லீனா மணிமேகலை மலேசியாவுக்கு வருகிறார் என அறிந்தப்பின் பல்வேறு விதமான ஆலோசனைகளும் எதிர்ப்புகளும் முணகல்களும் காதுகளுக்கு எட்டவே செய்தன. இது எனக்கு பழக்கமானதுதான். என்னளவில் நான் ஒருவரை அழைக்க தனிப்பட்ட காரணங்கள் இருப்பதில்லை. மலேசிய கலை இலக்கிய உலகுக்கு அவர்களின் வருகை ஏதோ ஒருவகை மாற்றத்தை உருவாக்கும் என்றே இப்பணியைத் தொடர்ந்து செய்கிறோம். ஆனால், அப்படி அழைக்கப்படுபவர் அனைவருமே அன்புக்குறியவர்கள்.
கட்டுரை/பத்தி
கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள் – 2
சிங்கையிலிருந்து புறப்பட்ட அன்றுதான் லீனாவும் அந்த தவறை கவனித்தார். சூழல் பரபரப்பானது. அவர் சிங்கை வந்து சேரும் நேரம் மாலை ஆறு. எனவே அதற்குப்பின்பே விமான டிக்கெட் போட வேண்டும். ஒரு உணவகத்தில் அமர்ந்தேன். மீண்டும் டிக்கெட் போட்டபோதுதான் நிம்மதி. முதலில் இரவு 11 மணிக்குப் போடலாமா என யோசித்தோம். மூன்று மணி நேரம் காத்திருப்பதா என யோசித்து ஒன்பது மணிக்கு போட்டேன்.
கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள்
கடந்த ஆண்டு இறுதியில் வல்லினம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டோம். தாஜ் கார்ட்னில் அந்தக் கூட்டம் நடந்தது. அதில் முக்கியமாக மாற்று சினிமா அல்லது ஆவணப்படம் தொடர்பான சிந்தனைகளை இளம் தலைமுறை இயக்குனர்களிடம் விதைப்பதாய் எங்கள் திட்டம் இருந்தது. லீனா மணிமேகலை அடுத்த ஆண்டு வந்துகலந்துகொள்வார் என நான் முடிவெடுத்துக்கூறியபோது நண்பர்கள் அனைவரும் சம்மதித்தனர். ஆனால் அதுவரை லீனாவிடம் முன் அனுமதியோ அவரது கால அட்டவணையையோ கொஞ்சமும் சோதிக்கவில்லை.
நாத்திகம்; பொதுவுடமை; மற்றும் போலிகள்
இன்று காலையில் ஒருவர் வீட்டுக்கு மணிமொழியுடன் சென்றிருந்தேன். பறை இதழ் கேட்டிருந்தார். 50 வயதைக் கடந்த பெண்மணி. “எனக்குத் தெரியும் தம்பி. நீங்க தீபாவளியெல்லாம் கொண்டாட மாட்டீங்க. எம்பையன்தான் சொல்வான். கம்ப்யூட்டர்ல உங்கள படிப்பான். ஆனா பாருங்க நம்மால அது முடியாது. பெருநாள் வந்தாதான் சொந்தங்களையெல்லாம் பார்க்க முடியுது. அப்புறம் நான் நல்லா சாமியெல்லாம் கூம்பிடுவேன்” என்றார் .
பெண் எழுத்து
இலக்கியச் சர்சைகள் பொதுவாகவே இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. ஒன்றாவது சர்ச்சையின் சாரம் உள்ளடக்கியுள்ள மையத்தை நோக்கியதாக விவாதங்களைத் தொடர்வது. மற்றது, சர்ச்சையில் ஆங்காங்கு நீண்டிருக்கும் வெகுசன கயிறுகளைப் பிடித்துக்கொண்டு, மையத்தை விட்டு மற்றவற்றையெல்லாம் சர்ச்சைப் பொருளாக்கி கோஷம் எழுப்புவது. பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இரண்டாவது நிலைக்குதான் கிராக்கி அதிகம். காரணம் அப்போது போடும் கோஷம் ஒரு கூட்டத்தின் குரல்களோடு இணைந்திருக்கும். அது பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அதுபோன்ற கோஷங்கள் எழுப்ப அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. எதையும் வாசிக்க வேண்டியதும் இல்லை. ஆனால் பொது பார்வையில் அந்தக் கூச்சலும் சர்ச்சையின் ஒரு பகுதியாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு கவனம் பெறும்.
