தேவதைகளற்ற வீடு: ஒளிந்து விளையாடும் கதைகள்

மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களுள் ஒருவர் கே. பாலமுருகன். ஈராயிரத்தின் மத்தியில் புனைவுகளை எழுதத் தொடங்கிய அவர், சிறுகதை வடிவங்களில் நிகழ்த்திய பரிட்சார்த்த முயற்சிகளாலும் அதுவரை மலேசியத் தமிழ்ப் புனைவுகளில் அதிகம் வெளிப்படாத விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை எழுதியதாலும் உடனடியான கவனத்தைப் பெற்றார். தோட்டப்புறங்களில் இருந்து புலம்பெயர்ந்து பெருநகருக்குள் நுழைபவர்களின் அகநெருக்கடிகளையும்…

ஜொக்ஜாவில் அடைமழை

அவனைப் பற்றி பெரிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை. அதாவது, ஜமாலி தன் கல்வியை முடித்த பிறகு, கலை, பண்பாடு தொடர்பான அமைச்சில் வேலைக்குச் சேர்ந்தான். பல்கலைக்கழகத்தில் அவன் விவசாயத்துறையில் படித்திருந்தான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். ஆகவே, கலை பண்பாட்டுத் துறையில் வேலைக்குச் சேர்ந்தபோது அவன் மூளை காலியாக இருப்பது போல உணர்ந்தான். ஜமாலி,…

கிருஷ்ணை

நான் தங்கியிருந்த ஹாஸ்டலின் வெளியே நீண்டிருந்த பச்சை மாமரத்தின் சிறு கிளையின் மேல் அமர்ந்து கொண்டு ஒரு கருங்குயில் கூவியது. அவ்வொலி மிக அருகில்தான் கேட்டது. முழு மாமரமும் தெரியும் ஜன்னலைக் கொண்ட அறை அது. நீண்டு வளர்ந்து பெருத்திருந்த மாமரக் கிளை மட்டும் என் அறையைத் தொடும் வரை வளர்ந்திருந்தது. அங்கே தான் அந்தக்…

அலை வீழ்த்திய வாழ்வு- மண்புழுக்கள் நாவல்

மலேசியத் தமிழர்களின் வாழ்வை மலேசியப் புனைவிலக்கியம் காட்டும் சித்திரிப்புகளிலிருந்து நான்கு காலக்கட்டங்களாக வகைப்படுத்தலாம். முதலாவதாக, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து பஞ்சம், பசி காரணமாகவும் வாழ்வாதாரத்தைத் தேடியும் ரப்பர் தோட்டங்களில் சஞ்சிக்கூலிகளாகப் பணியாற்ற புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையின் சித்தரிப்பவையாகும். அதற்கடுத்த காலக்கட்டத்தில், தோட்டங்களில் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலக்கட்டம்,…

வேம்படியான்

“வேப்டியான் கத சொல்லு தாத்தா,” என்றாள் அம்மு. இப்போதெல்லாம் இரவானால் பேத்திக்கு நான் கதை சொல்ல வேண்டியுள்ளது. நன்றாக வாயடிக்கவும் பழகியிருந்தாள். என்னிடம் கதைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், பேய்க் கதைகளைச் சொல்லி, அவளிடம் தேவையில்லாத பயத்தைப் புகுத்துவதில் எனக்கு அவ்வளவாக ஒப்புதல் இல்லை. பேய் என்பதை வேம்படியான் என்றே அவளுக்குப் பழக்கியிருக்கிறேன். என் அப்பா அப்படித்தான்…

