
எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். ம.நவீன் எழுதியுள்ள ‘மண்டை ஓடி’ சிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு என்று கூறுவதற்கான கூறுகளைக் கொண்டிருக்கிறது. தொகுப்பில் எட்டுக் கதைகள் இருக்கின்றன. கொள்கைகளை, கோட்பாடுகளை, தத்துவங்களை, முழக்கங்களை முன்னிருத்தி எழுதப்பட்ட கதை என்று ஒன்றையும் சொல்ல முடியாது. எளிய மனிதர்களுடைய வாழ்வில் அன்றாடம் நிகழும் சில கணங்களை இக்கதைகள் காட்சிப்படுத்தியுள்ளன. மனிதர்களுடைய வலியை, காயத்தை, கண்ணீரை, இயலாமையை, மேன்மைகளை, கீழ்மைத்தனங்களை, முழக்கமாக இல்லாமல் வாழ்க்கை அனுபவமாக எழுதப்பட்ட கதைகள்.
Continue reading →