
‘மண்ணும் மனிதரும்’ நாவலை வாசித்து முடித்த பின்னர் தமிழ்விக்கி தளத்துக்குச் சென்று எழுத்தாளர் சிவராம் காரந்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் பதிவை வாசித்தேன். கலைக்களஞ்சியத் தொகுப்புகள், சூழியல் செயற்பாடுகள், யக்ஷ கான கலை மீட்டுருவாக்கம் எனப் பிரமிக்கத்தக்க அறிவு பங்களிப்பைக் கன்னட அறிவுலகத்துக்கு விட்டுச் சென்றிருக்கிறார். கட்டுரையின் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருந்த சுட்டியைச் சொடுக்கி காரந்த் யக்ஷ கானக்…