“நீங்க பாத்தது உண்மையில பேச்சியம்மனையா? கதைய அப்படி முடிச்சா லாஜிக் இடிக்கும் டாட்.” இதோடு நூறாவது தடவை கேட்டிருப்பான். அதைக் கதை என செல்வம் சொல்வதே எனக்குக் கடும் கோபத்தை மூட்டியது. நான் ஒன்றும் பேசவில்லை. வார்த்தைகள் ஏதும் தடித்துவிட்டால் குலதெய்வத்தைப் பற்றிய எந்தப் பதிவும் இல்லாமல் போய்விடலாம். என்னைப்போலவே கோபக்காரன்.
நிமிர்ந்து பொன்னியின் படத்தைப் பார்த்தேன். கடந்த தீபாவளிக்கு இரண்டு கால்களும் இருக்கும்போது துடைத்தது. கனகாம்பர மாலை காய்ந்து பழுப்புச் சங்கிலியாகத் தொங்கிக்கொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் அவளுக்குக் கடைசி மாலையாக இருக்கலாம். செல்வம் என் படத்தைப் பொன்னிக்குப் பக்கத்தில் மாட்டிவைத்தாலே பெரிய கொடுப்பினைதான். நினைவு வந்தால் பார்த்துக்கொள்ள படங்களைக் கைப்பேசியில் சேகரிக்கும் தலைமுறை அவன். நான் நினைவுகள் உருவாகப் படங்களைச் சுவர்களில் மாட்டிவைப்பவன்.
Continue reading →