Author: ம. நவீன்

சோளகர் தொட்டி : வதையும் வன்முறையும்

‘சோளகர் தொட்டி’ குறித்து எழுத தடையாக வந்தமைவது எது என்ற கேள்வியை நான் இந்த வாக்கியத்தைத் தொடங்கும் போதும் கேட்டுப் பார்க்கிறேன். ஒருவேளை இந்நாவலை விவரிக்கத் தொடங்கும் போது உறுவி எடுக்க முடியாமல் விரவி கிடக்கும், அதன் அடர்த்தியான வாழ்வு ஒருவித தயக்கத்தைக் கொடுக்கலாமோ என்று தோன்றுகிறது. வெவ்வேறு சம்பவங்களைக் கொண்டிருக்கும் ஒரு பிரதியை விவரிக்க முனையும் போது சம்பவங்களைச் சொல்லி கதையை உணர்த்துதல் எளிது. ஆனால் ‘சோளகர் தொட்டி’ மானுட விரோதத்துக்கான எதிர்ப்புணர்வை வெவ்வேறு தொணியின் மூலம் அதன் ஆழம்வரை கொண்டு செல்ல முனைகிறது.

Continue reading →

இலங்கையில் ஏழு நாட்கள்…4

மறுநாள் காலையிலேயே கிழம்பினோம். தங்கும் விடுதியில் பசியாறை. ஏ.பஹாருடின் அன்று இரண்டு கோயில்களுக்கு எங்களை அழைத்துப் போகப் போவதாகச் சொன்னார். ஒன்று நாக பூசனி அம்மன் கோயில் மற்றது ஒரு சிவன் கோயில். நயினா தீவில் இருக்கும் நாக பூசனி அம்மன் கோயிலுக்குச் சென்று திரும்பவே அரை நாள் பிடிக்கும் என்பதால் சிவன் கோயிலுக்குப் போகும் திட்டத்திலிருந்து நானும் மணிமொழியும் விலகிக் கொண்டோம். அன்று மதியத்துக்குப் பிறகு இலக்கிய நண்பர்களைச் சந்திக்கத் திட்டம்.
Continue reading →

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு : பாலில் விழுந்த நஞ்சு

ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பே சிங்கப்பூரில் நடைப்பெறவிருக்கும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்த தகவல்கள் தெரியவந்தது. அதன் மையக்கருப்பொருள் ‘தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்’ என்று இருந்தது திருப்தி அளிக்கக்கூடியதாகவும் இருந்தது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சின் கீழுள்ள தேசிய கலைகள் மன்றத்தின் (National Arts Council) ஆதரவுடன் உலகத் தமிழ் எழுத்தாளர் விழாவை இவ்வாண்டு அக்டோபரில் நடத்துகிறது.
Continue reading →

இலங்கையில் ஏழு நாட்கள்…3

 

அ.யேசுராசாவுடன்...

ஏசுராசா என்றவுடன் என் நினைவுகள் வேகமாகச் செயல்படத்தொடங்கின. இலங்கை – ஏசுராசா என மனதில் எழுந்த குறிப்புகள் அவர் எனக்கு ஏதோ ஒருவகையில் அறிமுகமாகியிருந்தது  நினைவுக்கு வந்தது. ஆனால் சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. எனக்கு ஏசுராசாவைத் தெரியும். பெரிய சண்டைகாரர். யார் என்னவென்று பார்க்காமல் சண்டித்தனம் எல்லாம் செய்வார் என நினைவு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது. கொஞ்ச நேரம் மௌனமாகி வங்கியருகே நின்றிருந்தபோதுதான் எனக்கு தெரிந்த ஏசுராசா யார் என நினைவுக்கு வந்தது. அவர் ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ நாவலில் வரும் ஏசுராசன்.  அந்த நாவலிலேயே இப்படி ஒரு வரி வரும். ‘குஞ்சன் வயலில் ஊருப்பட்ட ஏசுராசன்கள் இருந்தபடியால் அவர்கள் வில்லங்கம் ஏசுராசன், காற்றாற்ற ஏசுராசன், நான்தான் ஏசுராசன் என அழைக்கப்பட்டனர்’
Continue reading →

