முக்கோண கதைகள் – 2

வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள்-2 இலக்கிய விழா டிசம்பர் 6-ஆம் திகதி தலைநகரில் உள்ள Kuala Lumpur & Selangor Chinese Assembly Hall இல் நடைபெற உள்ளது. இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் பல்லின எழுத்தாளர்களும் பங்கெடுக்கின்றனர். தமிழுக்கு மொழியாக்கம் கண்ட பத்து சமகால மலாய்ச் சிறுகதைகளின் தொகுப்பு, மலாய்க்கு…

“எந்தநிலமும்வெறுமையானதுஅல்ல,” ரமா சுரேஷ்

எழுத்தாளர் ரமா சுரேஷ் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். ‘மாயா’ இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிங்கப்பூர் புனைவுகள் குறித்து உரையாடல்களை முன்னெடுத்து வருகின்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு உட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81, 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவருடைய முதல் நாவலான அம்பரம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்து…

ஆகூழ்: வரலாற்றுக்குள் சிக்கிக்கொண்ட கலை

வரலாறு எப்பொழுதுமே தன்னியல்பாக உருவாவதில்லை. கண்ணுக்குத் தெரிந்த அமைப்பு மாற்றங்கள், வரலாற்றுக் காரணங்கள், நிகழ்வுகள் தொடங்கி அறியப்படாத நுண்கண்ணிகளான மனித உணர்வுகள், உளவியல் எனப் பலவற்றுடன் தொடர்புடையதாகவே வரலாறு இருந்து வந்திருக்கின்றது. வரலாற்றாய்வாளர்கள் ஒருவகையில் வரலாற்றைத் தர்க்கப்படுத்திக் கொண்டிருக்கையில் புனைவாசிரியன் அதற்குள் அறியப்படாத வெளிகளை நோக்கிப் பயணிக்கிறான். அந்தப் பயணத்தை வெறும் தகவல்களின் துணைகொண்டு மட்டும்…

அபயஸ்தம்

வீட்டின் நடுவே கூரையிலிருந்து கசிந்த துளிகள் கீழே வைக்கப்பட்டிருந்த அலுமினியப் பாத்திரத்தில் விழுந்தன. ஒவ்வொரு துளிக்குப் பிறகும் வீடு சிறிது நேரம் அமைதியாகி, அடுத்த துளியில் மீண்டும் ஒலித்தது. அந்த மங்கிய வெளிச்சத்துக்குக் கீழே பிரம்புப் பாயில் வயிற்றைக் கவிழ்த்துப் படுத்தபடி, உடைந்த பின்சக்கரமுள்ள பச்சை லாரியை அவன் முன்னும் பின்னும் தள்ளிக்கொண்டிருந்தான். சமையலறைக்கும் வரவேற்பறைக்கும்…

பல கடல்கள் கடந்து:  உலகப் பெண் படைப்பாளர்களின் பெண்ணிய நோக்கு

‘பல கடல்கள் கடந்து’ என்ற மொழிபெயர்ப்பு நூல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமகாலப் பெண் எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட நூலாகும். நரேன் தேர்ந்தெடுத்த இக்கதைகள் எனக்கு அபாரமான வாசிப்புச் சுவையைக் கொடுத்தது. பல கதைகளை வாசித்த பின்னரே, இந்த எட்டு கதைகள், தமிழுக்குப் புதியது என்று முடிவெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் இந்த மெனக்கெடல் வாசகனுக்கு வாசிப்பின்பத்தையும்,…

காட்டில் தவழ்ந்த கதைகள் – 1

2022 ஆம் ஆண்டு தமிழ்விக்கி தளத்துக்காக சபா மற்றும் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி இனங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு அமைந்தது. அவர்களில் பல இனத்தவர்களுக்கு முறையான தகவல்கள் விக்கிப்பீடியா பக்கத்தில் கூட இல்லை. காலனிய ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வேடுகளிலும் குறிப்புகளிலும் கிடைத்த தகவல்களை ஒட்டியே கட்டுரைகளை எழுதினேன். அறிமுகக் கட்டுரை என்ற வகையைத்…

