கோதுமை மணி

முட்டம் கிராமத்தில் இன்று மக்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. வழக்கத்திற்கும் மாறாக கடல் அலையின் உயரம் இன்று அதிகமாகவே இருந்தது. ஓயாதக் கடல் அலையும் கட்டித் தழுவும் அதன் உப்புக் காற்றும்தான் இம்மக்களுக்கு முதல் உறவு. அனைவரும் கடல் அலையைப் பார்த்தபடி கடற்கரை மணலில் அமர்ந்து சீமோனுக்காகக் காத்திருக்கிறார்கள். “சீமோன் மாமா வந்தாச்சா?” என்று…

நினைவின் மழை

மீண்டும் ஓர் மழைகாலம். இந்த முறை வேறொரு சாளரம். ஆண்டுக்கொருமுறை சாளரத்தின் வழியாகத் தெரியும் காட்சி மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. எங்கள் கல்லூரி அமைந்திருக்கும் கிண்டி சென்னையின் மத்தியப்பகுதியில் இருக்கும் சிறிய காடு என்றுதான் சொல்ல வேண்டும். கருமையான பெரிய தண்டுகளுடனான மரங்கள் செறிந்து நிறைந்த இடம். எப்போதும் இலைகள் விழுந்து செறிந்து மட்கிய…

ம் என்ற மரணம்

குளிரில் உறைந்தா; நெருப்பில் கருகியா; நீரில் மூழ்கியா? எப்படி நடக்க வேண்டும்? கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்கலாம், ஆனால் அவள் வீட்டின் முன் கிணறு கிடையாது. சுருக்கிட்டுக் கொண்டு மரத்தில் தொங்கலாம் ஆனால், அவள் வீட்டின் முன் மரம் கிடையாது. விஷம் குடிப்பவர்கள் உண்மையிலேயே வாழவே விரும்புகிறார்கள். சம்பவத்துக்கும் மரணத்துக்கும் அதிக கால இடைவெளி…

நவீன இலக்கியத்தை எப்படி வாசிப்பது?

தீவிர இலக்கியம் அதன் வாசகர்களிடமிருந்து வெறும் நுகர்வைக் காட்டிலும் அதிகமாகக் கோரக்கூடியது — அதற்கு ஈடுபாடு, பொருள்கொள்ளுதல், சிக்கலான தன்மையுடன் ஊடாடும் விருப்பம் தேவை. நேரியல் முறையிலான கதைசொல்லல் மற்றும் உடனடி நுகர்வை வளர்க்கும் வெகுஜனப் புனைகதைகளைப் போலல்லாமல் தீவிர இலக்கியம் அடுக்குகள், பலபொருள்படும் தன்மை கொண்டது, பெரும்பாலும் எளிமையான புரிதலுக்கு மறுமுனையில் இருப்பது எனலாம்.…

நுண்மைகளின் கலைஞன்

தமிழாசியாவின் ஏற்பாட்டில் மாதந்தோறும் நடந்து வரும் சிறுகதை கலந்துரையாடலில் கடந்த ஜனவரி மாதம் எழுத்தாளர் வண்ணதாசனின் ‘தனுமை’, ‘சமவெளி’, ‘நிலை’, ‘தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள்’ ஆகிய நான்கு சிறுகதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வண்ணதாசனின் படைப்புலகத்தைப் பற்றிய எழுத்தாளர் ம. நவீனின் அறிமுகத்துடன் கலந்துரையாடல் தொடங்கப்பட்டது. வண்ணதாசன் படைப்புகளின் வாசிப்பனுபவம் சங்கப்பாடல்களை வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கு…

புதிய எல்லையை நோக்கி

தமிழ்ச்சிறுகதையின் வடிவமும் கதைக்களமும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. வ.வெ.சு.ஐயர், பாரதியார், அ.மாதவையா போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய அல்லது கண்டடைந்த சிறுகதையின் வடிவத்தை ஒரு தொடக்கநிலை என வைத்துக்கொள்ளலாம். புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி போன்ற இரண்டாம் தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய சிறுகதையின் வடிவம் முற்றிலும் வேறுவகையாக இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற…

மலேசியப் பயணம்

நடுநிலைப் பள்ளி பயிலும் வயதில் என் வகுப்பு நண்பன் அவனது மாமா மலேசியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். எனக்கு அந்த வரியைச் செரிக்கவே முடியவில்லை. மலேசியா ஒரு ‘ஃபாரின் கண்ட்ரி’. வெளிநாட்டுக்காரர் ஒருவர் எப்படி எங்கள் ஊரில் இருக்கும் ஒருவருக்கு உறவினராக இருக்க முடியும்? அன்றைக்குப் புகழ் பெற்ற படமான ‘விதி’ திரைப்படத்தின்  நீதிமன்ற காட்சிகளில் நடிகை …