சிகரி மார்க்கம்- நம்பிக்கைகளுக்குள் உறையும் தொன்மங்கள்

தலைசிறந்த உலக எழுத்தாளர்கள் எழுதி எழுதி கூர்மையான இலக்கிய வடிமாகச் சிறுகதையை வளர்த்தெடுத்துள்ளனர். கவிதையின் சொல்லாப் பொருளும் கட்டுரையின் தகவல் செறிவும் நாவலின் காட்சிப்படுத்தலும் கூடிய மிக நுட்பமான இலக்கிய வெளிப்பாடாக இன்று சிறுகதை உள்ளது. ஒரு நல்ல சிறுகதை உருவாக இவையெல்லாம் கட்டாயம் இருக்கவேண்டும் என யாரும் கட்டளையிடமுடியாது. காற்றில் மிதக்கும் இலை, வெளியின்…

நீலம் மலர்ந்த நாட்கள்

உடல் தளர்ந்து பின்னால் படுக்கையில் சாய்ந்து, மெல்ல என் தலையை மட்டும் தூக்கி பார்த்தேன். முழங்கை அளவே உள்ள சிற்றுடல் ஒன்றைத் தலைகீழாக டாக்டர் பிடித்திருந்தார். இத்தனை நாட்களாக நான் என்னுள் எனது மட்டுமே என்றுணர்ந்த உயிரசைவின் உடலுருவம். நீல நிறம். அன்று மதியம் இந்திர நீலத்தில் வாசித்த வரி ஒன்று நினைவில் எழுந்தது, ‘நீலம்…

பயணயாத்திரை

நான் ஒரு பயண விரும்பி. தனியாகவும் நண்பர்களுடனும் ஏராளமான இடங்களுக்குச் சென்றுள்ளேன். பயணங்கள், இடங்களைச் சார்ந்தது மட்டுமல்ல; மனிதர்களையும் உட்படுத்தியது. அப்படி எவ்வித அறிமுகமும் இல்லாத மனிதர்களோடு பயணம் மேற்கொள்ள விரும்பி பாத யாத்திரை ஒன்றில் கலந்துகொண்டேன். மார்ச் மாதம் 25 முதல் 28 ஆம் திகதி வரை பஹாங் மாநிலத்தில்  எழுந்தருளியிருக்கும் மாரான் மரத்தாண்டவர்…

பாசா பாசா பியாரி

இமயமலைத் தொடரில் பத்தாவது உயர்ந்த சிகரமான அன்னப்பூர்ணாவை நோக்கி ஏறும் நடை பயணம் அன்று காலையிலேயே தொடங்கியது. நேபாளின் தலைநகரமான காத்மாண்டு நகர நெரிசலிலிருந்து எங்களின் பேருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு மலை பகுதிக்குள் நுழைய ஆரம்பித்தது. போதுவாக மலை பாதையில் பயணிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாந்தி, தலைச்சுற்றல், பசியின்மை…

வெள்ளம்

“சிவப்பு நிறத்துல ஒரு பைக் நிக்குது பாருங்க. அங்க நிப்பாட்டுங்க,” என்றான் சுதாகர். ஆட்டோ அவனை அனாதையாக நடுத் தெருவில் விட்டுவிட்டு அவனைச் சுற்றி அரைவட்டமிட்டுச் சென்றது. லேசான தூரல் மட்டுமே இருந்தது. தாமரைப்பூ போட்ட இரும்புக் கதவைத் திறந்து கொண்டு, யாரோ போட்ட மனித கழிவு போல நிற்க்கும் மஞ்சள் கட்டிடத்தை நோக்கி நடந்தான்…

மாற்றமற்ற மாற்றங்களைப் பேசும் ‘மாறுதல்கள்’ நாவல்.

இலங்கையில் ஆங்கிலேயரால் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபட சுதேசி மக்கள் ஆர்வம் காட்டாததன் பின்னணியில் ஆள்கட்டிகள் என்று சொல்லப்படுகின்ற பெரியகங்காணிகளினால் கூலிகளாக தென்னிந்தியாவில் இருந்து கொத்து கொத்தாக கொண்டுவரப்பட்ட தமிழர்களை மலையகமெங்கும் குடியமர்த்தி இருநூறு வருடங்களை தொட்டிருக்கிறது. அதன் ஞாபகார்த்தமாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புக்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் தனிமனித…