“வல்லினம் மஞ்சள் பத்திரிகை” – பெ.ராஜேந்திரன்
தயாஜியின் கதை சர்ச்சையானப்பின்னர் பலரும் பலவித கருத்துகளைச் சொன்னாலும் அதில் எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் சொன்னது மட்டும் மிக அர்த்தம் வாய்ந்தது. “வல்லினம் மஞ்சள் பத்திரிகைபோல” நடத்துப்படுவதாகச் சொல்லியிருந்தார். நல்லக் கருத்துதான். அந்த நிமிடத்திலிருந்து ராஜேந்திரனிடம்தான் இனி ஓர் இதழை எப்படி நடத்துவது என பயிற்சி பெறலாம் என முடிவெடுத்திருந்தேன்.
காதல், வல்லினம், பறை மற்றும் நாங்கள்…
நான் நண்பர்களுடன் இருக்கும் போது அதிக உற்சாகம் அடைபவன். இதழியல் தொடர்பான எவ்வித தொடக்கமும் இல்லாத போதே எனக்கு நண்பர்கள் ஆனவர்கள் ஓவியர் சந்துருவும் பூங்குழலியும். மாற்றுக்கருத்துகளால் சிவம் எதிரியாக இருந்து நண்பரானவர். எங்களிடம் அப்போதெல்லாம் பெரிய கனவுகள் இல்லாத போதும் இலக்கியம் தொடர்பான நிறைந்த ஆர்வம் இருந்தது. பின்னாளில் இந்த ஆர்வம்தான் ‘காதல்’ இதழ் தொடங்க உதவியாக தூண்டுகோளாக இருந்தது.
பப்பிகள்
நாய் வளர்ப்பது பற்றி எங்கள் குடும்பத்தினர் யோசித்தது முதன் முதலாக செட்டிக்கம்பத்துக்கு வீடு மாற்றலாகி போனப்போதுதான். ஏற்கனவே இருந்த கம்பத்துவீடு பக்கத்து வீடுகளோடு ஒட்டி இருக்கும். உலக நடப்புகள் அனைத்தையுமே அவரவர் வீட்டில் இருந்தபடி கொஞ்சம் வேகமாகக் கத்தி பேசியே பகிர்ந்துகொள்ள வசதி இருந்தது. திட்டுவதென்றாலும் அப்படித்தான். நேரிடையாகச் சென்று வரிந்துகட்டி வருவதெல்லாம் அப்பகுதியில் குறைவுதான். இன்று ஒரு நாட்டில் இருந்தபடியே மற்றொரு நாட்டை ஏவுகணைகள் மூலம் தாக்க முடியும் என்கிறார்கள். அந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்ததே எங்கள் கம்பம்தான். வீட்டில் இருந்தபடியே திட்டித்தீர்க்கலாம். பாதுகாப்பும் கூட.
ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்!
12 ஜூலையில் க.பாக்கியம் ஏற்பாட்டில் ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுகவிழா நடந்தது. அந்த நிகழ்வில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரனும் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விடயங்கள் விவாதத்துக்குறியதாகச் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்ததன. அதன் எதிரொலியாக ராஜேந்திரன் மன்னிப்புக்கேட்கும் வரை எழுத்தாளர் சங்க நிகழ்வுகளைப் புறக்கணிப்பது என இளம் தலைமுறை எழுத்தாளர்கள் முடிவெடுத்தது வரவேற்புக்குறியது. அதிலும் கடந்த வருடத்தில் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 19 பேரில் கே.பாலமுருகன், தயாஜி, அ.பாண்டியன், சுதந்திரன் போன்றவர்கள் இச்சூழலை எதிர்க்கும் முகமாக தங்களுக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கீகாரம் தேவை இல்லை எனக்கூறியுள்ளது நடப்பு இலக்கியச் சூழலின் மேல் நம்பிக்கையைப் பாய்க்கிறது.
முட்டாள் மனங்களின் மூன்று கேள்விகள்!
அயல்நாட்டில் தமிழன் போரிட்டால் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு ‘தமிழன்டா’ என வெட்டிப்பெருமை பேசி, தனது நாட்டு பிரச்னைக்குத் தொடை நடுங்கும் தமிழர்களிடம் இவ்வாறான ஒரு தொணியில்தான் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது.