இலங்கையில் ஏழு நாட்கள்…2

அநுராதபுரத்திலிருந்து காலையிலேயே யாழ்பாணம் கிழம்பினோம். நீண்ட பயணம். நான்கு மணி நேரம் என நினைவு. வவுனியா, புளியங்குளத்தைத்தாண்டி கிளிநொச்சியை அடைந்தபோது பேருந்து இராணுவத்தினரால் நிறுத்தி பரிசோதிக்கப்பட்டது. எங்களது சுற்றுப்பயணப் பேருந்து என்பதால் கடப்பிதழை மட்டும் சோதனைக்கு அனுப்பினார்கள். நான் சில நண்பர்களுடன் கீழே இறங்கினேன். பொட்டல் நிலம். ஆங்காங்கு இராவணுத்தினர் துப்பாக்கிகளோடு நின்று கொண்டிருந்தனர். உள்ளூர்வாசிகள் பேருந்திலிருந்து இறக்கப்பட்டு தரவாகச் சோதிக்கப்பட்டனர். சுமையுந்துகளின் பின்பக்கம் உயர்த்தப்பட்டுச் சோதிக்கப்பட்டன. அருகில் இருந்த கழிவறைக்குச் சென்றேன். கால்வைக்க இடம் இல்லை.

Continue reading →

இலங்கையில் ஏழு நாட்கள்…1

இலங்கையிலிருந்து திரும்பி இரண்டு வாரங்கள் ஆகின்றன. அப்பயணம் குறித்து எழுத பலமுறை தொடங்கியும் முடிக்க முடியாமல் அழித்தபடி இருக்கிறேன். ஒருவகையில் இது ஒரு நிறைவான பயணமா என்ற கேள்வி மனதில் எழுந்தபடி உள்ளது. பொதுவாகவே நான் திட்டமிடப்பட்ட பயணத்தளங்களுக்குச் செல்லும் பயணி அல்ல. சில நாடுகள் அவ்வாறு சுற்றுப்பயணிகளுக்கு முகம் காட்டும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. சட்டென நினைவுக்கு வருவது பாலித்தீவு. அத்தீவின் அனைத்துப்பகுதிகளுமே பயணிகளின் வசீகரப்பார்வையை உள்வாங்கிக்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவே அங்கிருந்த காலங்களில் தோன்றியது. அதனாலேயே அத்தீவு குறித்து எழுத ஒன்றும் இல்லாமல் இருந்தது. ஆனால் இலங்கை அப்படி அல்ல.

Continue reading →

இலக்கிய அ-ஒழுக்கவாதியும் கலாச்சார போலிசுமான கோ.முனியாண்டி – கே.பாலமுருகன்

மலேசிய இலக்கிய ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் அ-ஒழுக்கவாதி கோ.முனியாண்டியின் என் கடிதத்திற்கான எதிர்வினையை, மன்னிக்கவும் வசை கூட்டங்களை வாசிக்க நேர்ந்தது. ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சார்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களையும் நாட்டுக்குள் வருபவர்களையும் சிறுநீர் பரிசோதனை செய்து அதனை உறுதி செய்துகொள்வார்கள். இது உள்நாட்டு சட்டத்திற்குக் கீழ் வரையறுக்கப்பட்ட சட்டமாகும். கோ.முனியாண்டியின் என் ஒழுக்கத்தின் மீதான கிண்டலைப் படிக்கும்போது எனக்கு அவரை அடுத்தவர்களின் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்த்து அவனை நிர்ணயம் செய்யும் ஒரு போதைப்பொருள் தடுப்பு பிரிவினரைப் போலவே தோன்றியது. கோ.முனியாண்டி யார் யார் என்னென்ன செய்கிறார்கள் எங்கெல்லாம் ஒழுக்கத்தை மீறுகிறார்கள் என்பதைக் கவனமாக கடந்த 50 ஆண்டுகள் பரிசோதித்து ஒரு கலாச்சார அதிகாரியாகப் பணியாற்றியமைக்கு என் வாழ்த்துகள். தொடருங்கள், எனகொன்றும் பிரச்சனை இல்லை.

