Category: மொழிப்பெயர்ப்பு

செல்சி நீலம்

”Do you know Chelsea Blue?”அப்பா இறுதி மூச்சை விடுவதற்கு முன் என்னிடம் கடைசியாகக் கேட்டது அதுதான். அப்போது அப்பாவின் குரல் ஓர் உரோமம் கீழே உதிர்வது போல எடையற்று ஒலித்தது. “செல்சி நீலம்” நான் பலமுறை சொல்லிப்பார்த்தேன். அது முதலில் ஏதோ அதிகாலையில் இரகசியமாகச் சந்திக்கும் காதலர்களுக்கிடையே எழும் ஏக்கப் பெருமூச்சுபோல ஒலித்தது. அதன்…

தூறல் மழை

திடீரென நின்றது இரயில். இருண்ட கனவுலகிலிருந்து அவர் திடுக்கிட்டு விழித்தார். கண்ணீர் அவர் முகத்தை நனைத்திருந்தது. லக்கன் வகை டாக்பில் தொப்பியணிந்த ஆண்மகன் அவர். மழை கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் நின்றிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் நீர்த்துளிகளின்  அலங்கரிப்பு இன்னும் இருந்தது. கனவில், அவர் இன்றைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். சாதாரண கம்பத்தில் வாழ்ந்த…

இறைவனிடம் திரும்புதல்

ஹெபேயின் காங்ஜோவில் உள்ள அம்மாவின் சொந்த ஊரான சியான்சுவாங் கிராமத்திற்கு அவருடன் முதன்முறையாகச் சென்ற பழைய நினைவுகளை அசைபோட்டேன். அங்கே ஐந்து நாட்களுக்கு ஒரு முறை கூடும் சந்தைக்குத் தற்செயலாகச் செல்ல நேர்ந்ததும் நினைவுக்கு வந்தது. கிராம மக்கள் பலரை அங்கே பார்த்தேன், ஆண்கள் வெள்ளை குல்லா அணிந்திருந்தனர். சில பெண்கள் ‘ஹிஜாப்’ அணிந்திருந்தனர். ஒவ்வொரு…

இறந்தவனின் வழித்தடம்

மைக்கல் ஒபியின் எதிர்பார்ப்புகள் அவர் நினைத்ததைவிடவும் சீக்கிரமாகவே நிறைவேறியது. அவர் இண்டுமே இடைநிலைப் பள்ளியில் 1949ல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பள்ளி எந்த விதத்திலும் முன்னேற்றம் காட்டாத பள்ளியாக இருந்தமையால் கல்வி இலகா தூரநோக்கு கொண்ட ஓர் இளம்  ஆசிரியர் ஒருவரை அங்கு அனுப்ப வேண்டியிருந்தது. மிகுந்த பொறுப்புணர்ச்சியோடும் ஆர்வத்தோடும் ஒபி அந்தப் பதவியை ஏற்றுக்…

கண்ணாடியை நிகர்த்தது அந்த  ஏரி

அவளுடைய மகிழுந்து கிட்டத்தட்ட கவிழ்ந்திருக்கும் அல்லது ஏரியில் சரிந்திருக்கும் விசித்திரமான அந்த அந்தி நேரத்தில், மான் ஒன்று  திடீரென்று மிக வேகமாக ஆனால் சத்தமின்றி சாலையில் தோன்றியது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. உடனே அங்கிருந்து ஓடி புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுவிட வேண்டும் என்ற தவிப்பு எழுந்தது.  அண்மைய காலமாக, தனது மாணவர்கள் தாடையை மேசை மேல்…

நகரில் ஒரு மூன்றடுக்கு மாளிகை

மூன்றடுக்கு மாளிகை என்பது அந்தத் தனித்துவமான கட்டிடத்துக்கு இந்நகர மக்கள் சூட்டியிருக்கும் சிறப்பு பெயர். அந்தப் பெயருக்கு ஏற்றது போல மூன்று மாடிகளைக் கொண்டது அக்கட்டடம். அந்த மூன்றடுக்கு மாளிகை எந்த யுகத்தில் கட்டப்பட்டது? அது உருவான வரலாற்றை எப்படிக் கூறுவது? இதன்  தலபுராணம் மலாயாவைப்  பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்திலிருந்து  தொடங்குகிறது.  அக்காலகட்டத்தில் அந்நியர்களைத்…

நிசப்தப் பொழுது

ஒரு மெல்லிய ஒலியிலிருந்தே அனைத்தும் தொடங்கியது. நள்ளிரவில் அந்த ஒலியை அவன் கேட்டான். எண்ணெய் குமிழ்கள் மெல்ல மெல்ல நீரின் மேற்பரப்பில் தோன்றி பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வண்ணமயமான கோளங்களாக அழகாக நீரில் பரவுவது போல் அமைந்திருந்தது அந்த ஒலி. கர முர கர முர ஒலி… தலை முடியைக் கோதிக் கொண்டு சோபாவிலிருந்து…

