வல்லினம் இலக்கிய முகாம் – சிறுகதை அமர்வு

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் திகதிகளில் நிகழ்ந்த வல்லினம் இலக்கிய முகாமில் ஜா. ராஜகோபாலன் வழிநடத்த, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த வாசகர்களும் படைப்பாளிகளும் ஒன்றாக அமர்ந்து மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியப் படைப்புகளை வாசித்து விவாதித்தோம். இந்த நிகழ்வு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்,அமைந்துள்ள YMCA ஹோட்டலில் நடந்தேறியது. நவம்பர் முப்பதாம் திகதி…

சங்கப் பாடல் கற்றல் கற்பித்தலில் அபத்தமும் அதை நுகரும் ஆழமும்

பாட்டு என்பது மொழியின் உச்ச வடிவம். ஒரு மொழியானது வளப்பத்தையும் அதன் முதிர்ச்சியையும் நுட்பத்தையும் அடைவது பாட்டு வடிவத்தில்தான். தன்னைப் பற்றியும் தன்னைச் சார்ந்துள்ள சமூகத்தையும் இயற்கையையும் சொற்செறிவுடன் பண்தொடுத்து அணிப்பூட்டி மொழியில் அழகுப்பட தொடுப்பதே பாட்டு. சொல் நயம், பொருள் நயம், உணர்ச்சிச் செறிவு, சுதந்திரப் போக்கு, கற்க கற்க முடிவில்லா புதுச்சுவை தருதல்…

வல்லினம் முகாம் – பக்தி இலக்கியம் அமர்வு

கடந்த 30 நவம்பர் 2024 தொடங்கி 1 டிசம்பர் 2024 வரை கோலாலம்பூரில் அமைந்துள்ள YMCAவில் வல்லினம் இலக்கிய முகாம் நடந்தேறியது. இம்முகாமில் சங்கப்பாடல், நவீன கவிதை, சிறுகதை, பக்தி இலக்கியம், நாவல் போன்ற படைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. ஒவ்வொரு அமர்வையும் எழுத்தாளர் ஜா. ராஜகோபாலன் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வழிநடத்தினார். அவ்வகையில் டிசம்பர் 1 காலையில்…

வல்லினம் இலக்கிய முகாம் – நவீன கவிதைகள் அமர்வு

வல்லின இலக்கிய முகாமில் இரண்டாவது அமர்வாக அமைந்தது கவிதைகள் குறித்த உரையாடல். ‘பொருள்வயின் பிரிவு’, ‘பணி செய்து கிடத்தல்’, ‘எண்ணும் எழுத்தும்’, ‘காலத்தின் இலை’ மற்றும் ‘மெய்மையின் சுவை’ என முறையே கவிஞர் விக்ரமாதித்யன், கவிஞர் இசை, கவிஞர் மோகனரங்கன், கவிஞர் அர்ஜுன்ராச் மற்றும் கவிஞர் கார்த்திக் நேத்தாவின் கவிதைகள் அமர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. பிரதானமாகக்…

என்றுமுள்ள உண்மையும் தொடரும் வாழ்வும்

‘மண்ணும் மனிதரும்’ நாவலை வாசித்து முடித்த பின்னர் தமிழ்விக்கி தளத்துக்குச் சென்று எழுத்தாளர் சிவராம் காரந்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் பதிவை வாசித்தேன். கலைக்களஞ்சியத் தொகுப்புகள், சூழியல் செயற்பாடுகள், யக்ஷ கான கலை மீட்டுருவாக்கம் எனப் பிரமிக்கத்தக்க அறிவு பங்களிப்பைக் கன்னட அறிவுலகத்துக்கு விட்டுச் சென்றிருக்கிறார். கட்டுரையின் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருந்த சுட்டியைச் சொடுக்கி காரந்த் யக்ஷ கானக்…

“எல்லா இலக்கியமும் அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் எழுதப்படுபவையே” – பாவண்ணன்

பாவண்ணன் சமகால  நவீனத் தமிழ் இலக்கியச்சூழலில்முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள்எனஇடையறாதுதமதுபங்களிப்பைஅளித்துவருகிறார். கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித் இலக்கிய அலை உருவாக அடிப்படைகளை அமைத்தவர்களில் ஒருவர். மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது,  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா)  வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது , விளக்கு…

“சலனமின்மையை எதிர்வினையாகப் போர்த்தியிருக்கும் மனத்தைப் புனைவுகளில் நிகழ்த்திப் பார்க்கிறேன்” – அரவின் குமார்