லீகாட்: பருவக் கோளாறின் கொந்தளிப்பு

ஒரு முழுமையான வாழ்க்கையைச் சொல்வதுதான் நாவல் என்கிறார்கள் சான்றோர்கள். ஆனால் சிதறிக் கிடக்கும் வாழ்க்கையிலிருந்து நாவலை உருவாக்குவது எளிதானதல்ல. அது கைதேர்ந்தவர்களின் திறன்களால் மட்டுமே கூடிவருவது. தரையில் கொட்டிய தானியங்களைப்போல  விரவிக்கிடக்கிறது வாழ்க்கை. அதனைப் பொறுமையாகப் பிரித்து எடுத்து உணவாகச் சமைப்பதற்கு ஒப்பானதுதான் நாவல். அதுவே ஒரு கட்டமைப்புக்குள் அடங்கும்போதுதான் கலையாகிறது. அந்த ஒருங்கமைவுக்குள் கூடிவராமல்…

சாம்பசிவம் – ஞானாமிர்தம்: மலேசிய, இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின்வரலாற்றுப்பதிவு

மலேசியாவில் நூறாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த நாவல், ‘சாம்பசிவ ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் ஓர் இனிய கற்பனா சரிதம்’. கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1927ஆம் ஆண்டு வெளிவந்த இந்நாவல், மலேசிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடி இலக்கியங்களில் ஒன்று. நூலாசிரியரின் அருணாசலம் நாகலிங்கத்தின் (1901-1979) 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகள் நா.…

கதைக்குள் பிணைந்த கட்டுக்கதைகள்

எழுத்தாளர் ம. நவீன் எழுதிய ‘வேப்டியான்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் மாறுபட்ட உலகத்தின் விளிம்பில் கால்பதிக்கச் செய்து அதன் ஆழத்தை எட்டிப்பிடிக்கத் தூண்டுகிறது. ஒவ்வொரு கதையையும் ஒருமுறைக்கு இருமுறை வாசித்திட்ட பிறகே சில முக்கிய இடங்களை அடையாளம் கண்டும் கதை நகர்த்தலின் மையத்தைத் தொட்டும் புதிய அனுபவங்களை உருவாக்கி அதனூடே பயணிக்க முடிந்தது.…

சாம்பலாகி சுடர்ந்தெழும் நாரிகள்

மிக விரைவில் வல்லினம் பதிப்பில் வெளிவரவுள்ள மஹி ராமகிருஷ்ணனின் கவிதை நூல் தமிழ் மொழியாக்கம் ஒரு பகுதி.  காளியின் மகள்கள் ஒரு சேர காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது இடிக்கப்பட்ட வேம்பு இலையின் சுகந்தமும் வெடிமருந்தின் மணமும். பாட்டிகள் மண்ணில் மண்டியிட்டு ஒரு பெரும் புரட்சியையே விழுதாக அரைத்துக் கொண்டிருப்பது போல அவை தோன்றச் செய்தது.…

நிலவுக்கு ஒரு நியூக்ளியர் முத்தம்

1 “வாழ்க்கைல எப்பவுமே நாம எடுக்குற சின்ன முடிவுக தான் பெரிய விஷயங்களா பாத்து நம்மள கொண்டு போகும்” என என் அப்பா அன்று சொன்னபோது, வீட்டு முற்றத்தில் விரிக்கபட்ட பாயில் அவரின் கையில் தலைவைத்து படுத்து நான் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று 33 ஆண்டுகள் கழித்து விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் அணு உலையின் கண்ணாடி…

அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள்

“ஃப்ராங்க் ம்கோர்ட் (Frank McCourt) என்ற பிரபலமான அமெரிக்க எழுத்தாளரிடம் நான் கேட்டிருக்கிறேன். ‘நீங்கள் எப்படி எளிமையாக, அதே சமயம் நுட்பமாக புதிய பார்வையில் எழுதுகிறீர்கள்?’ என்று. அவர் சொன்னார் ‘நான் ஒரு கதை சொல்லி. எப்படி கதை சொன்னால் அது வாசகர்களுக்கு போய்ச் சேரும் என்ற நுட்பத்தை தெரிந்து வைத்திருக்கிறேன்.’ என தனது பேட்டியில்…

வாழ்தலின் பயன் – இகிரு திரையிடல் அனுபவம்

உலகின் முக்கியமான சினிமாக்களைக் கண்டு உரையாடும் பேசும் படம் சந்திப்பின் நான்காவது நிகழ்ச்சி 22 ஆகஸ்டு 2026 அன்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்முறை சந்திப்புக்கான படமாக ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவாவின் (Akira Kurosawa) ‘இகிரு’ (Ikiru) திரைப்படம் திரையிடப்பட்டது. உலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இயக்குநராக அகிரா குரோசாவா மதிப்பிடப்படுகிறார். ரஷோமோன்…