அப்பா

ஆங்கிலத்தில்: ரேய்மண்ட் கார்வர் தமிழில்: கோ.புண்ணியவான் உடலை மூடிய குளிர் உடையுடன் புதிதாகப் பிறந்த குழந்தை கட்டிலை ஒட்டிய தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். தொட்டில் புதிய வண்ணமிடப்பட்டு நீல ரிப்பனால் பூ போல முடிச்சிடப்பட்டு, நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூன்று சகோதரிகளும், குழந்தையைப் பிரசவித்த களைப்புடன் முழுமையாய் பேறு நோயிலிருந்து விடுபடாத குழந்தையின் தாயும், குழந்தையின் பாட்டியும்…

ஒருவரின் வாழ்க்கை முறை

நீ காத்திருந்தது கடல் நீருக்காகவா அலையும் மணலும்  இடைவெளியின்றி அசைகின்றன உனக்குத் தெரியும் இறுதியில் உடைவது கடல் நீரல்ல உன்னால் மறக்க இயலாது. பேரமைதியும் இளமையும் வனப்பும் பரிசுத்தமும் ஒருங்கே அமைந்தவள் அவள். பசுமையான மாணிக்கத்தின் தன்மையை ஒத்திருந்தாள் யூ சியாவ் யூ. உன்னால் அந்த ஜீவனை மறக்க முடியாது. அவள், தான் ஒரு பெண்…

வண்ணத்துப்பூச்சிகளின் வீடு

அந்த ஐந்து மாடி மலிவு விலை அடுக்குமாடியின் படிகளில் இறங்கி வரும்போது சுவரில் அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சி அஸ்லியின் கண்ணில் பட்டது. அதன் கோர முகம், அழகிய சிறகுகளுக்குப் பின்னால் மறைந்திருந்தது. அதன் சிறகில் வண்ணக்கோல திட்டுகள் சுழன்று கொண்டிருப்பது போல தோன்றியது.  அது சுவரில் ஒட்டிக் கொண்டு அசையாமலிருந்தது. அசைவற்ற அதன் தன்மை அது இறந்துவிட்டதோ…

விஷமம்

ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட இது போலத்தான் நடக்கும். அன்றும் அவன் அண்டை வீடுகளைக் கடந்து நடந்து கொண்டிருந்தான். வெயில் அவன் பின்னால் விழுந்து கிடந்தது. அது ஒரு சனிக்கிழமை மாலை. பச்சை வண்ணமிடப்பட்டிருந்த ஒரு இரும்பு கேட்டின் அருகே நின்றான். ‘ஓ வேண்டாம்…’ என்று எண்ணித் தயங்கினான். ‘இல்லை கூடாது… தயவுசெய்து வேண்டாம்… இன்னுமொரு முறையா?…

இரண்டாம் துணை

அவனுக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது, அக்டோபர் மாதத்தின் தொடக்க நாளான அன்று, கிழக்கில் தாழ்வாக உதிக்கும் சூரியனின் வெப்பக் கதிர்கள் அந்த இரட்டை மாடி வீட்டின் இரண்டாம் தளத்தின் மாடத்தைக் கடந்து அவனது படுக்கையறை கதவு வரை நீண்டு கிடந்தது.  வழக்கமாக காலை கதிரவனின் வெளிச்சம் மாடத்தின் பாதி வரை வந்து விழும். அது இயல்பானதுதான். ஆனால்,…

என் மெத்தையில் ஒரு நாகம்

இரும்பு வேலிக்குப் பின்னால் அடர்ந்து வளர்ந்திருக்கும் புதர்களுக்குள்ளிருந்தும், மரங்களில் ஊர்ந்தும் இந்தக் குடியிருப்புக்குள் ஏதும் வரக்கூடுமோ என்ற அச்சமூட்டும் பிரம்மையுடன் இந்த அமைதியான மலைப்பகுதியில் நான் உறங்கத் தொடங்கி சில இரவுகள் கடந்துவிட்டன. கூடவே, நான் வசிக்கும் இந்த வீட்டின் குடியிருப்பாளர் யார் என்ற என் சந்தேகம் என்னை மேலும் அயற்சியுற வைக்கிறது. இந்தச் சிறிய…

ஜொக்ஜாவில் அடைமழை

அவனைப் பற்றி பெரிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை. அதாவது, ஜமாலி தன் கல்வியை முடித்த பிறகு, கலை, பண்பாடு தொடர்பான அமைச்சில் வேலைக்குச் சேர்ந்தான். பல்கலைக்கழகத்தில் அவன் விவசாயத்துறையில் படித்திருந்தான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். ஆகவே, கலை பண்பாட்டுத் துறையில் வேலைக்குச் சேர்ந்தபோது அவன் மூளை காலியாக இருப்பது போல உணர்ந்தான். ஜமாலி,…

உடும்பு தோஷம்

முன்வாசல் கம்பி இடுக்கு வழி நுழைந்த உடும்பு ஒன்று, அவனது இரண்டு மாடி வீட்டின் முன்வாசல் கம்பிக்கும் கதவுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட பிறகுதான் எல்லாமே ஆரம்பமானது. ஒரு மீட்டர் அளவு வளர்ந்த பெரிய உடும்பு அது.  சொரசொரப்பான அதன் தோலும் வெளியே துருத்தி துருத்தி மறையும் நாக்கும் அருவருப்பாக இருந்தது. அந்தக் கம்பி இடுக்கு…