அப்பா

ஆங்கிலத்தில்: ரேய்மண்ட் கார்வர் தமிழில்: கோ.புண்ணியவான் உடலை மூடிய குளிர் உடையுடன் புதிதாகப் பிறந்த குழந்தை கட்டிலை ஒட்டிய தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். தொட்டில் புதிய வண்ணமிடப்பட்டு நீல ரிப்பனால் பூ போல முடிச்சிடப்பட்டு, நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூன்று சகோதரிகளும், குழந்தையைப் பிரசவித்த களைப்புடன் முழுமையாய் பேறு நோயிலிருந்து விடுபடாத குழந்தையின் தாயும், குழந்தையின் பாட்டியும்…

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா : சில நினைவுகள் (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன)

எழுத்தாளர் அரவின் குமாருக்கு இளம் எழுத்தாளர் விருது வழங்குவது குறித்து நண்பர்களிடையே எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. 2020க்குப் பின்னர் எழுத வந்தவர்களில் அரவின் குமார் தனித்துவமானவர். புனைவு, அ-புனைவு என இரண்டிலும் இடைவிடாது இயங்குபவர். அவரை ஊக்குவிப்பதும் அடையாளப்படுத்துவதும் வல்லினம் குழுவின் பொறுப்பு என்பதை அனைவருமே அறிந்திருந்தோம். விருது வழங்குதல் என்பது பணத்தையும் பரிசையும்…

மேலே திறந்து கிடக்கிறது…

”ஒரு விந்தை!” என்று ராபர்ட் கோல்ட்மான் சொன்னார். கண்ணில் நுண்நோக்கியுடன் ஒரு கல்படிவத்தின்மேல் குனிந்திருந்த ராம்கோவிந்த் தலைதூக்கி புருவத்தை மட்டும் தூக்கினார். “இதைப்பாருங்கள்,” என ராபர்ட் கோல்ட்மான்  ஒரு சிறிய கல்லை நீட்டினார். அது ஒரு பெரிய சேற்றுப்படிவப் பாறையில் இருந்து உடைந்த கீற்று. மங்கலான  சிவந்த நிறத்தில் ஒரு சிப்பி போலிருந்தது. “படிமமா?” என்றபடி…

ஒருவரின் வாழ்க்கை முறை

நீ காத்திருந்தது கடல் நீருக்காகவா அலையும் மணலும்  இடைவெளியின்றி அசைகின்றன உனக்குத் தெரியும் இறுதியில் உடைவது கடல் நீரல்ல உன்னால் மறக்க இயலாது. பேரமைதியும் இளமையும் வனப்பும் பரிசுத்தமும் ஒருங்கே அமைந்தவள் அவள். பசுமையான மாணிக்கத்தின் தன்மையை ஒத்திருந்தாள் யூ சியாவ் யூ. உன்னால் அந்த ஜீவனை மறக்க முடியாது. அவள், தான் ஒரு பெண்…

வண்ணத்துப்பூச்சிகளின் வீடு

அந்த ஐந்து மாடி மலிவு விலை அடுக்குமாடியின் படிகளில் இறங்கி வரும்போது சுவரில் அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சி அஸ்லியின் கண்ணில் பட்டது. அதன் கோர முகம், அழகிய சிறகுகளுக்குப் பின்னால் மறைந்திருந்தது. அதன் சிறகில் வண்ணக்கோல திட்டுகள் சுழன்று கொண்டிருப்பது போல தோன்றியது.  அது சுவரில் ஒட்டிக் கொண்டு அசையாமலிருந்தது. அசைவற்ற அதன் தன்மை அது இறந்துவிட்டதோ…

ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ்

என் வாழ்நாளில் மகிழ்ச்சி என்ற ஒன்றை நான் எப்போதுமே  அறிந்திருக்கவில்லை. இளமையில் பசியோ வேதனையோ உடலில் தூலமாக  உணர்ந்ததைபோல அதை நான் உணர்ந்ததில்லை. சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்திருந்த தருணங்கள் உண்டு. கரிசல் காட்டின் அந்தியில் வானம் சிவக்கும்போது சில சமயங்களில். அதையும் சிறுவயதில் அச்சத்துடன்தான் கண்டிருக்கிறேன். மொத்த வானமும் தலைக்கு மேல் தீப்பற்றி எரிவதுபோல…

இன்துயில் கொள்க

அரை மணி நேரத்திற்கு முன்புதான், அண்ணா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அரை மணி நேரம் என்பது மிக துல்லியமாக எனக்குத் தெரிந்திருந்தது. அம்மா வீட்டிற்குள் நுழைந்தவுடன் நான் என் அறைக்கு மிகச் சாதாரணமாக நடந்து சென்று கதவை மூடிக் கொண்டேன். உள்ளே எத்தனை நேரம் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதைச் செல்பேசியைத் திறந்து பார்ப்பதிலும், சுவரில்…

