Category: பயண அனுபவம்

பயணயாத்திரை

நான் ஒரு பயண விரும்பி. தனியாகவும் நண்பர்களுடனும் ஏராளமான இடங்களுக்குச் சென்றுள்ளேன். பயணங்கள், இடங்களைச் சார்ந்தது மட்டுமல்ல; மனிதர்களையும் உட்படுத்தியது. அப்படி எவ்வித அறிமுகமும் இல்லாத மனிதர்களோடு பயணம் மேற்கொள்ள விரும்பி பாத யாத்திரை ஒன்றில் கலந்துகொண்டேன். மார்ச் மாதம் 25 முதல் 28 ஆம் திகதி வரை பஹாங் மாநிலத்தில்  எழுந்தருளியிருக்கும் மாரான் மரத்தாண்டவர்…

கடவுளும் கலையும்

குளியலை முடிப்பதற்குள் சனிரா பஜ்ராச்சார்யாவிடமிருந்து (chanira bajracharya) இரண்டு முறை அழைப்புகள் வந்திருந்தன. விரைவாகக் குளியலை முடித்து, மிகுந்த உற்சாகத்துடன் அவளுக்கு மீண்டும் அழைத்தேன். அவளின் குரலை முதன் முறையாகக் கேட்கப் போகிறேன்; எந்த இடையூறும் இருக்கக் கூடாது என உறுதி செய்து கொண்டே தொலைப்பேசியைக் காதில் ஒத்திக் கொண்டேன். இரு முறையும் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.…

பச்சை நாயகி

நேபாள் என்றாலே எனக்குப் புத்தர்தான் நினைவுக்கு வருவார். நேபாளத்தில் புத்தர் பிறந்த இடம் லும்பினி. லும்பினி அதற்கு மட்டும் பிரபலம் அல்ல. பல நாட்டு புத்த நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பௌத்த மடாலயங்கள் லும்பினியில் உள்ளன. அங்குச் சென்றால், ஒவ்வொரு நாட்டிலும் பௌத்த மத வழிபாடுகள் எவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன என்பதைக் காணலாம். பெரும்பாலோர் புத்தர் வழிபாடு…

ஈயச் சுவடுகளில் இரண்டு நாள்

மலேசிய இந்தியர்களின் சஞ்சிக்கூலி வாழ்க்கை பெரும்பாலும் ரப்பர் தோட்டங்களில் புதைந்திருப்பதுபோல சீனர்களின் வாழ்க்கையைத் தேட ஈய லம்பங்கள்தான் பொருத்தமானவை. மலேசியத் தமிழ் இலக்கியங்களில் ரப்பர் காடுகளும் அதில் நிகழ்ந்த வாழ்வியல் சிக்கல்களும் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு ஈய லம்பங்கள் குறித்தோ அதில் சீனர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்தோ எளிய அறிமுகங்கள் கூட இல்லை என்றே…

புங் ஜாகோய்: குன்றும் குறுங்குழுவும்

சரவாக் பல இரகசியங்களைத் தன்னகத்தே வைத்து அங்கு வாழ்வோருக்கும் வருகை தரும் பயணிகளுக்கும் ஒரு விந்தையான நிலமாகவே இருந்து வருகிறது. சரவாக், சரவாக் என அடையாளம் பெறுவதற்கு முன்னர், அதாவது 1963 மலேசிய ஒப்பந்தத்திற்கு முன்பு (Perjanjian Malysia 1963) முன் போர்னியோ நிலப்பரப்பாக இருந்தது. இன்றும் உலகின் பல மூலைகளிலிருந்தும் இங்கு வரும் மக்கள்…

உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள்

ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி…

மட்டக்களப்பில் வல்லினம் 100

சில முறை தமிழகம் சென்று வந்திருந்தாலும் இலங்கை செல்லாதது மனதில் ஒரு குறையாகவே இருந்து வந்தது. சமீபத்தில் வெளியிட்ட ‘வல்லினம் 100’ குறித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இந்நூல் சென்று மலேசிய – சிங்கப்பூர் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற யோசனை வந்தது. அப்போதே அதற்கான திட்டமிடலும் செய்ய…

யாழ்ப்பாணத்தில் வல்லினம் 100

வல்லினம் இலக்கியக் குழு மேற்கொண்ட இலங்கை இலக்கியப் பயணத்தில் யாழ்ப்பாண நகரத்திலுள்ள நல்லூரில் வல்லினம்100 நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வல்லினக் குழுவினரும் யாழ்ப்பாண வட்டார வாசகர்களும் கலந்து கொண்டு வல்லினம் 100-இல் வெளிவந்த படைப்புகளைத் தொட்டுப் பேசி கலந்துரையாடினர். முதலாவதாக கிருஷ்ணன் நிகழ்ச்சியின் நெறியாளராகப் பொறுப்பேற்று வல்லினத்தின் தற்கால இலக்கிய நடவடிக்கைகளைத் தொட்டு…

கவிஞர் கருணாகரனுடன் ஒரு நாள்

இலங்கை பயணத்தின் மூன்றாம் நாள் திரிகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் கவிஞர் கருணாகரனைச் சந்திப்பதாக நவீன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வழியில் பல வரலாற்றுத் தடங்களையும் பார்த்துக் கொண்டு சென்றதால் நேரம் போதவில்லை. முல்லைத்தீவு இறுதிப்போரின் சிதிலங்களும், அவற்றுக்கு எங்கள் பயணத்தில் முழுமையாக பங்கெடுத்துக் கொண்ட ஓட்டுனர் நண்பர் திலிப் கூறிய விளக்கங்களும் மனதை…

கொழும்பில் வல்லினம் 100

கொழும்புக்கு வந்து சேர இரவு மணி 11 ஆகியிருந்தது. யாழ்ப்பணத்திலிருந்து தொடங்கிய பயணம் என்பதால் உடல் கடும் சோர்வடைந்திருந்தது. அன்றிரவு தங்குவதற்கான இடம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் காலை 11மணிக்கு ‘வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சி இருப்பதாக நவீன் ஏற்கனவே சொல்லியிருந்தார். பயணத்தின் போது கண்டி பேராதனை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய…