத்தில் சுருதி என்ற சொல் வேதத்தைச் சுட்டவும், மொழியைச் சுட்டவும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமூலர் ‘சுருதிச் சுடர்கண்டு சீற்ற மொழிந்து’ எனச் சுருதியைச் சொல் அல்லது ஒலி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறார். சமஸ்கிருத அகராதியை உருவாக்கிய மேக்ஸ் முல்லர் சுருதி (Shruti) என்ற…