
அந்த ஐந்து மாடி மலிவு விலை அடுக்குமாடியின் படிகளில் இறங்கி வரும்போது சுவரில் அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சி அஸ்லியின் கண்ணில் பட்டது. அதன் கோர முகம், அழகிய சிறகுகளுக்குப் பின்னால் மறைந்திருந்தது. அதன் சிறகில் வண்ணக்கோல திட்டுகள் சுழன்று கொண்டிருப்பது போல தோன்றியது. அது சுவரில் ஒட்டிக் கொண்டு அசையாமலிருந்தது. அசைவற்ற அதன் தன்மை அது இறந்துவிட்டதோ…