Category: விமர்சனம்

சீனலட்சுமி : கற்பிதங்களுக்குள் இயங்கும் அக உலகும் புற உலகும்

ஒரு படைப்பாளியின் உலகம் தனியானது. சராசரி மனிதர்கள் சமூக நிகழ்வுகளைப் பார்வைக் கொள்வதற்கும் ஒரு படைப்பாளி தனக்கான உளப்பாங்கோடும் தனித்தபார்வையோடும் அவற்றை அணுகுவதற்கும் வேறுபாடுகளுண்டு. சமூக நிகழ்வு அல்லது சமூக நிலை பற்றிய படைப்பாளியின் மனம் சார்ந்த விளைவுகளையும் தாக்கங்களையும் மற்றவர் பார்வைக்கு முன்வைக்கின்ற ஓர் உந்துதல் ஒரு படைப்பு உருவாகக் காரணமாகயிருக்கிறது. படைப்பாக்கச் செயற்பாடென்பது…

அத்வைத்த கதைகளை நினைவுறுத்தும் தாரா

(ஜனவரி 28 சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூர் வாசகர் வட்டம் முன்னெடுத்த நடந்த தாரா நாவல் வெளியீட்டில் எழுத்தாளர் மஹேஷ் குமார் பேசிய உரையின் எழுத்து வடிவம்,) நவீனின் ‘தாரா’ நாவல் ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது. இது போன்ற வாசிப்பனுபவங்கள் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தவையே. மறு வாசிப்பில் முற்றிலும் வேறொரு அனுபவத்தையும் கொடுக்கலாம்.  அத்வைதக்…

தி. ஜானகிராமனின் சிறுகதைகள்

‘ஒரு எழுத்தாளனின் முக்கியத்துவம், மற்றவர்களுக்கு விவரிக்க நேரமில்லாத விடையங்களை விவரிப்பதே’ என்கிறார் ஜேம்ஸ் பால்டவின். ஆனால், மனிதர்களின் இயல்பையும் யாதர்த்தமான உள்ளுணர்வுகளையும் படம்பிடித்துக் காட்டுவது எளிதானது அல்ல. மனிதர்கள் மாற்றத்திற்கும் மறதிக்கும் பழக்கப்பட்டவர்கள். இப்படிப்பட்ட கட்டமைப்பிற்குள் சிக்கிக் கொண்ட நமக்குத் தனது எழுத்துகளின் மூலம் அனுபவத்தை ஆறப்போட்டுச் சிந்திக்கத் தூண்டுகிறார் தி. ஜானகிராமன். அந்த எழுத்தாளுமை…

கரிப்புத் துளிகள்: நகரமயமாதலில் பலியாகும் எலிகள்

முன்னாள் தமிழக முதல்வர் சி என் அண்ணாதுரை ஒருமுறை (1965ல்) மலேசியா வந்த போது ‘பிற நாட்டில் தமிழர்கள் வசிக்கிறார்கள், ஆனால் மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள்’ என்று சொன்னார். அப்போது மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். ‘அண்ணாதுரை சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நாம் நல்லாத்தான் இருக்கோம்போல‘ என்ற எண்ணங்களை விதைத்துவிட்டுச் சென்றவை அவ்வரிகள். ஏனெனில் அதை…

சீ. முத்துசாமியின் ஆழம்; ஒரு வாசிப்பனுபவம்

மலேசியாவில் தோட்டப்புற வாழ்வை தீவிரத்தன்மையுடன் எழுதிக்காட்டும் எழுத்தளராக சீ. முத்துசாமி அறியப்படுகின்றார். ஆயினும்,  மக்களின் வெளிப்புற போராட்ட வாழ்க்கையைவிட அகச்சிக்கல்களை கவனப்படுத்துவதையே தனது கலையின் நோக்கமாக அவர் கொண்டிருப்பதை ‘மண்புழுக்கள்’ நாவல் தொடங்கி அறியமுடிகிறது. குச்சிக்காட்டு மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதன் வழி அவர் ஆராய்வது அவர்களின் மனச்சிக்கல்களையே என்பது என் அவதானம். தோட்டக்காடுகளின் இருளையும் அடர்ந்த வனங்களையும் மனித மனங்களின் குறியீடாக அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.…

ஸலாம் அலைக் : ஒரு கிளைக்கதை

2009 இல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நிகழ்ந்த உச்சக்கட்டப் போர் காட்சிகளை நாள்தோறும் காலையில் ஒளிப்பரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதை போல, செய்தித்தாள்களிலும் போர் குறித்த செய்திகளை வாசித்துக் கொண்டிருப்பேன். இனம்புரியாத சோகமும், பீறிட்டு வரும் சினமும் எனக் கொஞ்ச நேரத்துக்கு மாறி வரும் உணர்வலைகளிலிருந்து மீண்டிருக்கிறேன். அந்த நேரத்து…

ஆழம்: தோண்டப்படாத மணற்கேணி

மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிய 70ஆம் ஆண்டுகளில் அதன் சாதனை முனையாக உருவானவை சீ. முத்துசாமியின் சிறுகதைகள். தோட்டப்புற வாழ்க்கையின் புற அழுத்தங்களோடும் அன்றாட அவலங்களோடும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில் அப்பாட்டாளிகளிடம் உள்ள அந்தரங்கமான யதார்த்தத்தை நுண்மையாக முன்வைத்த முதன்மையான படைப்பாளி அவர். அகவயமான பயணத்தின் வழி மனதின் இருண்மையை…

