Category: அஞ்சலி

ந. பாலபாஸ்கரன்: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான ஆய்வாளர்

ந. பாலபாஸ்கரன் உடல்நலக் குறைவினால் பிப்ரவரி 19 தமது 82 வயதில் காலமானார் என்ற தகவலை ஷாநவாஸ் தெரிவித்தபோது பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை. கடும் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மரண நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். மரணத்துடன் போராடுவதை மெல்ல மெல்ல நிறுத்திக்கொண்டே வந்தார். ஒருவகையில் அவர் தன் மௌனத்தால் அதை தன் அன்புக்குரியவர்களுக்கு முன்னமே அறிவிக்கவும் செய்தார். வானொலிக்…

கே.எஸ் மணியம்: மரணமிலா பெருவாழ்வு

சொற்ப காலம் கொள்ளும் இம்மானுட வாழ்வில் மனிதன் தன் இறுதி கணம்வரை எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் தேடி அடைய முடியாததை அவன் சந்ததி தேடுகிறது. முற்றிலும் புறவயமான இத்தேடலின் பின்னால் அவனது அகம் சார்ந்த வலிகளும் வடுக்களும் ஆயிரம் கதைகளைத் தேக்கி வைக்கின்றன. மூதாதையர்களின் இருத்தலை கேள்வி எழுப்புவதும் தன் இருப்பை மீள்பார்வை…

அக்கினி: அபோதங்களை அணிந்த பறவை

“உன்னைய சின்ன பையனா இளஞ்செல்வன் எங்கிட்ட கைய புடிச்சி ஒப்படைச்சாரு. இப்ப என்னென்னவோ செய்யுற.” அக்கினி சுகுமாறன் – பத்மினி ஆகியோரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த வசனங்களைக் நிச்சயமாக சொல்லிவிடுவர். அது உண்மைதான். என் பதினேழாவது வயதில் அது நடந்தது. 1999இல் எம்.ஏ.இளஞ்செல்வன் கூலிமில் தனது நூல் வெளியீட்டுக்குப் பின்னர் அக்கினி மற்றும் பத்மினியை அழைத்து என்…

பிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண கலைஞன்

“யார்தான் சாக முடியும்? உடம்பு மண்ணுக்குப் போறது, சாவா? நினைவுகளுள்ள மனுஷர் என்னைக்குமே ஜீவிக்க முடியுமே… அதுதான் அமரத்துவம்.” – பிரபஞ்சன் (அமரத்துவம் சிறுகதையில்) ஓர் எழுத்தாளர் இறந்தவுடன் ஏற்படும் வெறுமையின் தவிப்பில் அவரது வாசகர்கள் பல சமயங்களில் மிக அதிகமாகவே அவ்வாளுமையைக் கொண்டாடித் தீர்த்துவிடுவதுண்டு. படைப்புகளின் எண்ணிக்கை, அந்த எழுத்தாளர் என்னவாக வாழ்ந்தார், நட்பில்…

அசோகமித்திரன் : எளிமையின் நடை

1993, கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது என்று ஞாபகம். அப்போதைய வாசிப்பு சற்றே இலக்கில்லாமல் இருந்தது. நானாகத் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். ராஜேஷ் குமார், சுபா, பிகேபி கதைகளைத் தாண்டி சுஜாதாவுக்கு வந்து பாலகுமாரனில் நிலைகொண்டிருந்த காலகட்டம். தீவிர இலக்கிய வாசிப்பு என்பது அவ்வளவாக இல்லை. யாரைப் படிக்க வேண்டுமென்பதே தெரியாது. அப்போது மதுரைக்கல்லூரியின்…

ரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்

1980-களின் இறுதியில் என்று நினைக்கிறேன். பினாங்கு அறிவியல்  பல்கலைக்கழகத்தின் ஏதோ ஒரு விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே சில நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ நாவலும் இருந்தது. ரெ.கா பெயரைப் பார்த்தவுடன் அந்நாவலை வாங்கிக்கொண்டேன். விலை மூன்று ரிங்கிட். அதனை இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம்…