Continue reading →

கடிதம்: மண் பொம்மை

திரு நவீன் அவர்களுக்கு,

நான் ராமனின் நிறங்கள் தொடர்பான விவாதங்களை தொடர்ந்து படித்து கொண்டு வருகின்றேன், அது தற்பொழுது வாக்கு வாதத்தில் வந்து முடிந்து இருக்கின்றது, நமது தொடர்புகள் மிக நீளம் என்றாலும் எனக்குள் நாம் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்ற உணர்வு எப்பொழுதும் இருக்கும், அந்த உணர்வில்தான் இப்பொழுது இதை எழுதுகிறேன், எனக்கு தெரிந்த வரை நமது தமிழர் வரலாற்றில் தமிழ் புலவர்கள் எத்தனையோ பேர் நமது வாழ்கை முறைமைகளையும் நமது மரபுகளையும்,பண்பாடுகள் பழக்க வழக்கங்கள்,மருத்துவ முறைகள்,இல்லற நெறிகள்,நமக்கு சொல்லி விட்டு தமிழுக்காக வாழ்ந்து மறைந்தார்கள், அந்த காலத்தில் ஒவொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது மன ஓட்டத்தை அவர்களது தமிழ் புலமையில் படைத்தார்கள், அவர்கள் பயணிக்கும் இடம் வேறாக இருந்தாலும் முடியும் இடம் ஒன்றாகத்தான் இருந்துள்ளது, தமிழுக்காக ஒரு நல்ல பணியை செய்கின்றோம் என்பதுவே அது. தற்காலதில் தமிழ் பற்றாளர்கள் என்று உங்களை போன்றவர்களை நினைத்து பெருமை படும் இந்த நேரத்தில் இது போல  போன்று வாக்கு வாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை என்றே தோன்றுகின்றது.சம்பந்தமே இல்லாமல் இதில் எங்கு வந்தது இந்த கருப்பு பிரச்சினை, நான் உங்கள் எதிமரையாலரை  பார்த்தது இல்லை, அனால் அவரும் கருப்பு கலந்த நிறமாகத்தான் இருப்பார் என்பது எனது கற்பனை,அவர் உருவாக்கிய மண் பொம்மை நன்றாக உள்ளது என்று அவருக்கு தோன்றும் ஆனால் அதை  வாங்கி உபயோகபடுத்த நினைபவனுக்கு அதன் உண்மையான தன்மை இந்த பொம்மையில் கை கொஞ்சம் நீளமாக உள்ளது  வடிவம் சரி இல்லை, இதை பார்க்கும்பொழுது எனக்கு பொம்மையாகவே தெரியவில்லை என்பது புரியும் என்று அவருக்கு புரியவில்லை. நீங்கள் இந்த விவாதத்தை இனியும் தொடராமல் நமக்கே உரிய பெருந்தன்மையுடன்  இதை இத்துடன் நிறுத்தி விட்டு வேறு எதாவது ஆரோக்கியமான் தொகுப்புகளை வெளியிட வேண்டுமென்று வேண்டுகின்றேன். Continue reading →

கறுப்பனாக இருப்பதின் பிரச்சனைகள்: கோ.முனியாண்டி

இலங்கையிலிருந்து திரும்பிய களைப்பு இன்னமும் தீரவில்லை. காலம் தாழ்த்தியே கோ.முனியாண்டியின் எதிர்வினைகள் கண்ணில் பட்டன. பொதுவாகவே எதிர்வினைகளையும் மாற்று கருத்துகளையும் வரவேற்பவன் நான். தொடர்ந்த உரையாடல்கள் மூலமாக மட்டுமே ஒரு சமகால அரசியல் சூழ்நிலையை பல்வேறு கோணங்களில் காண முடியும்; முடிந்திருக்கிறது. துரதஷ்டவசமாக மலேசியாவில் மாற்று கருத்துகளை பலரும் விரும்புவதில்லை. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் கோ.முனியாண்டி.
Continue reading →