கோணம்

இரண்டு நாளில் வெவ்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்ட இருவரைப் புகைப்படம் எடுக்கலாம் எனும் திட்டத்தைக் கவின்தான் சொன்னான். கோலாலம்பூரின் மையத்தில் இருந்த மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டி நிலையத்தின் முன்னிருந்த சிமெண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டோம். சுளீரென்று அடிக்கும் வெய்யிலுக்கு மொத்த உடலையும் பரப்பி மல்லாந்து படுத்திருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், மனம் பிறழ்ந்தவர்கள் என எல்லாக் காட்சிகளுமே எங்கோ…

உலகத் தமிழ்க் களஞ்சியம்: காகித விரயம்

உமா பதிப்பகம் 2018-ஆம் ஆண்டு வெளியிட்ட உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுப்பின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதியைக்  கடந்த வாரம் கவனிக்க நேர்ந்தது. கெட்டி அட்டையில் அழகிய முகப்புடனான களஞ்சியம் அது. இரண்டாவது தொகுதியின் இறுதி சில பக்கங்களில் மலேசிய தகவல்கள் தொடங்கினாலும் மூன்றாவது தொகுதியில்தான் பெரும்பாலான மலேசிய தகவல்கள் உள்ளன என்று அறிந்துகொள்ள முடிந்தது.…

அத்தர்: அன்னையர்களின் கண்ணீர் குப்பி

2019இல் தொடங்கி தமிழ் புனைவிலக்கியத்தில் இயங்கும் ஒரு தலைமுறையின் வருகையைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஜி.எஸ்.எஸ்.வி நவின், சுஷில்குமார், வைரவன், செந்தில் ஜெகந்நாதன் போன்றவர்கள் தமிழகத்திலிருந்தும் அரவின் குமார் மலேசியாவிலிருந்தும் சப்னாஸ் ஹாசிம் இலங்கையில் இருந்தும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவ்வகைமையில் சிங்கப்பூரில் உருவான முக்கிய இளம் படைப்பாளியாக கே. முகம்மது ரியாஸைச் சொல்வேன்.…

‘மிளகு’ நாவல் : கனவுவெளியும் காலடி நிழலும்

[1] தல்ஸ்தோய் பற்றிய கூற்று ஒன்றுண்டு. ‘அவரின் படைப்புலகம் ஏன் அத்தனை யதார்த்தமாக இருக்கிறதென்றால் அது முழுவதும் அவரது கற்பனையால் கட்டமைக்கப்பட்டது.’ சிந்திக்க வைக்கும் வரி இது. ஒரு படைப்பை எப்போது நாம் நிஜ உலகிற்கு இணையாக நம்புகிறோம்? அதில் வரும் மனிதர்களை எந்தக் கணம் நாம் நெருங்கிக் கண்டவர்களாக உணர்கிறோம். உதாரணமாகப் போரும் அமைதியும்…

எண்கோண மனிதன்: மனமெனும் கலிடியோஸ்கோப்பின் சித்திரங்கள்

நவீனத்துவ தமிழ் இலக்கியத்தில் புனைவாக்கச் செயல்பாடு என்பது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. நவீனத்துவ புனைவுகள் நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அதன்வழியே வாசகனுக்குப் புனைவின் நிகர் வாழ்க்கை அனுபவத்தை அளிக்கின்றன. சிறுகதைகள் குறைந்த அளவு சம்பவங்களைக் கொண்டு வாசகனுக்கு அவ்வனுபவத்தைச் சாத்தியப்படுத்த முயலுகையில், நாவல்களோ பல்வேறு சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்து உருவாக்கும் விரிவான…

கபடவேடதாரி: நீல நகரமும் நல்லா இருந்த நாடும்

கேட்பதற்குச் சற்று விசித்திரமாகக் கூடத் தோன்றலாம், ஆனால் இணை தேடும் நவீன செயலிகள் அத்தனையிலும் இந்திய நாட்டு பெண்கள் தங்கள் எதிர்பார்ப்பாகக் பொதுவாகக் குறிப்பிடுவது, தன் இணை ஒரு ‘சங்கி’யாக இருக்கக்கூடாது என்பது. இது அவ்வளவு பொருட்படுத்தத்தக்க ஒரு சமூகக் கவலையா என்ற கேள்வி எழலாம். ஆனால் இதற்குப் பின்னால் பிரதிபலிக்கும், கடந்த பத்தாண்டுகளில் உருவாகி…

கெம்பித்தாய்களின் சப்பாத்துகளுக்கு கீழே

சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளிவந்த பல நூல்களில் பொன். சுந்தரராசுவின் சுண்ணாம்பு அரிசி, இந்திரஜித்தின் ரயில், ரமா சுரேஷின் அம்பரம் ஆகிய மூன்று நாவல்களும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைக் களமாகக்கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற இந்த மூன்று நாவல்களுமே நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் முதல் நாவல்கள். சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆதிக்க…

பீஷ்மரின் மகன் – ஹரிலால் நாவலை முன்வைத்து

1 காந்தி – கடந்த 125 ஆண்டுகளில் உலகை வெவ்வேறு விதங்களில் பாதித்த பெயர்களில் முக்கியமான பெயர். மிக அதிகமான எண்ணிக்கையில் நூல்கள் எழுதப்பட்ட பெயர்களில் முதன்மையான பெயர். ஒருவரது பெயர் ஒரு விழுமியத்தின், சிந்தனைமுறையின், லட்சியத்தின் சொற்பொருளாக மாறும் அதிசயத்தை உலகுக்கு இன்று வரை காட்டிக் கொண்டிருக்கும் பெயர். இந்தியா உட்பட உலகின் ஒவ்வொரு…