சுங்குடி

வருடத்திற்கு இரு முறையாவது பாட்டியும் தாத்தாவும் தங்களின் சொந்த ஊரான நாமக்கலுக்குச் செல்வது வழக்கம். அப்பாவின் பெற்றோர்கள். அவர்களின் பயணம் பள்ளி விடுமுறையில் நிகழ்ந்தால், துணையாக நானும் அண்ணனும் உடன் செல்லலாம் என வீட்டில் ஓர் ஒப்பத்தம் இருந்தது. அப்படியான பயணம், ஈராண்டுகளுக்கு ஒரு முறையாவது எங்களுக்குக் கிட்டும். அவ்வாய்ப்பு பல வருட தவத்திற்குப் பிறகு…

வல்லினம் இலக்கிய முகாம் (2024) அனுபவம்

நவம்பர் 29ஆம் திகதி வெள்ளி மதியம், நான், லதா, பாரதி மூவரும் சிங்கையிலிருந்து கோலாலம்பூர் வந்து இறங்கினோம். சிங்கையில் காலையில் இருந்தே அடை மழை பிடித்துக் கொண்டது. வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு டாக்சி கிடைத்ததே அதிர்ஷ்டம்தான். விமானமும் அரை மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. சுபாங் விமான நிலையம் வந்திறங்கி அங்கிருந்து முகாம் நடைபெறவிருந்த…

விஷமம்

ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட இது போலத்தான் நடக்கும். அன்றும் அவன் அண்டை வீடுகளைக் கடந்து நடந்து கொண்டிருந்தான். வெயில் அவன் பின்னால் விழுந்து கிடந்தது. அது ஒரு சனிக்கிழமை மாலை. பச்சை வண்ணமிடப்பட்டிருந்த ஒரு இரும்பு கேட்டின் அருகே நின்றான். ‘ஓ வேண்டாம்…’ என்று எண்ணித் தயங்கினான். ‘இல்லை கூடாது… தயவுசெய்து வேண்டாம்… இன்னுமொரு முறையா?…

காதுகளின் கல்லறை

“துர்க்கனவுகளைப் பேய்கள் திங்கட்டும்,” என்று சொன்னார் அவர். முதலில் அவர் தனக்குத்தானே பேசிக் கொள்கிறார் என்று தோன்றியது. சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பிப் புன்னகைத்தார்.  அது என்னிடம் சொல்லப்பட்டதுதான் என்று உணர்ந்து, கொஞ்சம் தயங்கி பதிலுக்குப் புன்னகைத்தேன். இரைச்சலான ஜாஸ் இசை அதிர்ந்து கொண்டிருந்தது. விதவிதமான மது வகைகள் தொடர்ந்து கலக்கப்பட்டு பல வண்ணங்களில் மதுக்கோப்பைகள்…

சுஜாதாவும் சுந்தர ராமசாமியும் : ஒரு புனைவு எப்போது இலக்கியமாகிறது?

கடந்த 01.12.2024 அன்று நடந்த வல்லினம் விழாவில் பேசியதன் தொடர்ச்சி அல்லது அதன் சாராம்சம் இந்தக்கட்டுரை. இந்தக் கட்டுரையின் நோக்கம் எழுதப்படும் புனைகதைகளில் ’உயர்வு- தாழ்வு’ கற்பிப்பதல்ல. ஆனால் எழுதப்படும் அனைத்தும் ‘இலக்கியம்’ ஆகிவிடாது என்பதையும் எது இலக்கியம் என்பதையும் மீண்டும் ஒருமுறை உறுதிபடச் சொல்வதே. *** புனைகதை என்பது பரந்து விரிந்த தளம். பொழுதுபோக்கிற்கு,…

கருப்பலுவை

நாளை மறுநாள் நிஷா அக்காவின் திருமணம். அவள் என் நண்பனின் அக்கா என்பதால் நானும் அக்காவென்று அழைப்பேனே தவிர எங்களுக்குள் இரத்த உறவெல்லாம் இல்லை. ஆனால், நாங்கள் நல்ல நண்பர்கள். தன் வயதினரிடமோ அல்லது தன்னைவிட மூத்த வயதினரிடமோ பழகுவதற்குப் பெண்களுக்குக் கிடைக்காத சுதந்திரம் இளைய வயதினரிடம் பழகுவதற்கு எளிதாக கிடைத்து விடுகிறது. பெண் பிள்ளைகளைப்…

வல்லினம் இலக்கிய முகாம் – நாவல் அமர்வு

இலக்கிய வாசிப்பைக் கூர்தீட்டிக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது 2024 டிசம்பர் மாதம் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த வல்லினம் இருநாள் இலக்கிய முகாம். முகாமை வழிநடத்திய திரு ஜா. ராஜகோபாலன் சங்கப் பாடல் முதல் நாவல் வரையில் தமிழ் இலக்கியத்தை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையாக அறிமுகப்படுத்தி, பொருள் புரிந்து வாசிக்கும் வித்தையை விளக்கினார். அதன்வழி,  மொழி, பிரதி, தத்துவார்த்தப்…