அரவின் குமார் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில்  சிறந்து விளங்கும் புதிய தலைமுறை எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரை, விமர்சனக் கட்டுரை, இலக்கியச் செயல்பாடுகள் என இடையறாது இயங்கி வருகிறார். செறிவான மொழி, தர்க்கப்பூர்வமான பார்வை, கச்சிதமான மொழிநடை, கற்பனையாற்றல் போன்ற கூறுகள் இவரின் எழுத்தின் பலம். இவ்வருடத்திற்கான வல்லினம் இளம் தலைமுறையினர் விருது அரவின் குமார்…

நிலமும் துயரமும் மனிதர்களும் – அரவின் குமாரின் கதைகள்

புதியவர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும்போது நாமறிந்த, வாசித்த புனைவுலகில் சில புதிய அனுபவங்களும் தருணங்களும் சேர்ந்துகொள்கின்றன என்பதால் புதிய எழுத்தாளர்களை வாசிப்பதில் ஆர்வமுண்டு. அந்த எழுத்தாளர் யார் என்ற எந்த அறிமுகமுமின்றி நேரடியாக கதைகளை அணுகி வாசிக்கும் வாய்ப்பை இணைய இதழ்கள் அளிக்கின்றன. புதிய பல இளம் எழுத்தாளர்களை இணைய இதழ்களின் வழியாகத்தான் அறிய முடிகிறது.…

சிண்டாய்: நிலத்தை மென்று வளர்ந்த தளிர்

மலேசியாவில் வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளில் முதன்மையானவர் என்று அரவின் குமாரைச் சொல்லலாம். இவ்வாண்டின் வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது அவருக்கு வழங்கப்படுவது அதற்கான அங்கீகாரம்.  இவ்விருதை ஒட்டி வெளிவரும் ‘சிண்டாய்’ எனும் சிறுகதை தொகுப்பின் வழியாக அவரை மீள் வாசிப்பு செய்தபோது அரவின் குமாரின் புனைவுலகை மேலும் நெருங்கிச் செல்ல முடிந்தது.    தோட்டப்புற…

பாவண்ணன் சிறுகதைகள்: எளிமையின் கலை

உலகில் பத்தாவது உயரிய மலையான அன்னபூர்ணா அடிவாரம் வரை கடந்த ஆண்டு ஏறியபோது முதல் மூன்று நாட்கள் அது கடுமையான பயணமாகவே அமைந்தது. நான்காவது நாள் அதிகாலை பயணம் பனிபடர்ந்த அன்னபூரணியைத் தரிசித்துக் கொண்டே நகரும் அனுபவம். முதல் மூன்று நாட்களைப் போல நான்காவது நாள் பயணத்தில் எங்குமே கற்படிக்கட்டுகள் இல்லை. செங்குத்தான மேடுகள் இல்லை.…

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா இவ்வருடம் வல்லினம் இளம் எழுத்தாளர் விருதினை எழுத்தாளர் அரவின் குமார் பெறுகிறார். இரண்டாயிரம் ரிங்கிட் தொகையோடு நினைவுக்கோப்பையும் இந்த விருதில் வழங்கப்படும். இந்த விருது விழாவினை ஒட்டி கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் குறித்த ஓர் அரங்கு இடம்பெறுகிறது. இதில், ஶ்ரீதர் ரங்கராஜ், கி. இளம்பூரணன், விஜயலட்சுமி…

வடசேரிக்கரை தேவன்

கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை உலுக்கி ஓசை எழுப்ப ஆரம்பித்தான் தேவன். பனி மூடியிருந்த அமைதியான விடியற்காலையில் அந்தச் சங்கிலியின் ஓசையால் தடால் என எழுந்தமர்ந்த பாப்பியம்மாள், “ஞான் வருந்நு, எனிக்கி கொறச்சு ஒறங்ஙான் சமயந்தாடோ,” என்று கூறி மீண்டும் உறங்க முயற்சித்தாள். ஆனால், பாப்பியம்மாவைத் தேவன் விடுவதாகத் தெரியவில்லை. “ஹூம்ம், இவன் என்னெ ஒறங்கான் விடில்லா,”…

இரண்டாம் துணை

அவனுக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது, அக்டோபர் மாதத்தின் தொடக்க நாளான அன்று, கிழக்கில் தாழ்வாக உதிக்கும் சூரியனின் வெப்பக் கதிர்கள் அந்த இரட்டை மாடி வீட்டின் இரண்டாம் தளத்தின் மாடத்தைக் கடந்து அவனது படுக்கையறை கதவு வரை நீண்டு கிடந்தது.  வழக்கமாக காலை கதிரவனின் வெளிச்சம் மாடத்தின் பாதி வரை வந்து விழும். அது இயல்பானதுதான். ஆனால்,…